ரியாத்- செப்டம்பரில் மெக்சிகோவில் நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் சவுதி அரேபியா சார்பில் கலந்து கொள்வதாக பிரபல சவூதி மாடல் அழகி ரூமி அல்-கஹ்தானி அறிவித்துள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பதாக ரூமி சமூக ஊடக பதிவில் அறிவித்தார். மிஸ் யுனிவர்ஸ் 2024ல் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியா சார்பில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
அத்துடன், சவுதி கொடி மற்றும் ‘மிஸ் யுனிவர்ஸ் சவுதி அரேபியா’ என்று எழுதப்பட்ட தலைப்பாகையுடன்
போஸ் கொடுத்தார்.
ரியாத்தை பூர்வீகமாகக் கொண்ட ரூமி, மிஸ் அரபு அமைதி, மிஸ் பிளானட் மற்றும் மிஸ் மிடில் ஈஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
ரீமா அல்கஹ்தானி இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக