தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹிந்தகல எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று காலை கண்டி வீதியில் ஹிந்தகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதினாலேயே இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் கனரக வாகனத்தில் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர், இரத்தினபுரி புதிய நகர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் எனவும், கனரகத்தின் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக