புதன், 1 செப்டம்பர், 2021

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இடம்பெறாதாம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம், கொரோனா அச்சம் காரணமாக இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய, வருடாந்த மஹோற்சவம் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், கொவிட் அச்சம் காரணமாக செப்டம்பர் 06-09-2021 ஆம் திகதிக்கு
 ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதும் நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், ஒத்திவைக்கப்பட்டதைப் போன்று இம் மாதம் 06-09-2021. ஆம் திகதி மஹோற்சவத்தை நடாத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாக நயினாதீவு ஆலய அறங்காவலர் சபையினர் 
அறிவித்துள்ளனர்.
மேலும் ஆலயத்தின் இவ் வருட மஹோற்சவம் கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதால், இடம்பெறாது எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

நாட்டில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளிவந்த தகவல்

020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து  கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக தெரியவருகின்றது.
இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அக் கலந்துரையாடலில், க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாணவர்களில், 170,000திற்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறைப் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளமை கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக
 தெரியவருகிறது.
செயன்முறைப் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டிய மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்துவது, எதிர்வரும் பரீட்சைகளை நடத்துகின்றமை மற்றும் பெறுபேறுகளை வெளியிடுகின்றமை ஆகிய நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் அத்தியாவசியம் என்றால், அந்த மாணவர்கள், பாடசாலை மட்டத்தில் செயன்முறைப் பரீட்சையின் ஊடாக பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றமையினால், உயர்தர கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண சாதாரண தர பரீட்சை பரீட்சைகள் நிறைவு பெற்று, 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறாததால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

இராணுவத்தினரால் யாழ் குடாநாட்டில் நடந்த விசேட சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் –கொக்குவில் பகுதியில் பொலிஸ், விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக இந்த விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி பயனித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



புதன், 25 ஆகஸ்ட், 2021

நாட்டின் பொருளாதார சிக்கல் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டின் பொருளாதாரம் இன்று மூன்று வழிகளில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நிதி நெருக்கடி மற்றும் வெளிநாட்டு இருப்பு பற்றாக்குறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டால், அந்நிய செலாவணி இல்லாமல், உணவு மற்றும் மருந்து இல்லாமல் மக்கள் இறப்பார்கள் என்றும் 
அவர் சுட்டிக்காட்டினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 23 ஆகஸ்ட், 2021

வேன் மோட்டார் சைக்கிள் கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் விபத்து

கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் 23-08-2021. இன்று  இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில்
 இடம்பெற்றுள்ளது.
தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வேன் ஒன்றும் நேர் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் வேனின் சாரதியின் தூக்கக் கலக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது
இந்நிலையில் குறித்த வேன் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், படுகாயம் அடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சூம் வழியாக கலைஞர்கள் நடாத்திய நிகழ்வு உலக சாதனையாக பதிவு

இரண்டாவது தடவையாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு உலக சாதனையாக பதியப்பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டும் இவ்வாறான உலக சாதனையொன்றும் படைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2019ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கின்னஸ் சாதனை முயற்சிக்காக சுமார் 10,000 நடனக் கலைஞர்கள் நடேசனுடைய புகழை விளக்கும் வண்ணம் நடேச கௌத்துவத்தினை ஒரே நேரத்தில் நடனமாடினார்கள். இதில் பல்வேறுபட்ட இந்திய மாவட்டம், மாநிலம், நாடுகளிலிருந்தும் பல நடனக் கலைஞர்கள் பங்கு பற்றியிருந்தனர். இந் நிகழ்வினை பத்மா சுப்ரமணியம் அவர்கள் 
ஆரம்பித்து வைத்தார்.
பல நாடுகளில் இருந்தும் பங்கு பற்றிய மாணவர்களுள் எமது இலங்கை திரு நாட்டிலிருந்து மட்டக்களப்பு மண்ணிலிருந்து திருமதி வசந்தி நேரு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிருத்திய கலாலய ஆசானாகிய திருமதி வசந்தி நேரு அவர்கள் உட்பட அவர்களுடைய  6 மாணவர்கள் பங்கு கொண்டு உலக சாதனை பெற்று மண்ணுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்து
 கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவிட் நிதியத்திற்கான நிதியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அதுமட்டுமன்றி கோவிட் அசாதாரண காலகட்டத்திலும்   விரிவரங்க நிகழ்கலையினூடாக(ZOOM ) கலைமணி மதுரை சு. முரளிதரன் அவரின் நெறியாழ்கையின் கீழ் பல நாட்டு கலைஞர்கள் கலந்துகொண்ட நடன நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்த உலக சாதனை நடன நிகழ்விலும் மட்டக்களப்பினை சேர்ந்த நிருத்திய கலாலய ஆசிரியரும், முனைவர் பட்ட ஆய்வாளருமான திருமதி வசந்தி நேரு அவர்கள் உட்பட அவருடைய மாணவிகளான (டானி ருக்ஷிக்கா மோசஸ் சஞ்சுலா ராஜேந்திரம், ஆனந்தசேகர் ரம்யா, 
ராமுசங்கர் ரஜித்ரா, லோகநாதன் நிரோஷனா, ரவிந்ரகுமார் ரக்ஷிதா, சுவர்ண சந்திரண் சாருண்யா, பத்மசிறி கிஷானி, பிரான்சிஸ் தர்ஷிக்கா, தியாகராஜன் அபிராஷினி, அருட்செல்வன் அக்ஷனா, கார்த்திகா தேவானந், சுரேஷ்குமார் கிஷோனியா ஷான்ருக்ஷி, கேதாரணி முருகதாஸ்) ஆகிய 14 மாணவர்களும் 
பங்கு கொண்டனர்.
இந்த நடன நிகழ்வானது கின்னஸ்  உலக சாதனை பதிவேட்டில் பதியப்பட்டு மீண்டும் உலக சாதனை படைத்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 21 ஆகஸ்ட், 2021

கொழும்பில் ஊரடங்கு நேரத்தில் நடந்த அகோரம் தீவிர விசாரணையில் பொலிஸ்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ள நிலையில் கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில்.21-08-2021. இன்றைய தினம் நபரொருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாக
 தெரியவருகிறது.முகம்
துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை மற்றும் கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமே இவ்வாறு ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.
நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற ரீ சேர்ட் அணிந்த நிலையில் குறித்த சடலம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்
 செல்லப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


Blogger இயக்குவது.