செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

நாட்டில் கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

நாட்டில் சஜீத் பிரேமதாஸ அமைச்சராக இருந்த காலத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க
 வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த மக்கள் சிலர் இன்றைய தினம் 04.08.2026 கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2018ம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டமானது.
இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் தமது நகைகளை அடகு வைத்து தங்களுடைய பணத்தில் ஓரளவு பூரணப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தற்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்படுடுகின்ற 
நிலையில் அதனுள் தங்களை உள்வாங்கி தமது வீட்டுத்திட்ட மிகுதி பணத்தை வழங்குமாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் கையளித்திருந்தனர்  
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் திருக்கோவிலில் நெல் கொள்வனவில் தராசு மோசடி அம்பலம்

நாட்டில் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் தராசு மோசடி, பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் அதிகாரிகளின் துரித தலையீட்டின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக எடைபோட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவர், தராசின் அளவீட்டில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பிரதேச சபை தவிசாளருக்கு தகவல் 
வழங்கியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தவிசாளர் மற்றும் அதிகாரிகள், பயன்படுத்தப்பட்ட தராசை பரிசோதித்தபோது அது தவறான அளவீட்டைக் காட்டியமை உறுதிப்படுத்தப்பட்டதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் குறித்த விவசாயிக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சுமார் ரூ.2.5 இலட்சம் நிதி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சபை தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நெல் கொள்வனவாளர்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நெல் விற்பனை செய்யும் போது 
பயன்படுத்தப்படும் தராசுகளின் அளவீடுகளை விவசாயிகள் கவனமாக சரிபார்க்குமாறும், தராசு மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் 067 226 5018 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவல் வழங்குமாறும் திருக்கோவில் பிரதேச சபை கேட்டுக்கொண்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நாடில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது 
என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
அறிவித்துள்ளது.
தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோகச் செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. அனைத்துக் கணக்கீடுகளின்படி,
 நடப்பு காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறைமையே தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலக்கரியின் தரம் தொடர்பான பிரச்சினைகளால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட 3,366 மில்லியன் ரூபாய் மேலதிக செலவை, மின் உற்பத்திச் செலவில் இருந்து நீக்க நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தாத வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இலங்கையில் டெங்கு நோய்த் தொற்றாளர்கள் பதிவு முதலிடத்தில் கம்பஹா மாவட்டம்

நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 86,386 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது. 
ஆகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் 1,034 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
மாதாந்திர தரவுகளின் பகுப்பாய்வின்படி, ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,978 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 21,533 நோய்த்தொற்றுகளும், மே மாதத்தில் 8,590 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
மாவட்ட அளவில், கம்பஹாவில் அதிகபட்சமாக 18,321 டெங்கு நோய்த்தொற்றுகள் (21.21%) பதிவாகியுள்ளன.
கொழும்பில் 17,101 நோய்த்தொற்றுகளுடன் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கண்டி (6,032), மாத்தறை (5,848) மற்றும் களுத்துறை (5,633) ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. 
 இதற்கிடையில், முல்லைத்தீவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


மசகு எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சரிவைச் சந்தித்துள்ளன.

ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் சுமார் 5% வரை சரிவைச் சந்தித்துள்ளன.
இதற்கமைய, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.77 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.37 அமெரிக்க டொலராகவும் வர்த்தகமாகி வருகின்றன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 340.13 ரூபா
ஜப்பானிய யென் 2.15 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 458.50 ரூபா
யூரோ 392.29 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 242.20 ரூபா
சுவிஸ் பிராங் 422.33 ரூபா
கனடிய டாலர் 243.37 ரூபா
கத்தார் ரியால் 93.99 ரூபா
குவைத் தினார் 1106.89 ரூபா
சவுதி ரியால் 91.86 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வட மாகாணத்தில் கட்டாக்காலி நாய்கள்: கருத்தடை சிகிச்சைக்கு 15 மில்லியன் ஒதுக்கீடு

நாட்டில் வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
 ..இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை 
செய்யப்படவுள்ளது.
யாழ். மாநகர சபை - 120 நாய்கள்  ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் - 5,216 நாய்கள் 
கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) - 350 நாய்கள்  
முல்லைத்தீவு மாவட்டம் - 750 நாய்கள்,
வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) - 1,170 நாய்கள்  
இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக, நாளைய தினம் திங்கட்கிழமை
 யாழ்ப்பாண மாநகர சபையிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
 

Blogger இயக்குவது.