துணுக்காய் வீதியில் மாங்குளம் மூன்றுமுறிப்புச் சந்திப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது 15 வயது மகன் படுகாயமடைந்தார்.
மகனை பாடசாலைக்கு ஏற்றிச்சென்ற வேளையில் வீதியோரமாக தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பாடசாலை மாணவனின் நிலை
கவலைக்கிடமாக உள்ளது.
மேற்படி இவ் வீதியில் கடந்த இரண்டு வாரகாலத்துள் வீதிவிபத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக