ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஆசிரியர்மாணவியின் நண்பி மீது காதல்! மாணவியை கடுமையாக தாக்கினார்

கெக்கிராவ, கொடாகல, பிரேமரத்ன வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி மீது குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவியின் தலை மற்றும் முகத்தில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நேற்றைய தினம் இந்த மாணவி சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மாணவி தம்புள்ளை, பெல்வெஹேர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான மாணவியின் நண்பியுடன் குறித்த ஆசிரியர் காதல் தொடர்பினை மேற்கொள்வதற்கு முயற்சித்துள்ளார். இந்த யோசனையை மாணவியின் நண்பி நிராகரித்துள்ளார்.
அவர் அவ்வாறு நிராகரிப்பதற்கு காரணம் தாக்குதலுக்குள்ளான மாணவி என சந்தேகித்த ஆசிரியர், வகுப்பறையில் இருந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே அழைத்து சென்று இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் இந்த மாணவி மயக்கமடைந்த நிலையில், வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதும் பெற்றோர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த திருமணத்தில் தோல்வியடைந்த 33 வயதுடைய ஒருவராகும்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.