வியாழன், 14 செப்டம்பர், 2023

சாம்பல்தீவில் வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரையும் வியக்க வைத்துள்ளது

நாட்டில்  திருகோணமலையில் இடம்பெற்ற வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இத் திருமணம் 07-09-2023.வியாழக்கிழமை அன்று திருகோணமலை சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது.
உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த உறுதி
இத் திருமண பந்தத்தில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினர் இணைந்து கொண்டனர்.
திருமண நிகழ்வில் சிவ பணியில் உள்ள இரெத்தினம்பிள்ளை கலியுகவரதனை சிவநெறி முறையில் குருவாக ஏற்று திருமணம் 
நடைபெற்றுள்ளது. இதன்போது சட்ட ரீதியான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.
அதேவேளை புதுமணத் தம்பதியினருக்கு பரிசாக சிவலிங்கம் ஒன்று வழங்கப்படுவதோடு, மணமகனால் மணமகளுக்கும், மணமகளால் மணமகனுக்கும் உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த
 உறுதி செய்தனர்.
அதேவேளை இதுபோல எட்டு திருமணங்கள் இதுவரை நடத்தி வைக்கப்பட்டதாகவும் சிவ பணியில் உள்ள கலியுகவரதன் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 13 செப்டம்பர், 2023

போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள் , சுகாதார உதவியாளர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் போன் பாவிக்க 
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் "கானுலா"
 பொறுத்தப்பட்டமையால் , சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , தாதியர்கள் கவன குறைவினாலையே 
சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் ,குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






செவ்வாய், 12 செப்டம்பர், 2023

நாட்டில் ரயில் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 12-09-2023.அன்று மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 இதற்கமைய பயணிகள் ரயில் சேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் ரயில்வே திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 11 செப்டம்பர், 2023

மடு சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் விநியோகம் துண்டிப்பு க்கு வெளியான தகவல்

நாட்டில்  மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன் சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் வினியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்ட நிலையில்,முழுமையான நிலுவை தொகையை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை என பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
 பாடசாலையின் மின் கட்டணம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் காணப்பட்ட நிலையில் அதனை செலுத்தாத காரணத்தினால் மடு மற்றும் வவுனியா மின்சார சபையினால் கடந்த ஜூன் மாதம் மின்சார சபை 
அதிகாரிகள் வருகை தந்து பாடசாலைக்கான மின் 
இணைப்பை துண்டித்து உள்ளனர். இந்த நிலையில் பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் மற்றும் சிலரின் உதவியுடன் பணம் சேகரிக்கப்பட்டு பாடசாலைக்கான மின் பட்டியலில் நிலுவைத் தொகை 
செலுத்தப்பட்டது.
நிலுவைத் தொகை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் பாடசாலையில் காணப்படும் திறன் பலகைகள் செயலற்று இருப்பதுடன் 
நிகழ்நிலை ஊடாக செயற்படுத்தும் விடயங்கள் பூர்த்தியற்று இருப்பதுடன் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் தடங்கல் 
ஏற்பட்டுள்ளது.
 தொடர்ச்சியாக வவுனியா மின்சார சபையுடன் பாடசாலையின் அதிபர் தொடர்பை ஏற்படுத்திய போது உடனடியாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்குகின்றோம் எனக் கூறியும் இதுவரை இணைப்பை வழங்காது வவுனியா மின்சார சபை அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயல்படுவதாக பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

சீன பொறியியலாளர்களை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பணியமர்த்துவது குறித்து தகவல்

நாட்டில்  நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன
 பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் பரப்பப்படும் விடயங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 அது அந்த சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்னவின் கையொப்பத்துடன் அறிவிப்பு 
வெளியிட்டுள்ளது.
 அந்த அறிவிப்பின்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெற நொரொச்சோல் தயாராகி வருவதாக வெளியான செய்திகள் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும்
இலங்கை மின்சார சபையின் தற்போதைய வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 
நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் இருந்து பொருத்தமான பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய 400க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் 19 பேர் தெரிவுசெய்யப்பட்டு ஆட்சேர்ப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை உரிய அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அத்துடன், வெளிநாட்டு பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சோ அல்லது மின்சார சபையோ எந்தவொரு கொள்கை முடிவுகளையும் அனுமதியையும் பெறவில்லை என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 9 செப்டம்பர், 2023

போலியாக விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்காவில் கைது



போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் 08-09-2023.அன்று  மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
 நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  08-09-2023.அன்று மாலை 06.40 மணிக்கு கத்தாரின் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-217 இல் பயணிப்பதற்காக குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
 அங்கு குறித்த இளைஞன் தனது அனுமதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு, குடியகல்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனையில், குறித்த இளைஞன் தம்வசம் வைத்திருந்த போலாந்து குடியுரிமை விசா போலியாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதியானது.
 பின்னர் குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி விசா 40 இலட்சம் ரூபாய்க்கு ஒரு தரகரிடமிருத்து தான் பெற்றுக்கொண்டதாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
 இதனையடுத்து குறித்த இளைஞன் பயணத்திற்காக எடுத்துவந்த , பயணப் பை மற்றும் கைப்பையை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
 இதன்போது, குறித்த இளைஞனிடம் இருந்த 
கைப் பையில் 
மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட சில ஆவணங்களும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து,குறித்த இளைஞனைக் 
கைது செய்த, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு அதிகாரிகள், அந்த இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
என்பதும் கறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 8 செப்டம்பர், 2023

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் மிரட்டிய தமிழர்கள் அதிரடிக் கைது

கனடாவின், கிரேட்டர் டொராண்டோ பகுதியில் இயங்கிய வாகனத் திருட்டு குற்ற வலையமைப்பை அந்த நாட்டு பொலிசார் 
கைது செய்துள்ளனர்.
இந்த குற்றக்கும்பலில் இலங்கைத் தமிழர்களும் உள்ளடங்குகிறார்கள். “புராஜெக்ட் வின்னி” என பெயரிடப்பட்ட நடவடிக்கையை கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக பீல் பொலிசார் மேற்கொண்டு, இந்த குற்றவலையமைப்பை கைது செய்துள்ளனர்.
2 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 2 மில்லியன் டொலர் மதிப்புள்ள கிட்டத்தட்ட இரண்டு டஜன் திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பீல் பிராந்திய துணை பொலிஸ் தலைவர் மார்க் ஆண்ட்ரூஸ் கூறுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிராம்ப்டனில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவால் ரேஞ்ச் ரோவர் திருடப்பட்டபோது விசாரணை
 தொடங்கியது என்றார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள், வாகனத் திருட்டு விசாரணையில் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். (பீல் போலீஸ்) “பீல் மற்றும் யோர்க் பிராந்தியத்தில் இதே குழுவால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் இதேபோன்ற பிற வாகன திருட்டுகளை புலனாய்வாளர்கள் இணைக்க
 முடிந்தது,” என்று ஆண்ட்ரூஸ் வழக்கு பற்றிய செய்தி வெளியீட்டு வீடியோவில் கூறினார்.
திருடப்பட்ட சில வாகனங்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவதற்கு முன்னர் ஒன்டாரியோவில் மோசடியான முறையில் மீண்டும் வின்னிங் செய்யப்பட்டு மீண்டும் பதிவு செய்யப்பட்டதால் விசாரணைக்கு “புராஜெக்ட் வின்னி” என்று பெயரிடப்பட்டது என்று ஆண்ட்ரூஸ் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில், 13 லாண்ட் ரோவர்ஸ், 5 டாட்ஜ் ராம்கள், 2 போர்ஷ்கள், ஒரு ஹோண்டா சிஆர்வி மற்றும் ஒரு காடிலாக் எஸ்ஆர்எக்ஸ் ஆகியவற்றை பொலிசார் மீட்டனர். அவை 1,950,000 டொலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 
“புராஜெக்ட் வின்னி” தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலர் போலி ஆவணங்களை வெளியிட்டதாக பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர், மற்றவர்கள் குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கில் விசாரணையாளர்கள் மொத்தம் 42 குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கிடையில், விசாரணையில் தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தொடர்ந்து தேடுகின்றனர் – 39 வயதான கால்வின் பீகொக் மற்றும் அடையாளம் தெரியாத நபர்.
பீல் பிராந்தியம் மற்றும் அண்டை பகுதியில் இயங்கும் கால்வின் பீகொக், குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை உடைமையாக்குதல், மோட்டார் வாகனம் திருடுதல் மற்றும் மோட்டார் வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்குதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக 
தேடப்படுகிறார்.
வாகன உரிமையாளருக்கு சந்தேகம் வராத விதமாக பழகி, வாகனத்தை வாங்குவதாக நடிப்பதே கால்வின் பீகொக்கின் வேலை.
பின்னர், வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாக கூறுவார். வாகன உரிமையாளரையும் ஏற்றிக் கொண்டு, வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாக புறப்பட்டு, வழியில் உரிமையாளரை தாக்கி கீழே தள்ளிவிழுத்தி விட்டோ அல்லது 
வேறு வழிகளை பயன்படுத்தியோ வாகனத்துடன் தப்பிச்
 சென்று விடுவார்.
கடந்த மாதம், பீல் பொலிசார் கலிடனில் ஒரு வன்முறை கார் திருட்டின் வீடியோவை வெளியிட்டனர், கால்வின் பீகொக் காருடன் தப்பிச் செல்வதற்கு முன்பு சோதனை ஓட்டத்தின் போது இருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.