திங்கள், 26 செப்டம்பர், 2016

சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் நீரின்றி வறட்சியால் வாடும் இலங்கை மக்கள்?

நாட்டின் பல மாவட்டங்களில் தற்போது நிலவிவரும் வறட்சிக் காலநிலை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலநறுவை மாவட்டமே வறட்சிக் காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று யாழ்ப்பாணம், திருகோணமலை வவுனியா, அனுராதபுரம், அம்பாறை  உள்ளிட்ட பல மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் நீரின்றி பெரிதும் சிரமபப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கிணறுகள் மற்றும் நீர் மூலங்கள் வற்றியிருப்பதால் குடிநீர் பிரச்சினையையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். வடமத்திய மாகாணத்தில் மக்களுக்கு பௌசர்கள் மூலம் தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு 
வருகின்றது.
இதேவேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் பொதுமக்களுக்கான நீர் விநியோகத்தில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சபை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும் மக்கள் வெயில் கொடுமை தாங்கமுடியாதும், நீரின்றியும் வாடிப்போயுள்ளனர் என பிரதேச வாசிகள் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.