சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையிலான சந்திப்பு. 27-03-2024.அன்று பீஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்றது.
நட்பு, அமைதி, பரஸ்பர மரியாதை மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய ஐந்து கொள்கைகளின் கீழ் தொடர்ந்து செயல்பட இரு நாடுகளும்
ஒப்புக்கொண்டன.
இருதரப்பு உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர வினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்தக் கொள்கையின்படி செயல்படுவது இரு நாடுகளுக்கும் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது.
இலங்கைக்கு தேவையான திட்டங்களை முன்வைத்தால், சீனாவின் ஆதரவு விரைவில் வழங்கப்படும் என்றும் சீன ஜனாதிபதி உறுதியளித்தார். அரசியல் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை சீன ஜனாதிபதி உறுதியளித்தார்.
இலங்கையின் சுதந்திரம், பிரதேச ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக சீனா எப்போதும் நிற்கும் என சீன ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு மணித்தியாலம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது பிரதமரின் தந்தையின் தலைமுறை சீனாவுக்கு வழங்கிய
ஆதரவிற்கு சீன ஜனாதிபதி நன்றி தெரிவித்திருந்தார். இலங்கையில் பிரதமரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியும் ஏனைய
கட்சிகளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மேலும்
ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் சீன ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் கடன் மறுசீரமைப்பு வசதிகளை வழங்கியமைக்காக சீன ஜனாதிபதிக்கு பிரதமர் தனது நன்றியைத்
தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் விளக்கமளித்தார். பள்ளிக் கல்வி,
விவசாயம், சுகாதாரம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மதம் ஆகிய துறைகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார் என்று பிரதமரின் ஊடகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக