யாழ் கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட இராஜ கிராமம் பகுதியைச் சேர்ந்த மூவரினால் கரவெட்டி பிரதேச சபையினரால் குடிநீர் வழங்கி
வந்த சாரதி தாக்கப்பட்டமையை அடுத்து குறித்த மூவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், தொடர்ந்து
குடிநீர் வழங்குவதற்கு
பொலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கரவெட்டி
பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன்
தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை கரவெட்டி இராஜ கிராமம் பகுதியில் நடைபெற்றது. கரவெட்டி பிரதேச சபையால் உழவு இயந்திரத்தால் இராஜ கிராமம் மக்களுக்கு குடிநீர் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
குறித்த சேவையை இன்று வெள்ளிக்கிழமை வழங்க
முற்பட்ட போது குறித்த வீதியின் நடுவில் நின்று சாரதியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சாரதியும் அவரை விலகிச் சென்று தனது சேவையை நிறைவு செய்து வரும் போது, குறித்த நபருடன் இன்னும் இருவர் இணைந்து
சாரதியை தாக்கி கூரிய சிறிய ஆயுதத்தால் காயப்படுத்தி
சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், குறித்த சிலரின் தவறான
நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது
என்ற நோக்கில் குறித்த மூவரையும்
பொலீசார் கைது
செய்ய வேண்டும் எனவும், தொடர்ந்து சேவையை
வழங்குவதற்கு பொலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கரவெட்டி பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன்
தெரிவித்துள்ளார்.
இவரின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லியடி பொலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக