இலங்கையில் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை புதுப்பித்தல், நீடித்தல் உள்ளிட்டவற்றுக்கான கட்டணம் அதிகரித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, குறித்த அதிவிசேட வர்த்தமானி மூலம் சாதாரண மற்றும் ஒரே நாள் சேவையின் கீழ் வரும் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை
திருத்தியமைத்துள்ளார்.
இதன்படி, புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்கள், ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே
உள்ள வாகன
ஓட்டுநர் உரிமத்தை புதிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவதற்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக