திங்கள், 13 செப்டம்பர், 2021

இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகின்றது பிரபல நாடு

ஐக்கிய அரபு இராஜியம் 13-09-2021.இன்று முதல் இலங்கை உட்பட சில நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை
  நீக்குகின்றது.
அதன்படி.13-09-2021. இன்று முதல் இரண்டு கோவிட் டோஸ்களையும் பெற்றவர்கள் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்குப் பிரவேசிக்கலாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 10 செப்டம்பர், 2021

உடுப்பிட்டிபகுதியில் காதல் ஜோடியால் இரண்டு பட்ட ஊர்

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.
உடுப்பிட்டியில்  08-09-2021.அன்று இரவு இந்த பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 
காதல் ஜோடியொன்று அண்மையில் எதிர்ப்பை 
மீறி திருமணம் செய்ததை தொடர்ந்து, சமூகங்களிற்கிடையில் மோதல் போக்கு ஏற்பட்டது.
உடுப்பிட்டியில் 08-09-2021.அன்று  இரவு உச்சமடைந்து
 இரண்டு சமூகத்தினரும் முட்டி மோதிக்கொள்ளும் நிலைமையேற்பட்ட போது, வல்வெட்டித்துறை பொலிசார் நிலைமையை சுமுகமாக்க முயன்றனர்.
எனினும்,நிலைமையை கட்டுக்கடங்காமல் போகவே
 இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. 09-09-2021.அன்று காலையில் இரண்டு சமூக பிரமுகர்களையும் 
பொலிசார் அழைத்து பேசி, நிலைமையை 
சுமுகமாக்கியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 8 செப்டம்பர், 2021

எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் மன்னார் கடற்பரப்பில் லாபம் பெறலாம்

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுனமன்றில் நேற்று இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 மில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 மில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ள கனியவளங்கள் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டதுடன் இந்த சட்ட மூலத்துக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டது.
இலங்கை கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கனிய வளங்கள் ஆய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதன் மூலம் அந்த நடவடிக்கைகளை முறைமைப்படுத்தும் நோக்கிலான இந்த சட்ட மூலத்தை அரசின் முக்கிய விடயமொன்றாக கருதி நாடாளுமன்றத்துக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் 
தெரிவித்தார்.
மன்னார் கடற்பரப்பிலுள்ள எரிவாயுவினால் மாத்திரம் நுரைச்சோலை மின்சக்தி நிலையத்தை 120 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும், அங்கு காணப்படும் எண்ணெயின் மூலம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 143 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கம்மன்பில இதன்போது குறிப்பிட்டார்.
எமது அண்டைய நாடான இந்தியா 1940 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அண்மித்த கடலிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபட்டதுடன், பல்வேறு விடயங்கள் காரணமாக இலங்கைக்கு அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும், இது
 தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலை அடுத்து இதற்கான பல கரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கையில் எண்ணெய் ஆய்வுக்காக உலகிலுள்ள பாரிய நிறுவனங்கள் முன்வரவில்லை எனவும் அதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் 
சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர் இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் போது, இந்தத் துறையில் அதிகாரிகளுக்கு காணப்பட்ட நிபுணத்துவம் குறைவு என்பதால், கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபிப்பதன் மூலம் நிபுணர்களுக்கு இந்த பணியை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம்.
அதேபோன்று, கடந்த காலங்களில் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமைச்சரையை மையப்படுத்தி காணப்பட்டதால் அமைச்சர்கள் மாறும் போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்பட்டது.
இதனால் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் இந்த அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, பழைமையான வரைபடங்களுக்கு பதிலாக எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுக்கு நவீன வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” எனவும் அமைச்சர் 
தெரிவித்தார்
அதேபோன்று, பல மில்லியன் டொலர்கள் இதற்கு முதலிட வேண்டும் எனவும் இந்த பாரிய முதலீடுகளை பாதுகாக்க தேவையான பலம் வாய்ந்த நீதிக் கட்டமைபை அறிமுகப்படுத்துவதும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்படுவதும் இந்த சட்டமூலத்தின் ஊடாக இடம்பெறுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுவாக உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வின் போது ஒரு நாட்டில் ஏழு கிணறுகள் அகழ்வு செய்யும் போது ஒன்று வெற்றிபெறுவதாகவும், நோர்வே நாட்டுக்கு முதலாவது வெற்றியடைவதற்கு 31 கிணறுகள் அகழ்வு செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 4 கிணறுகள் அகழ்வின் போதும் 3 கிணறுகள் வெற்றியடைந்தமை நல்லதொரு நிலைமை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்
இந்த நடவடிக்கைகளுக்காக உலகம் பூராவும் உள்ள துறை சார்ந்த இலங்கை நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 7 செப்டம்பர், 2021

அம்பகந்தவில கிராமத்த்தில் பொலிசாரை கட்டிவைத்த பொதுமக்கள்

இரவுவேளை தனியே  அம்பகந்தவில கிராமத்துக்குள் சென்ற பொலிஸ் அதிகாரியை பிடித்த பொதுமக்கள் அவரை கட்டி வைத்த சம்பவம் ஒன்று
 இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கட்டி வைக்கப்பட்ட குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சிலாபம் – அம்பகந்தவில என்ற மீனவக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீன்பிடிப் படகில் தொழில்புரிகின்ற மீனவர் ஒருவரது இளவயது மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி லலித் ரோஹண கமகே என்பவரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டிருக்கின்றது, அண்மையில் இரவுவேளையில் குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது பிரதேசவாசிகளால் கையும் மெய்யுமாகப் பிடித்து கட்டிவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
 ஏற்படுத்தியது.
குறித்த பொலிஸ் அதிகாரி திருமணமாகாதவர். இந்நிலையில் கிராம மக்கள் இணைந்து வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 6 செப்டம்பர், 2021

கர்ப்பிணிகளே உஷாரா இருங்க இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்தாம்

மகப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படக்கூடிய மிக உன்னதமானதொரு விடயம். அதே போல், குறித்த காலப்பகுதியில் தான், உடல் மற்றும் உள ரீதியான பல்வேறு புதிய நிலைமைகளுக்கு
 பெண் ஒருவர்
முகங்கொடுக்க வேண்டி நேரிடும். பிரசவம் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே விதமாக அமையாது.அந்த வகையில் தாய் மற்றும் சேயின் உடல்நிலை தொடர்பில் சில அறிகுறிகளை எம் உடல் உணர்த்த 
எத்தனிக்கும். அது போன்ற சில முக்கிய அறிகுறிகளை நாம் இப்போது பார்ப்போம்.
வயிற்றின் நடுப்பகுதி மற்றும் மேற்பகுதிகளில் வலி:பிரசவ காலத்தில் இது போன்ற வலிகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டலுடன் வலி ஏற்படுவதுண்டு. நெஞ்செரிவு, அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் உட்கொண்ட உணவு நச்சுத்தன்மையடைதல் என்பவற்றால் இந்த நிலைமை ஏற்படலாம். சிலவேளைகளில் கர்பிணித் தாய்மார்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதையும் இது குறிக்கும். இது தொடர்பில் வைத்தியரை 
அணுகுதல் அவசியம்.
அடிவயிற்றில் வலி:பிரசவ காலத்தின் போது அடிவயிற்றில் வலி ஏற்படுமாயின் நாம் அதை புறக்கணிக்க கூடாது. சில சமயங்களில் தசைநார்கள் கிழிவதால் இந்த வலி ஏற்படலாம். எனினும் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தாது. ஆனால் குறித்த வலி, ஃபலோப்பியன் குழாய் அல்லது கருப்பைக்கு வெளியே குழந்தை வளர்தல், குறைமாத பிரசவம், கருச்சிதைவு மற்றும் ஃபைபுரொய்ட் கட்டிகள் உடைதல் போன்ற காரணங்களாலும்
 ஏற்படலாம்.
காய்ச்சல்:கர்ப்பகாலத்தின் போது தடுமல் இன்றி 100 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியம். ஏனெனில் 200 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் ஏற்படுமாயின் அது குழந்தையையும் 
பாதிக்கலாம்.
கண்பார்வையில் குறைபாடு:பார்வை மங்குதல் மற்றும் கண் பார்வையில் குறைபாடு போன்ற நிலைமைகள் தோன்றின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக பார்வை குறைபாடு 
ஏற்படலாம்.
கை, மூட்டு மற்றும் முகத்தில் வீக்கம்:கர்ப்பகாலத்தில் கை, மூட்டு, மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்படுவது சாதாரண விடயம் தான். இருப்பினும், அடிவயிற்றில் வலி மற்றும் கண்பார்வை குறைதல் போன்ற 
அறிகுறிகளுடன் வீக்கமும் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.
தலை வலி:தாய்மார்களுக்கு தலை வலி ஏற்படுவதும் சாதாரண விடயமே. ஆனால் தாங்க முடியாத தலை வலி ஏற்படுமாயின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில் தாய் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாவதை குறித்த அறிகுறிகள் குறிக்கும்.
அதிகளவான தாகம் ஏற்படுதல்:சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் ஏற்படுதல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படின் அதனை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல் மற்றும் அதிக தாகம் போன்றவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடியன. இந்த நிலைமை நீரிழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் குறித்த நிலைமைகளை வைத்தியரிடம் எடுத்துக்கூறி ஆலோசனை 
பெற வேண்டும். 
மகப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படக்கூடிய மிக உன்னதமானதொரு விடயம். அதே போல், குறித்த காலப்பகுதியில் தான், உடல் மற்றும் உள ரீதியான பல்வேறு புதிய நிலைமைகளுக்கு
 பெண் ஒருவர்
முகங்கொடுக்க வேண்டி நேரிடும். பிரசவம் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே விதமாக அமையாது.அந்த வகையில் தாய் மற்றும் சேயின் உடல்நிலை தொடர்பில் சில அறிகுறிகளை எம் உடல் உணர்த்த எத்தனிக்கும். அது போன்ற சில முக்கிய அறிகுறிகளை நாம் இப்போது 
பார்ப்போம்.
வயிற்றின் நடுப்பகுதி மற்றும் மேற்பகுதிகளில் வலி:பிரசவ காலத்தில் இது போன்ற வலிகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டலுடன் வலி ஏற்படுவதுண்டு. நெஞ்செரிவு, அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் உட்கொண்ட உணவு நச்சுத்தன்மையடைதல் என்பவற்றால் இந்த நிலைமை ஏற்படலாம். சிலவேளைகளில் கர்பிணித் தாய்மார்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதையும் இது குறிக்கும். இது தொடர்பில் வைத்தியரை
 அணுகுதல் அவசியம்.
அடிவயிற்றில் வலி:பிரசவ காலத்தின் போது அடிவயிற்றில் வலி ஏற்படுமாயின் நாம் அதை புறக்கணிக்க கூடாது. சில சமயங்களில் தசைநார்கள் கிழிவதால் இந்த வலி ஏற்படலாம். எனினும் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தாது. ஆனால் குறித்த வலி, ஃபலோப்பியன் குழாய் அல்லது கருப்பைக்கு வெளியே குழந்தை வளர்தல், குறைமாத பிரசவம், கருச்சிதைவு மற்றும் ஃபைபுரொய்ட் கட்டிகள் உடைதல் போன்ற காரணங்களாலும் 
ஏற்படலாம்.
காய்ச்சல்:கர்ப்பகாலத்தின் போது தடுமல் இன்றி 100 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியம். ஏனெனில் 200 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் ஏற்படுமாயின் அது குழந்தையையும்
 பாதிக்கலாம்.
கண்பார்வையில் குறைபாடு:பார்வை மங்குதல் மற்றும் கண் பார்வையில் குறைபாடு போன்ற நிலைமைகள் தோன்றின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக பார்வை
 குறைபாடு ஏற்படலாம்.
கை, மூட்டு மற்றும் முகத்தில் வீக்கம்:கர்ப்பகாலத்தில் கை, மூட்டு, மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்படுவது சாதாரண விடயம் தான். இருப்பினும், அடிவயிற்றில் வலி மற்றும் கண்பார்வை குறைதல் போன்ற அறிகுறிகளுடன் வீக்கமும் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை
 நாட வேண்டும்.

தலை வலி:தாய்மார்களுக்கு தலை வலி ஏற்படுவதும் சாதாரண விடயமே. ஆனால் தாங்க முடியாத தலை வலி ஏற்படுமாயின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில் தாய் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாவதை குறித்த அறிகுறிகள் குறிக்கும்.
அதிகளவான தாகம் ஏற்படுதல்:சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் ஏற்படுதல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படின் அதனை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல் மற்றும் அதிக தாகம் போன்றவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடியன. இந்த நிலைமை நீரிழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் குறித்த நிலைமைகளை வைத்தியரிடம் எடுத்துக்கூறி ஆலோசனை
 பெற வேண்டும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிவு ஏற்படல்:சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிவு யூ.ரி.ஐ தொற்று காரணமாக ஏற்படக் கூடும். இதற்கு வைத்தியரை நாடுவதன் மூலம் தீர்வு காணலாம்.
வாந்தி:கர்ப்பகாலத்தில் வாந்தி ஏற்படுதல் என்பது மிகச் சாதாரண விடயம். இருப்பினும் நாளொன்றுக்கு இரண்டு முறை வாந்தி ஏற்படுமாயின் தாயின் உடலில் உள்ள சக்தி படிப்படியாக குறைவடையக் கூடும். இதனால் நீரிழப்பு ஏற்படவும் கூடும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 4 செப்டம்பர், 2021

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொருட்களை குறைந்த விலையில் வீடுகளுக்கு விநியோம்

எதிர்வரும்.06-09-2021, திங்கட்கிழமை முதல் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக
 தெரிவிக்கபப்டுகின்றது.
இத்தகவலை கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார். அத்துடன் பொருளாதார மையங்கள் நாளை மற்றும் திங்கட்கிழமை திறந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நடமாடும் விற்பனையாளர்கள் காய்கறிகள் மற்றும் மீன்களைப் பேலியகொட மெனிங் சந்தை மற்றும் மீன் சந்தையில் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 
அவர் குறிப்பிட்டார் .

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 2 செப்டம்பர், 2021

மிகவும் மகிழ்ச்சியான செய்தி இலங்கை வாழ் மக்களுக்கு

பைஸர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை மொடர்னா தடுப்பூசி வழங்குவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம 
ஜீவந்தர தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.