செவ்வாய், 28 செப்டம்பர், 2021

நாட்டில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படை வெளிவந்த முக்கிய செய்தி

இலங்கை படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் இடையிலான போர்ப் பயிற்சி மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் இடம்பெற்று வருகிறது.நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு இடம்பெறுகின்றது.
குறித்த பயிற்சிகள் கடந்த 22ஆம் திகதிமுதல் வரும் 29ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் தெரியவருகின்றது.இதேவேளை எந்த நாட்டின் படையினர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தொடர்பில் எந்த விவரமும் வெளியாகவில்லை.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





திங்கள், 27 செப்டம்பர், 2021

இறுதிவரை இந்த ராசிக்காரர்கள் மட்டும் மன்னிக்கவே மாட்டார்களாம்.

ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்களாம்.அந்த குணம் கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம் வாங்க
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் அதிக பிடிவாத குணம் இருக்குமாம். அதனால் இவர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவ்வளவு எளிதில் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.ஆனால் இந்த ராசிக்காரர்கள் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவும் மாட்டார்கள். தனக்கு யாரேனும் தீங்கு விளைவித்திருந்தால், அவர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவும் மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களும் அவ்வளவு எளிதில் மற்றவர்களை மன்னிக்க மாட்டார்கள். இவர்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், இவர்களது குணம் இப்படி தான் இருக்கும் என்று நினைத்து, அவர்களது பழக்கத்தையே விட்டு விடுவார்கள்.அதோடு இந்த ராசிக்காரர்கள் முடிந்த அளவு பிரச்சனையை பெரிதாக்குவார்கள். அதுவும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் கூட, காதில் விழாதவர்கள் போன்று பிரச்சனையை பெரிதாக்க நினைப்பார்கள்
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு யாரேனும் ஏதேனும் கெடுதல் செய்தாலோ அல்லது துரோகம் செய்தாலோ, அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.எனவே இந்த ராசிக்காரர்களின் நண்பர்கள் அல்லது விருப்பமானவர்கள் சற்று கவனமாக நடந்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வெறும் மன்னிப்பை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. இவர்கள் சிறிய விடயங்களையும் தேவைகளையும் விட தனிப்பட்ட முறையில் எடுக்க முனைவார்கள்.இந்த ராசிக்காரர்கள் போட்ட திட்டத்தை யாரேனும் தடை செய்தாலோ அல்லது முக்கியமான விடயங்களை இவர்களிடம் சொல்வதற்கு மறந்தாலோ, இவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மன்னித்தது போன்று நடிப்பார்களே தவிர, உண்மையில் இவர்கள் மனதளவில் தனக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்க மாட்டார்கள்.இந்த ராசிக்காரர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவர்கள் செய்த தவறைச் சொல்லி காட்டி, எவ்வளவுக்கு எவ்வளவு பேசி மனதை காயப்படுத்த முடியுமோ, அவ்வளவு புண்படுத்தி, அவர்களை தலைகுனியச் செய்து விடுவார்கள்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

முக்கிய அறிவிப்பு கொழும்பு மாநகரசபை வாழ் மக்களுக்கு

கொழும்பு மாநகரசபை வரம்பிற்குள் உள்ள பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகர சபை
 அறிவித்தல் விடுத்துள்ளது.
கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷனி திசாநாயக்க (Roshanie Dissanayake) இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாநகரசபை வரம்பிற்குள் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு அவர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
சொத்தின் உரிமையைப் பாதுகாக்க நகராட்சி மன்றத்தில் சொத்து பதிவு செய்வது அவசியமானது என அவர் மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, கொழும்பு மாநகரசபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பதிவு பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 25 செப்டம்பர், 2021

கல்லேவ, கொன்வெவ பகுதியில் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி முதியவர் மரணம்

இலங்கை மஹவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் திடீரென முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது
மஹவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ, கொன்வெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக மஹவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியிலிருந் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு உயிரிழந்தவர் கொன்வெவ பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மஹவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 23 செப்டம்பர், 2021

முல்லையடி பகுதியில் சிறுவன் மீது நடந்த கடுமையான தாக்குதலில் பலத்த காயம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில்  22-09-2021.அன்றயதினம் 14 வயது சிறுவனொருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் அப்பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வந்த நபரொருவரே சிறுவனை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நபரொருவர் அண்மைக்காலமாக பளையில் வசித்து வரும் நிலையில் அவர் கிராமத்தில் உள்ள அநேகமானவர்களுடன் வீண் தகராறுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த நபர் மீது பளை பொலிஸ் நிலையத்தில் அதிகளவில் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலை குறித்த சிறுவனின் தாயாரை அந்த நபர் தகாத வார்த்கைளால் பேசிய நிலையில் மகன் ஆத்திரமடைந்து நியாயம் கேட்பதற்காக சென்ற போது கடுமையாக தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் சிறுவன் கழுத்தில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 22 செப்டம்பர், 2021

நாட்டு மக்களுக்கு மின்சார பட்டியலில் இணைக்கப்படவுள்ள புதிய வட்டி

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக மின் கட்டணத்தை செலுத்த முடியாத நுகர்வோருக்கு 24 மாதங்களுக்குள் தவணையில் முறையில் நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே 
தெரிவித்துள்ளார்.
மின் கட்டண நிலுவைத் தொகையை மாதாந்த தவணையில் செலுத்துவதற்காக வட்டி பணத்தொகையொன்று வசூலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் நாட்களில் வசூலிக்கப்படும் வட்டி பணம் குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 என அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் இலங்கை 
மின்சார சபை கடந்த
இரண்டு மாதங்களுக்காக 44 பில்லியன் ரூபாய் கட்டணங்களை அறவிடாமல் உள்ளது. மின் கட்டணத்தை செலுத்தக் கூடிய மக்களால் கூட மின் கட்டணம் செலுத்தப்படாததால் மின்சார சபை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 20 செப்டம்பர், 2021

ஜனாதிபதி இலங்கை புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

 

புலம் பெயர் தமிழர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapakse) அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களிடம் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 19-09-2021.அன்று
  ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை (Antonio Guterres) சந்தித்து கலந்துரையாடி போதே இதனை 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




Blogger இயக்குவது.