செவ்வாய், 8 செப்டம்பர், 2026

நாட்டில் பெருமளவு போதைப்பொருள்களுடன் இருவர் கைது

நாட்டில்  சுமார் ஐந்து கோடி பதின்மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான 'குஷ்' மற்றும் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த 
இரண்டு வெளிநாட்டு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய இரண்டு தாய்லாந்து நாட்டவர்களாவர். இவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் இறைச்சி வெட்டுபவர்களாகப் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) அதிகாலை 12.00 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு
 வந்து சேர்ந்துள்ளனர்.
இதன்போது வருகை முனையத்தில் அறிவிப்பதற்கு எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் 'பசுமைப் பாதை' (Green Channel) வழியாகப் போதைப்பொருள் தொகையைக் கடத்திச் செல்ல
 முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் இவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களின் இரண்டு பயணப் பைகளுக்குள் இருந்த விட்டமின் அடங்கிய 16 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் 'குஷ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக 'திராட்சைப் பசை' போன்று வெளிப்புறத்தில் தோற்றமளிக்கும் வகையில் பொலித்தீன்களில் சுற்றித் தயாரிக்கப்பட்டிருந்த 641 கிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையையும் அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சிறீதரன் எம்.பி யாழ். ஆயருடன் . முக்கிய கலந்துரையாடல்

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை,   நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் திங்கட்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் , பயங்கரவாதத் தடைச்சட்டம்  
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு, வவுனியாவில் முன்னெடுக்கப்படுவதாகக் 
கூறப்படும் சிங்களமயமாக்கல் திட்டமான 
கீழ் மல்வத்து ஓயா திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக,  தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

துரித கெதியில் யாழில்.முன்னெடுக்கப்படும் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள்

யாழ்  மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
 வருகின்றன.
இதன் அடிப்படையில், கந்தரோடை குளம், அராலி  பாலத்துக்கு அண்மையில் உள்ள வழுக்கை ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத்
 தேக்கும் செயற்றிட்டம் மற்றும் கற்குளம் – அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் கிடைக்கக்கூடிய நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைமையை 
உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
எல் நோ தாக்கத்தினால் இம்முறை யாழ்ப்பாணத்திற்கு 
அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் , மழை காலம் ஆரம்பிக்க முதல் , குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 7 செப்டம்பர், 2026

நல்லூர் கோட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

யாழ், நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு-09-09-2026-அன்று விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
 அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியோரின் உடைமையில் ஐஸ் போதைப்பொருள்

இலங்கை கொட்டதெனியாவ, தொரொவ்வ பகுதியில் பேருந்துடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும்,
 அதன் பின்னால் இருந்து பயணித்தவரும் காயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
காயமடைந்தவர்களின் பயணப் பைகளை பரிசோதித்த போது அதிலிருந்து 350 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் 
மீட்டுள்ளனர். 
இதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
கைதானவர்கள் 21 மற்றும் 25 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
கொட்டதெனியாவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஸ்ரீலங்கன் விமான சேவை .ஜகார்த்தாவுக்கான விமான சேவைகளை ரத்துச் செய்துள்ளது

தற்போது கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே.07-09-2026. இன்று இயக்கப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது. 
இந்தோனேசியாவின் 'அனக் கிரக்கடாவ்' (Mount Anak Krakatau) எரிமலை சீற்றமடைந்ததால், அதிலிருந்து சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள் வானில் கலந்ததால் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதே இதற்குக் காரணமாகும்.
கொழும்பில் இருந்து ஜகார்த்தா செல்லவிருந்த UL 364 விமானமும், ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு வரவிருந்த UL 365 விமானமும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம்
 அறிவித்துள்ளது.
இதற்கிடையில், எரிமலை சாம்பல் மற்றும் சிலிக்கா கொண்ட பாறைத் துண்டுகள் வளிமண்டலத்தில் கலப்பதால் விமான
 இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குக் கடும் ஆபத்து ஏற்படக்கூடும் 
என்பதால், இந்தோனேசிய சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையால் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹத்தா (Soekarno-Hatta) சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை நோக்கிய மேற்கு வான் வழித்தடம் வழியாக மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து வந்த இரண்டு ஸ்ரீலங்கன் விமானங்கள், பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக நேற்று இரவு மாற்று வான் வழிகளுக்குத் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

ஆஸ்திரேலியா சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த நடவடிக்கை

தற்போது புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
விசா முறைகேடு, அதிக நிராகரிப்பு விகிதங்கள் மற்றும் படிப்பை முடிக்காமை ஆகியவை குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, மேலாண்மை (கற்றல்) பட்டதாரி பட்டயப் படிப்பில் புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சர்வதேசக் கல்வி மற்றும் மாணவர் விசா அமைப்புகளின் நேர்மை குறித்துக் கவலைகளை எழுப்பும் படிப்புகளை இடைநிறுத்த அல்லது ரத்து செய்ய, தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய அதிகாரங்களைப் பயன்படுத்தும் முதல் முடிவு இது என்று அல்பேனிய அரசாங்கம் 
கூறியுள்ளது.
BSB80120 என்ற பாடக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்ட இந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்களின் வெளிநாட்டு மாணவர்களுக்கான நிறுவனங்கள் மற்றும் படிப்புகளின் காமன்வெல்த் பதிவேட்டில் உள்ள பதிவு தானாகவே இடைநிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் அனுராதபுர மாவட்ட மக்களுக்கு காணிகள் வழங் கப்படும் என தெரிவிப்பு

. நாட்டில் கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டத்தில் பயிர்செய்கைக்காக அனுராதபுர மாவட்ட மக்களுக்கு காணிகள் வழங் கப்படும் என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தை அண்மித்த பகுதியில் வனவள திணைக்களத்தால் சுமார் 1650 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
“கீழ் அருவியாறு (கீழ் மல்வத்து ஓயா) நீர்பாசன திட்டம்”எனும் பெயரில் 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட நீர்பாசன திட்டமானது மீண்டும் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. 
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக கட்டப்படும் நீர்த்தேக்கத்திலிருந்து  மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளம் மற்றும் அகத்திமுறிப்பு குளங்களுக்கு நீர்வினியோகத்தை பரிபாலனம் செய்வது, நீர்மின்சாரத்தை பெறுவது,  மதவாச்சி, செட்டிகுளம் பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கல், மேட்டு நீர்பாசன வசதியை ஏற்படுத்தல் என்பன திட்ட நோக்கமாக சொல்லப்படுகிறது.
இந்த திட்டத்தினூடாக கட்டப்படும் அணையின் கீழ் வவுனியா மற்றும் அனுராதபுர மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் நீரேந்து பகுதிக்குள் உள்வாங்கப்படுகிறது.
குறிப்பாக வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 450 ஏக்கர் வயல் மற்றும் மேட்டுக்காணிகள் நீரேந்து
 பிரதேசத்திற்குள் செல்கின்றது.
இவ்வாறான சூழலில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கப்பாச்சி கிராமத்தை அண்மித்த பிரதேசத்தில் சுமார் 1650 ஏக்கர் வனப்பகுதியை மேற்படி திட்ட தேவைகளுக்காக விடுவிப்பதாக அறியக்கூடியதாக உள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


அமெரிக்காவின் அங்கீகரிக்கப் படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தற்போது அமெரிக்காவின் Eli Lilly மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ‘ரெடாட்ருடைடு’ (Retatrutide) என்ற புதிய எடைக் குறைப்பு ஊசி மருந்து, இதுவரை உலகின் எந்தவொரு நாட்டின் மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தாலும் மனிதப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படவில்லை.
தற்போது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இந்த மருந்தின் போலியான வடிவங்கள் ‘Reta’ என்ற பெயரில் பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த அங்கீகரிக்கப்படாத ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கண்காணிப்பு இன்றி இத்தகைய ஊசிகளைப் பயன்படுத்துபவர்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஊசிகளைப் பயன்படுத்திய சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், சிலர் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரித்தானிய சுகாதாரத்துறை உரிமம் இன்றி விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ‘ரெடாட்ருடைடு’ ஊசிகளைக் கைப்பற்றியதுடன், சட்டவிரோத உற்பத்தி மையங்களையும் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ரெடாட்ருடைடு மருந்து முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை நிறைவு செய்து, அமெரிக்காவின் FDA மற்றும் பிரித்தானியாவின் MHRA ஆகிய ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்று சந்தைக்கு வருவதற்கு 2027 முதல் 2028ஆம் ஆண்டு வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத எடைக் குறைப்பு ஊசிகளை இணையம் அல்லது கள்ளச்சந்தை ஊடாக வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை கடுமையாக எச்சரித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 5 செப்டம்பர், 2026

நாட்டில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகள் குறைக்கப்படவுள்ளன

நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில்,
 .05-092026.இன்று  நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை ரூ.5 குறைக்கப்படவுள்ளதாக உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுநாட்டில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை குறைப்புஎன்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இலங்கைக்கே கச்சத்தீவு :உரித்தானது என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கே   கச்சத்தீவு உரித்தானது  என  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் மக்களைத் திசைதிருப்புவதற்காகவுமே கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் மேலும் 
சுட்டிக்காட்டினார். 
 கச்சத்தீவு இலங்கையின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டது என்பதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லை.
சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு 
உட்பட்டதாகும்.
தமிழக அரசியல்வாதிகள் தங்கள்மீது எழுந்துள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், தங்களது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்கும் கச்சத்தீவு விவகாரத்தை 
மீண்டும் மீண்டும் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வரு இக்கோரிக்கைகளுக்கு பின்னால் எந்தவிதமான புதிய இராஜதந்திர அல்லது சட்டபூர்வ உண்மையும் இல்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் மின் வெட்டு தொடர்பில் உலா வரும் செய்தி எரிசக்தி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி

நாட்டில் சிலவேளை ஏதேனும் தடங்கள் ஏற்பட்டாலே தவிர தடையற்ற மின்விநியோகத்தை மேற்கொள்ள எந்த சிக்கலும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க
 உறுதியளித்துள்ளார்.
நொரோச்சோலையில் உள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தபோது அவர் இவ்வாறு கூறினார். 
நிலக்கரிப் பற்றாக்குறையால் மின்வெட்டு விதிக்கப்படலாம் என பரவிவரும் பொய்யான செய்திகளை விமர்சித்த அவர்,  2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் கூறினார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 4 செப்டம்பர், 2026

வாட்ஸ்அப் இந்தியாவில் கட்டணச் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது

அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் வியாழக்கிழமை இந்தியாவில் ஒரு கட்டணச் செலுத்தும் சேவையை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் தங்கள் வீட்டு உபயோக மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை இந்த மெசேஜிங் செயலிக்குள்ளேயே செலுத்த அனுமதிக்கிறது.
இந்தச் சேவை, முன்னர் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் என்று அழைக்கப்பட்ட பாரத் கனெக்ட் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனர்களை 30 பிரிவுகளில் உள்ள 22,722 கட்டணதாரர்களுடன் இணைக்கிறது. இவற்றில் மின்சாரம், 
எரிவாயு, தண்ணீர், ஃபாஸ்டேக், காப்பீடு, கிரெடிட் கார்டு நிலுவைகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்கள் ஆகியவை அடங்கும். கட்டணங்களை யுபிஐ மூலமாகவோ அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ
 செலுத்தலாம்.
முகப்புத் திரையின் மேலே உள்ள ரூபாய் ஐகான் வழியாக இதை அணுகலாம். அங்கு பயனர்கள் ஒரு பிரிவையும் கட்டணதாரரையும் தேர்ந்தெடுத்து, தங்கள் கணக்கு விவரங்களை உள்ளிடுவார்கள். பணம் 
செலுத்துவதற்கு முன், நிலுவையில் உள்ள தொகை உறுதிப்படுத்தலுக்காகக் காட்டப்படும். முன்னர் பணம் செலுத்தப்பட்ட கட்டணதாரர்கள், கட்டண முகப்புத் திரையில் பட்டியலிடப்பட்டுள்ளனர். மேலும், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனப் பல கணக்குகளை ஒரே கட்டணதாரரின் 
கீழ் வைத்திருக்க முடியும்.
மெட்டா (இந்தியா) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், இந்தியத் தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும், வணிக நிறுவனங்களுடன் பேசவும், குடிமக்கள் 
சேவைகளைப் பெறவும், மெட்ரோ டிக்கெட்டுகள் முதல் காப்பீடு வரை அனைத்தையும் செயலியை விட்டு வெளியேறாமலேயே வாங்கவும் வாட்ஸ்அப் ஏற்கனவே மிக எளிமையான வழியாக
 உள்ளது” என்றார்.
மேலும் அவர், “வாட்ஸ்அப்பில் ஒரு கட்டணத்தைச் செலுத்துவதை, ஒரு செய்தியை அனுப்புவது போல சிரமமற்றதாக மாற்றவும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வசதியைக் கொண்டு சேர்க்கவும் நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.
இந்த அறிமுகம் படிப்படியாக நடைபெறும் என்றும், அடுத்த சில வாரங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களைச் சென்றடையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
85 கோடிக்கும் அதிகமான பயனர்களுடன், இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. வாட்ஸ்அப் பே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ. 5,412.58 கோடி மதிப்புள்ள 74.6 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் 
ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் ரூ. 12,957 கோடி மதிப்புள்ள 167 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், யுபிஐ செயலிகளில் இது பதினொன்றாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வலிகாhமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் தொடரும் போராட்டம்

நாட்டில் வலிகாhமம்  வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான பொதுமக்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 20 ஆவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வலி. வடக்கு மக்கள் 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்களை மீளப்பெற முடியாமலே அகதி வாழ்வை
 தொடர்கின்றனர்.
1990 ஆம் ஆண்டு யூன் மாத காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால்  சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அப்பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் படையினர் வெளியேறாமல் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகவே பேணி
 வருகின்றனர்.
பல தசாப்தங்களாகக் கோரிக்கைகள் விடுத்தும் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நில உரிமையாளர்கள் தீர்மானித்திருந்தனர். அதற்கமைய, இன்றைய தினமும் இராணுவத்தின் கொமாண்டோ பங்களா முன்பாக ஒன்றுதிரண்ட மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு நீதிகோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுஎன்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் அலுவலகமான சிறீதர் தியேட்டறுக்குள் நீதி கேட்கப்போனவர்கள் கைது

இலங்கை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் தலைமை அலுவலகமான சிறீதியேட்டரினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அலுவலகத்தின் வரவேற்புப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாக ஈபிடிபி கட்சி தலைமை அறிவித்துள்ளது.
எனினும் முச்சக்கரவண்டி சாரதியொருவரை தாக்கிய ஈபிடிபியினரை முச்சக்கரவண்டியின் சாரதிகள் திரண்டுவந்து தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில்; முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக ஈபிடிபி கட்சி 
தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில், அலுவலகத்தின் வரவேற்பு பகுதியினுள் நுழைந்த இருவர், அடாவடியில் ஈடுபட்டதுடன் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்ட நிலையிலேயே சம்மந்தப்பட்டவர்கள் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக
 கூறப்படுகின்றது.
இந்நிலையில், இன்று மாலை அலுவலகத்திற்கு வருகைதந்த பிரதான சந்தேகநபரின் தாய் மற்றும் மைத்துனர் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் சந்தேகநபர்களை வழக்கில் இருந்து விடுவிக்க உதவுமாறும் லேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிடிபி கட்சி உறுப்பினர் ஒருவர் முச்சக்கரவண்டி சாரதியொருவரை தாக்கிய பின்னர் கட்சி அலுவலகத்தினுள் பதுங்கியிருந்த நிலையில் திரண்டு வந்த முச்சக்கரவண்டி சாரதியின் நண்பர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 3 செப்டம்பர், 2026

இதய நோய் இளம் வயதினரிடையே அதிகரிக்கும் அபாயம்

இதய நோய்  இன்றைய வேகமான நகர்ப்புற வாழ்க்கைமுறை, இளம் தலைமுறையின் உடல்நலத்தில் கணிசமான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 20 முதல் 40 வயதுக்குள் உள்ள வேலைக்குச் செல்வோர்களிடையே இதயநோய் அதிகரித்து வருவது கவலைக்குள்ளாக்கியுள்ளது. முன்பு 
வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என கருதப்பட்ட இதய பிரச்னைகள், இப்போது இளம் வயதினரிடமும் அமைதியாக வளர்ந்து. 
        வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றும் பலர், திடீர் 
இதயக்கோளாறுகள் அல்லது இதயநிறுத்தம் (sudden cardiac arrest) போன்ற கடுமையான நிலைகளுக்கு ஆளாகும்போதுதான் அவர்களுக்குள் இதயநோய் இருந்ததற்கான அபாயங்கள் வெளிப்படுகின்றன.
இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நகர்ப்புற வாழ்க்கையின் அழுத்தங்களாகும். நீண்ட நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து
 வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாமை, ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள், அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது, குறைந்த தூக்கம் மற்றும் 
அதிகமான மனஅழுத்தம் ஆகியவை இதயநோய்களுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக ஐடி மற்றும் கார்ப்பரேட் துறையில் பணிபுரியும் 
இளைஞர்கள் அதிக நேரத்தை கணினி முன் செலவிடுவதால், உடல் இயக்கம் குறைகிறது. இதன் விளைவாக, உடல் எடை அதிகரிப்பு, 
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் 
உருவாகின்றன.
சமீபத்திய சுகாதார தரவுகள் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் ஏற்படும் இதய நோய் தாக்குதல்களில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்டவை 40 வயதிற்குக் குறைந்தவர்களிடமே நிகழ்கின்றன. மேலும், 50 வயதிற்குக் குறைந்தவர்களில் 15 முதல் 20 சதவீதம் வரை திடீர் இதயநிறுத்தங்கள் பதிவாகின்றன
 என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இளம் தலைமுறையின் உடல்நிலையில் ஒரு பெரிய எச்சரிக்கை மணி எனக் கருதப்படுகிறது. இளம் வயதில் இதயநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் புகைப்பிடித்தல், மதுபானம் அதிகமாக அருந்துதல், மனஅழுத்தம், மரபியல் காரணிகள் மற்றும் உடல்நல பராமரிப்பில் அலட்சியம் ஆகியவை அடங்கும்.
இந்த அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியமாகிறது. இதற்காக மருத்துவத் துறையில் பல மேம்பட்ட பரிசோதனைகள் தற்போது அறிமுகமாகியுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று CT Coronary Angiography (CTCA) ஆகும். இது அறுவைசிகிச்சை 
தேவையில்லாத
 ஒரு நவீன இமேஜிங் பரிசோதனை. இதன் மூலம் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, பிளாக் சேர்க்கை மற்றும் கரோனரி 
ஆர்டரி நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். பாரம்பரிய கத்தீட்டர் ஏஞ்சியோகிராஃபியுடன் ஒப்பிடும்போது, இந்த CTCA பரிசோதனை வேகமானது, குறைந்த அபாயமுடையது மற்றும் நோயாளிகளுக்கு 
எளிதானது.
மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேனிங் மையங்களில் இந்த பரிசோதனையின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. 
கால்சியம் ஸ்கோரிங் CT ஸ்கேன்களில் 85 சதவீதம் உயர்வு, மேம்பட்ட
 இதய இமேஜிங் 
பரிசோதனைகளில் 36 சதவீதம் வளர்ச்சி மற்றும் 2025 ஆம் ஆண்டில் CT Coronary Angiography பரிசோதனைகளில் 30.6 சதவீதம் அதிகரிப்பு ஆகியவை இந்த மாற்றத்தை தெளிவாக காட்டுகின்றன. இது மக்கள்
 முன்கூட்டியே 
தங்களது உடல்நிலையை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர் என்பதற்கான சான்றாகும். இது, மக்களிடையே தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுவருவதை 
காண்பிக்கிறது.
அதுபோன்று,45 வயதிற்குக் குறைந்தவர்களை ஆய்வு செய்த ஒரு சமீபத்திய மருத்துவ ஆய்வு மேலும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்துகிறது. அந்த ஆய்வின் படி, 27.7 சதவீதம் பேருக்கு
 அறிகுறிகள் தெரியாத அத்தெரோஸ்க்ளிரோசிஸ் (atherosclerosis) இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் 8.2 சதவீதம் பேருக்கு கரோனரி ஆர்டரி நோய் இருப்பதும் தெரியவந்தது. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 
கால்சியம் ஸ்கோர் பூஜ்யமாக இருந்த சிலரிடமும் கூட அதிக அபாயம் கொண்ட பிளாக்கள் கண்டறியப்பட்டன. இது வெளிப்படையாக ஆரோக்கியமாக இருந்தாலும், உடலின் உள்ளே அமைதியாக நோய் வளர்ந்து கொண்டிருக்கலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது.
இந்த சூழலில், இளம் வயதில் வேலைக்குச் செல்வோர் தங்களது உடல்நலத்தை மிகுந்த பொறுப்புடன் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒழுங்கான உடற்பயிற்சி மேற்கொள்வது, சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது, போதுமான அளவு தூக்கம் உறுதி செய்வது மற்றும் மனஅழுத்தத்தை 
குறைக்கும் வழிமுறைகளை கடைபிடிப்பது ஆகியவை இதயநோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் மற்றும் மனநலத்தை
 மேம்படுத்த உதவுகின்றன.
அதுமட்டுமல்லாமல், உடல்நிலை பரிசோதனைகளை காலம்தோறும் மேற்கொள்வதும் மிக முக்கியமானது. குறிப்பாக குடும்பத்தில் இதயநோய் வரலாறு உள்ளவர்கள், சர்க்கரைநோய் அல்லது 
உயர் ரத்த அழுத்தம் 
கொண்டவர்கள் மற்றும் அதிகமான மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் தவறாமல் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். தேவையான இடங்களில் CTCA போன்ற நவீன பரிசோதனைகள் மூலம் இதய ஆரோக்கியத்தை முன்கூட்டியே மதிப்பீடு செய்வது, பெரிய பிரச்னைகளைத் 
தவிர்க்க உதவும்.
முடிவாக, இதயநோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே உரிய பிரச்னை அல்ல; அது இளம் தலைமுறையையும் தாக்கக்கூடிய அமைதியான அபாயமாக மாறியுள்ளது. அதனால், “எனக்கு எதுவும் ஆகாது” என்ற எண்ணத்தை விட்டு, விழிப்புணர்வுடன் வாழ்வது மிகவும் அவசியம். ஆரோக்கியமான
 வாழ்க்கை முறை
, முறையான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றின் மூலம் இதயநோய்களை முன்கூட்டியே தடுப்பது சாத்தியம். நம் உடல்நலமே நம் எதிர்காலம் என்பதால், அதை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


பாதுகாப்பு நிறுவனத்தைக் குறிவைத்து யேர்மனியில் தீ வைப்பு: இருவர் கைது

. யேர்மனியில் மியூனிக்கில் உள்ள ஒரு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அருகிலுள்ள கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் அரசியல் நோக்கம் இருக்க வாய்ப்புள்ளதா என புலனாய்வாளர்கள் விசாரித்து
 வருகின்றனர். 
மியூனிக்கில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் நடந்த தீ வைப்புத் தாக்குதலைத் தொடர்ந்து , பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் முயற்சியாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக பவேரிய மாநில குற்றவியல் காவல் அலுவலகம் (LKA) வியாழக்கிழமை தெரிவித்தது.
இதில் அரசியல் நோக்கம் இருக்க வாய்ப்புள்ளதா என புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாக எல்.கே.ஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அந்த செய்தித் தொடர்பாளர் உடனடியாக அடையாளம் காட்டவில்லை.
இருப்பினும், யேர்மன் இராணுவத்திற்கான தகவல் தொடர்பு அமைப்புகளைத் தயாரிப்பது உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனமான ரோட் & ஷ்வார்ஸின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் தீ வைக்கப்பட்டதாக பில்ட் என்ற பத்திரிகை 
செய்தி வெளியிட்டது.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் நடவடிக்கையை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதோடு, எங்கள் நிறுவன வளாகம் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தியதாக உள்ளூர் பொது ஒளிபரப்பு நிறுவனமான பி.ஆர். தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை நள்ளிரவு வாக்கில், மியூனிக்கின் பெர்க் ஆம் லைம் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தின் மீது ஒரு வாகனத்திலிருந்து பல தீமூட்டும் சாதனங்கள் வீசப்பட்டதாக காவல்துறை
 தெரிவித்துள்ளது. 
LKA-வின் கூற்றுப்படி, அருகிலுள்ள கட்டிட வளாகத்தில் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் இயங்கி வருகின்றனர்.
குறைந்தது ஒரு தீமூட்டும் சாதனமாவது தீப்பொறியை ஏற்படுத்தியது. அதை காவல்துறை அதிகாரிகள் அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டபோதிலும், பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மியூனிக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும், மற்றொரு தீமூட்டும் சாதனத்தை சிறப்புப் படைகள் செயலிழக்கச் செய்ய 
வேண்டியிருந்தது.
சிறிது நேரத் தேடுதல் வேட்டைக்குப் பின்னர், 28 வயதுப் பெண் மற்றும் 38 வயது ஆண் ஆகிய இருவரும் அருகிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பல்கேரியக் குடிமக்கள் என LKA அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இன்று வியாழக்கிழமை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


எரிபொருள் விலை யேர்மனியில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது

தற்போது  யேர்மனியில் பெட்ரோல் விலை புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளதாக ADAC வாகன சங்கம் வியாழக்கிழமை
 தெரிவித்தது.
நேற்றுப் புதன்கிழமை அன்று, மிகவும் குறைந்த விலை பெட்ரோல் வகையான E10-க்கு, வாகன ஓட்டிகள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சராசரியாக €2.215 செலுத்தியதாக ADAC தெரிவித்துள்ளது. இது ஒரு அமெரிக்க கேலனுக்கு சுமார் $9.73 என்பதற்குச் சமமாகும்.
தடைகள் எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், மார்ச் 2022-ல் முந்தைய சாதனை படைக்கப்பட்டது.
இம்முறை, ஈரானில் நடந்து வரும் போரினால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. நுகர்வோர் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக யேர்மனி , பெட்ரோல் மீது தற்காலிக எரிபொருள் வரிச் சலுகையை 
அமல்படுத்தியிருந்தது , ஆனால் அது யூன் மாத இறுதியில் காலாவதியாகிவிட்டது.
வசந்த காலத்தில் எட்டிய உச்ச விலையை விட கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருப்பதால், தற்போதைய பெட்ரோல் விலை மிகவும் அதிகம் என ADAC கருதுகிறது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 2 செப்டம்பர், 2026

ஆப்பிளின் iPhone 18 Pro அறிமுகம் செப்டம்பர் ஒன்பதாம் திகதி

ஆப்பிள் (Apple )நிறுவனத்தின் புதிய iPhone 18 Pro Series ஸ்மார்ட்போன்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை Apple.com மற்றும் Apple TV செயலி மூலம் நேரலையில் பார்வையிட முடியும்.
மேலும், புதிய iPhone 18 Pro Series போன்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், நேரடி விற்பனை செப்டம்பர் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் முன்னாள் மேயரின் மகன் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கொழும்பு மாநகர மேயர் மொஹமட் முஸாமிலின் 47 வயதுடைய மகன் மொஹமட் நிஷாம் ஜமால்தீன், நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டெம்பர் 02ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL-503 விமானம் மூலம் லண்டன் செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது குடிவரவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணையொன்றுடன் தொடர்புடையதாக அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயணத் தடை அமுலில் இருந்த நிலையிலும் நாட்டை விட்டு வெளியேற முயன்றதால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.