சனி, 27 டிசம்பர், 2025

நீங்கள் மாத்திரை உட்கொண்டால் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

உங்கள் உடல் நிலை கோளாறுக்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். 

எனவே, சில உணவுகளை தவிர்ப்பது நலமாகும். அந்தவகையில் என்னென்ன உணவுகள் தவிர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம். அமிலத்தன்மை உள்ள உணவுகள் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி போன்ற உணவுகள், சிக்னலில் வண்டிகள் நகர முடியாமல் நிற்பதை போன்று இந்த உணவுகளும் உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்து விடுகின்றன. 

மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்து விடுகின்றன. ஆகவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

 பால் பொருட்கள்

 பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைக்கும் தன்மை உடையது. மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும். அதனால் தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும் போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க சொல்கிறார்கள். ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

 நார்ச்சத்து உணவுகள்

 ஆன்டிபயாட்டிக்குகளை எடுத்துக் கொள்ளும் போது, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சி விடுகின்றன. மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடவும் கூடும். எனவே இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

 ஆல்கஹால்

 மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்து விடுகின்றது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைபட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும். ஆகவே விரைவில் நோய் சரியாக வேண்டுமென்றால், ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 ஹெவி ஃபுட்
 மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும். சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாத்திரைகளை சாப்பிடும் போது, உடலில் அனைத்து செயல்களும் சரியாக நடைபெற்றால் தான், உடல் நிலை விரைவில் சரியாகும். 
செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால், மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சிக் கொள்ளாமல் போகும். ஆகவே விரைவில் செரிமானமாகும் லைட் உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



 

நாட்டில் மத்திய மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை

நாட்டில் மத்திய மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக   தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து உரிய அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

அண்மைய சீரற்ற வானிலையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பாடசாலைகள் மண்சரிவு அபாயத்திற்கு நேரடியாக முகம் 
கொடுத்துள்ளது.
 தர மதிப்பீட்டு அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் ஹசலக பகுதியைத் தவிர வேறு எந்தப் பாடசாலைகளும் பெரிய அளவில் அபாய நிலையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
மத்திய மாகாணத்தில் உள்ள 160 பாடசாலைகளை உள்ளடக்கிய விரிவான மதிப்பீட்டு அறிக்கை ஏற்கனவே கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி கல்வி அமைச்சு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியாளர் ஆசிறி கருணாவர்தன கூறியுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் இலங்கையிலும், இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
 உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,553 ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் தங்கத்தின் விலை 12,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
 அதன்படி, “22 காரட்”பவுண் ஒன்றின் விலை, 352,000 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 24 காரட் பவுண் ஒன்றின் விலை 368,000 ஆக அதிகரித்துள்ளமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 25 டிசம்பர், 2025

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

இணைய உறவுகள் மற்றும் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்  வாழ்த்துக்கள் 
இன்று, நாம் அனைவரும் ஒற்றுமையாகவும்  சந்தோசமாகவும் நத்தார் தினம்  ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் எங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு ஆசைதான் உள்ளதாகும்  .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


 

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்


உங்கள்  அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்  வாழ்த்துக்கள் 

 

Blogger இயக்குவது.