திங்கள், 12 டிசம்பர், 2022

இலங்கை கட்டுநாயக்காவில் அதிரடியாக கைதான முக்கிய அதிகாரிகள்

கொக்கெய்ன், மெத் ஸ்டாம்ப்கள் மற்றும் குஷ் ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு சுங்கப் பரிசோதகர்கள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க மற்றும் தனியார் களஞ்சியசாலை ஒன்றில் கடமையாற்றும் இரு சுங்க பரிசோதகர்கள் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துறைமுகத்தின் சுங்க அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், சுங்க பரிசோதகர் ஒருவர் நேற்று துறைமுகத்தை விட்டு வெளியேறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இந்தியாவின் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

இந்தியாவின் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா கெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி 
கௌரவித்துள்ளது. 
தெலுங்காணா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை  வழங்கி  
கௌரவித்துள்ளார்.
லைக்கா ஹெல்த்தின் நிறுவனரும் தலைவருமான திருமதி பிரேமா சுபாஸ்கரன்வைத்தியத் துறைசார் சேவையில் பிரதான இடத்தை தக்கவைத்துள்ளார்.
பிரேமா சுபாஸ்கரன் ஒரு முக்கிய தொழில்முனைவோராகவும், பரோபகாரியாகவும் விளங்குகிறார். வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை அணுகுவதில் குறிப்பாக கவனம் செலுத்துகிறார். 2015 இல் LycaHealth ஐ நிறுவியுதுடன் அதன்  தலைவராகவும் செயற்படுகிறார்.
 அந்த வகையில் வைத்திய துறைசார்ந்த புதிய சந்தைகளில் விரிவாக்கம் மற்றும் மையங்களின் ஒட்டுமொத்த இயக்கம் உட்பட வணிகத்தின் செயல்பாட்டு மற்றும் மூலோபாய வளர்ச்சியை மேற்பார்வையிடுகிறார். 
2015 ஆம் ஆண்டில் LycaHealth இன் கனரி வார்ஃப் கிளினிக்கையும், 2016 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் ஹெல்த்கேர்
 உட்பட உலகெங்கிலும் இரண்டு மையங்களை உருவாக்கி தனது 
சேவையை தொடர்கிறார். 
 பிரேமா சுபாஸ்கரன் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார், இது உலகெங்கிலும் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சமூகங்களுக்கு, குறிப்பாக இந்தியா, இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவதற்காக நிறுவப்பட்டது. 
Lyca குழுமத்தின் CSR முன்முயற்சிகளுக்கு அவர்  தலைமையும்  தாங்குகிறார், இதில், அண்மையில், UK அல்சைமர்ஸ் ஆராய்ச்சியின் முக்கிய பணிகளுக்கான நிதியுதவி, கறுப்பு மற்றும் சிறுபான்மை இன (BAME) சமூகங்களுக்கு நோய், அதன் அடையாளம் மற்றும் தடுப்பு பற்றிய கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. 
பிரேமா பயோமெடிக்கல் அறிவியலில் முதுகலைமானிப் பட்டம் பெற்றவர். மனிதாபிமான சேவைகளுக்காக சிறந்த பெண்மணி விருதுகள் (G.O.D) ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மற்றும் குளோபல் அதிகாரிகள் ஆஃப் டிக்னிட்டி விருது (G.O.D) அரசியல், பொது வாழ்க்கை மற்றும் வணிகம் என்பவற்றிற்கான ஆசியாவின் குரல்  விருது 2018, மற்றும் மனிதாபிமான சேவைகளுக்கான ஐநாவின் சிறந்த பெண்மணிக்கான விருது 2017 ஆகிய விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 10 டிசம்பர், 2022

எகிப்திலிருந்து துருக்கி நோக்கிச் சென்ற விமானம் திடிரென ஸ்பெயினில் தரையிறக்கம்


அதிகளவிலான பயணிகளுடன் 10-12-2022.இன்று  எகிப்திலிருந்து துருக்கி நோக்கி விமானம் ஒன்று சென்று கொன்டிருக்கும்போது 
கர்ப்பினி பெண் ஒருவருக்கு பிரவச வலி என 
தெரிவித்ததனையடுத்து உடனடியாக விமானம் ஸ்பெயின் நாட்டில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்திலிருந்த 28 பேர் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறித்த விமாணத்தில் அதிகளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்ததாகவும் அவர்களில் சிலர் ஸ்பெயின் நாட்டிற்குள் செல்வதற்காக இவ்வாறு பொய்யான தகவலினை தெரிவித்து
 விமானத்தினை தரையிறக்கியதாகவும், இதற்கமைய விமான நிலையத்திலிருந்து 28 பயணிகள் தப்பியோடியதாகவும் அவர்களில் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஏனையோரை 
தேடி வருகின்றனர்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வெள்ளி, 9 டிசம்பர், 2022

நாட்டில் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அனைத்து 
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு.09-12-2022. இன்று வெள்ளிக்கிழமை  விடுமுறையாக கல்வி அமைச்சகம் 
அறிவித்துள்ளது.
காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கலந்துரையாடிய பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. வளிமண்டல சூழலை 
கருத்தில் கொண்டு பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் 
சங்கம் வேண்டுகோள்
விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளது. மலையக பிரதேசங்களில் பலத்த சூறாவளியுடன் குளிர்ந்த காலநிலையும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 8 டிசம்பர், 2022

வரலாறு படைத்த வாலிபர் இளம் வயதில் அமெரிக்காவில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் இருந்து கிழக்கே இயர்லே என்ற சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தலில், சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெய்லன் ஸ்மித் என்பவர் 
வெற்றி பெற்றார். 
இவரை எதிர்த்து போட்டியிட்ட நகரின் சாலை மற்றும் துப்புரவு சூப்பிரெண்டாக உள்ள நெமி மேத்யூஸ் என்பவரை வீழ்த்தி ஸ்மித் வென்றுள்ளார். ஸ்மித்துக்கு 18 வயதே ஆகிறது. இதனால், அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் 
பெற்றுள்ளார். 
இந்த வெற்றிக்கு பின்னர் தனது பேஸ்புக்கில் ஸ்மித் வெளியிட்ட செய்தியில், இயர்லே நகரின் சிறந்த அத்தியாயம் கட்டமைக்கும் தருணம் இது. எனது தாயாரால் அழுகையை நிறுத்த முடியவில்லை. தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி என 
தெரிவித்து உள்ளார். 
இந்த ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்த அவர், பொது பாதுகாப்பு, கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை மீட்டெடுப்பது அல்லது நீக்குவது மற்றும் அவசரகாலத்திற்கு தயாராகும் புதிய திட்டங்களை அமல்படுத்துவது போன்ற விசயங்களை முன்னிலைப்படுத்தி பிரசாரம்
 மேற்கொண்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 7 டிசம்பர், 2022

நாவற்குழியில் சிவபெருமானுக்கு வந்த சோதனை. இராணுவத்தின் கேள்வி பல விசாரணைகள்

சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக யாழ் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
07-12-2022.இன்றைய தினம் நாவற்குழியில் 7 அடி சிவலிங்க பிரதிஷ்டை செய்த பின்னர் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில் சிவலிங்கத்தினை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் 
தீர்மானித்திருந்தோம்.
அதனடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் வந்து பலதடவை விசாரணை மேற்கொண்டார்கள். நாங்கள் கூறினோம் இது ஒரு கோவில் சைவ கோவில் இந்துகளின் தெய்வமாகிய சிவபெருமானின் அடையாளமாக சிவலிங்கம் தான் இங்கே வைக்கப் போகின்றோம் எனகூறினோம்.
அப்போது கேட்டார்கள் சிவபெருமான் என்றால் அவர் யாருடைய ஆள் என்று நாங்கள் கூறினோம். அவர்தான் எங்களுடைய பரம்பொருள் என்று கூறினோம். அதையும் இரண்டு பக்கங்களில் எழுதிச் சென்றார்கள் எனவும் 
அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பல விசாரணைகளுக்கு நாங்கள் முகம் கொடுத்தோம் ஒரு சிவபெருமானின் அடையாளமான சிவலிங்கத்தினை யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கு பல இடர்பாடுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கின்றது
குறிப்பாக விழ விழ எழும்புவோம் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் அவ்வாறுதான் யுத்த காலத்தில் கூட, எமது இந்து மதத்தை கட்டி காத்து வந்த நாம் தற்போது சிவன் சிலைகளை பல இடங்களில் வைப்பதன் மூலமே இந்து மதத்தின் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் 
எனவும் அவர் கூறினார்.
இந்தவீதியினால் பயணிக்கும் அடியவர்கள் சிவலிங்கத்தை வழங்கி யாழ்ப்பாண நகருக்குள் பிரவேசிப்பதற்கு ஏற்ற வாறாக ஒரு புனிதத் தன்மையோடு இந்த இடத்தினை பேணுவதற்காகவும் இந்த இடத்தில் 
ஒரு நிரந்தர கட்டடத்தை அமைத்து 7 அடி சிலையினை அதாவது கருங்கல்லிளான 7 அடி சிவலிங்கத்தினை அமைத்து நித்தம் ஒரு பூஜை வழிபாடுகளும் இடம் பெறக்கூடியவாறு ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 6 டிசம்பர், 2022

நாட்டில் 14 வயது மாணவனுக்கு கிடைத்த பல்கலை அனுமதி.வழங்கப்பட்டுள்ளது

இலங்கையில்  2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.
குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார் இவர் 8ம் வகுப்பில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதி 6 மாதங்களுக்கு பின், 9ம் வகுப்பில் க.பொ.த உயர் தர வணிகவியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
இதற்கமைய உயர்தர பிரிவில் இவர் மூன்று B சித்திகளை பெற்றுள்ளார். இதன்படி அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.இதன் காரணமாக தேவும் சனஹாஸ் ரண்சிங்கவை ஊர்வலமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று(05.12.2022) கல்லூரி வளாகத்தில் 
நடைபெற்றுள்ளது.
முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேவம் குருகுல வித்தியாலயத்தில் படித்த அவர் அதன் பின்னர் நானமல் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்க
 விடயமாகும்.
இந்த மாணவன் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் மூத்தவர் எனவும் அவரின் பெற்றோர் ஆசிரியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனுக்கு எமது இணையங்களின் நல் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.