சனி, 7 ஜனவரி, 2023

இலங்கை தாமரை கோபுரத்திற்கு இதுவரை வந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தை எட்டியுள்ளன


இலங்கை தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இன்றுடன் ஐந்து இலட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளதாக
 தெரியவந்துள்ளது.
இந்த தகவலை தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாத்தறை பிரதேசத்தில் இருந்து 06-01-2023.அன்று வருகை தந்த 500,000 வது பார்வையாளரை வரவேற்று பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதுடன், அவருக்குப் கண்ணாடியில் அமைக்கப்பட்ட தாமரைக் கோபுர நினைவு பரிசிலும் வழங்கப்பட்டது.
பொதுமக்களின் பார்வைக்காக கோபுரம் திறக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.268 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், 4,083 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரைக் கோபுரத்தை பார்வையிட்டடுள்ளனர்.




வெள்ளி, 6 ஜனவரி, 2023

கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு 
அறிமுகமாகிறார்
அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ர
சிகர்களை சுண்டி
 இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.
ல வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் 
அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. 
அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.
இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இவர் தற்போது தன்னுடைய முன்புறம் தெரிய மாடர்ன் டிரஸ் அணிந்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்ககை சூடேற்றியுள்ளளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 5 ஜனவரி, 2023

யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த நிதி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

நிதி மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.நீதிமன்ற வழக்கு பொருட்களான உள்ள 70 பவுண் தங்கத்தை விடுவித்து தருவதாக கூறி 3,694,000 ரூபாவை தனது கணக்கிற்கு வைப்பிலிட வைத்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபர்களான இரு பெண்களும் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் இருவரும்.04-01-2023. நேற்று  பிற்பகல் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு 
அழைத்து வரப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 36 மற்றும் 38 வயதுடைய வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள்.05-01-2023. இன்று  பெதுருதுடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நெல்லியடி பொலிஸாரும் காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 4 ஜனவரி, 2023

பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய் வராதாம் மற்றும்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கையில் அதைச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது.இந்த முற்றிய நுங்கினை மண்ணில் புதைத்துவிட, 
சில நாட்கள் கழித்து 
அது முளை விட்டு பனை செடியாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைவிட்ட உடனே புதைத்த இடத்தில் தோண்டிப் பார்த்தால்,
 நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு. அதை வேரோடு பிடுங்கி வந்து, வேகவைத்து சாப்பிடலாம்.பனம் கிழங்கின் முனை 
கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் 
கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவில் ஒரு அடி வரை நீளமாக காணப்படும்.
பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
பனங்கிழங்கில் #இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைக் குணமாக்கும்.
பனங்கிழங்கில் பித்தம் சற்று அதிகமாக இருப்பதால், இதைச் சாப்பிட்டப் பின் சிறிது மிளகு மற்றும் பூண்டுகளை கலந்து சாப்பிட்டு விட்டால் பித்தம் சரியாகிவிடும்.
பனங் கிழங்கை தண்ணீர் விட்டு அவித்து பின்னர் மாவாக்கிப் புட்டு, கூழ் உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.மேலும் அவித்த கிழங்கை வெயிலில் உலர்த்திப் பெறப்படும் பொருளை புழுக்கொடியல் என்று கிராமப்புறங்களில் பயன்படுத்துகிறார்கள்.
இந்தப் புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். இது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியதாகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







செவ்வாய், 3 ஜனவரி, 2023

இனி வெளிநாட்டவர்கள் வீடு போன்ற சொத்துக்களை வாங்க தடை விதித்த கனடா

இந்தியர்கள் உள்ளிட்டோர் பணி நிமித்தம் காரணமாக அதிகம் விரும்பி செல்லும் வெளிநாடாக அமெரிக்கா இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கனடா நாடு இருக்கிறது. 
இங்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், 2025-ஆம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான வெளிநாட்டவரை குடியமர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளதால், கனடா செல்லும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் 
அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில் கனடா நாட்டில் நாட்டில் வீடு மற்றும் மனைகளின் விலை சமீப காலமாக உயர்ந்து வருவதோடு, குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான வாடகை கட்டணமும் அதிகரித்து வருகிறது.
இதனால் கனடா நாட்டு மக்கள் வீடு போன்ற சொத்துக்களை வாங்க முடியாமல் தவிப்பதோடு, வாடகை கொடுக்க முடியாமலும் 
கஷ்டப்படுகிறார்கள். 
இதன் காரணமாக தங்கள் நாட்டு குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு கனடா நாட்டு அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்து ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. 
அந்த சட்டத்தின்படி வெளிநாட்டு மக்கள் இனி கனடாவில் வீடு போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கனடாவில் சொத்துக்களை வாங்கி குவித்தனர். 
ஆனால் தற்போது இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் கனடாவில் சொத்துக்களை வெளிநாட்டு மக்கள் வாங்க முடியாது 
நிலை ஏற்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 2 ஜனவரி, 2023

பாணந்துறையில் மகளிர் கல்லூரிக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது

 பாணந்துறை நகரில் உள்ள பிரதான மகளிர் கல்லூரிக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தபெண் ஒருவரை வலானை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரான் பெண் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
அத்துடன் கைது செய்த பெண்ணிடமிருந்து 300 போதை மாத்திரைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
மேலும் பெண் பொலிஸ் அதிகாரியொருவர் பாடசாலை சீருடையுடன் போதை மாத்திரை வாங்குவதுபோல் குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று மாத்திரை வாங்குவதுபோல் பாசாங்குசெய்து சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 1 ஜனவரி, 2023

லண்டனில் சில நிமிடங்களில் கோடீஸ்வரனாகியுள்ள யாழ் இளைஞன்.

ஒரு சிறு உதவியினால் லண்டனில் சில நிமிடங்களில் கோடீஸ்வரனாகியுள்ள யாழ் இளைஞன்..!! வாழ்த்துக்கள்.!லண்டனில் நடந்த உண்மை சம்பவம்..!!வயசு முதிர்ந்த பாட்டி ஒருவர் கடைக்கு சென்று பொருட்களினை வாங்கி சென்ற போது வாங்கிச்சென்ற பை அறுந்து பொருட்கள் கீழே வீழ்ந்தது . இதனை பார்த்த யாழ்பாணத்தினை சேர்ந்த இளைஞன் வீழ்ந்த பொருட்களினை
எடுத்து அருகில் உள்ள கடைக்கு சென்று அந்த பொருட்களினை புதுப்பையில் போட்டு அந்த பாட்டியிடம் உங்கள் வீடு கடந்து தான் எனது வீடு தான் கொண்டு வந்து தருவதாக கூறி வீட்டு வாசல் வரை சென்று கொடுத்துள்ளார்.சிறு காலங்களாக அவ்வழியாக செல்லும் போது போக வரை சில நிமிடங்கள் வாசல்களில் நின்று கதைத்து சின்ன சின்ன உதவிகள் செய்து வந்துள்ளார்.
அதன் பின் வீட்டுக்குள் சென்று கதைப்பதும் கோப்பி போடுவதென்று சிறு சிறு உதவிகள் செய்துவந்துள்ளார். தனக்கு உதவி செய்ய யாரும் இல்லையென்றும் தந்து ஆதங்கத்தினை பாட்டி அவ்இளைஞனிடன் கூறியுள்ளார். அவ் இளைஞன் தேவையான உதவிகளினை நான் செய்து தருவதாகவும் ஏதாவது அவசர உதவிகள் என்றால் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள் என்று பல வருடங்களாக உதவி செய்து வந்துள்ளார்.
ஒரு நாள் அவ்பாட்டி தனது சொத்து மற்றும் பணம் எல்லாத்தையும் அவ் இளைஞனின் பெயரில் எழுதிவைத்து இறந்துள்ளார்.. அதன் பின் ஆவணங்கள் மற்றும் பணத்தினை சரி பார்க்கையில் அவ் இளைஞனின் பெயரில் இருந்ததை கண்டு பொலிஸ் அவ் இளைஞனை பொலிஸ் நிலையத்துக்கு வரவேண்டுமென்று கூறியவுடன்.தன்

நண்பனுடன் பொலிஸ்நிலையத்துக்கு சென்ற போது பாட்டி இறந்த தகவல் மற்றும் அனைத்து சொத்து மற்றும் பணங்கள் தனது பெயரில் எழுதிவைத்தது தெரியவந்துள்ளது.இப்போது அவ் இளைஞன் மிகப்பெரிய கோடீஸ்வரனாக வாழ்ந்து வருகின்றார். இது லண்டனில் 
நடைபெற்ற சம்பவம். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






Blogger இயக்குவது.