வெள்ளி, 12 நவம்பர், 2021

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனியே நின்ற சிறுமியின் திடுக்கிடும் தகவல்

பதினைந்து  வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட 19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் 11-11-2021.அன்று  வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை காவல்துறை காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் 
தெரிவித்தனர்.
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>







வியாழன், 11 நவம்பர், 2021

இலங்கை மக்களுக்கு வெளியான ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு

லங்கா சதொச விற்பனை நிறுவனத்திடமிருந்து 15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை தற்போதைய சந்தை விலையை விட 1000 ரூபாய் குறைவாக வாங்க முடியுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) அறிவித்துள்ளார்.
சதொச நிறுவனத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1998இற்கு அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்த 15 பொருட்களையும் நிவாரண விலைக்கு கொள்வனவு செய்ய முடியும் என இதன்போது அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நிவாரணப் பொதி தொடர்பான அறிவிப்பானது மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல் என சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 8 நவம்பர், 2021

நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டவானிலை எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் 
அறிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, காலி, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகலை, களுத்துறை, கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்ட மற்றும் உக்குவெல
 ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, கலவான மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலகப்பிரிவுக்கும், குருநாகலை மாவட்டத்தின் நாராம்மல பிரதேச செயலகப்பிரிவுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 7 நவம்பர், 2021

கிட்டங்கிஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு

சம்மாந்துறை – கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் சடலத்தை பொலிஸார் 
 06 -11-2021.அன்று மீட்டுள்ளனர்
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சலத்தை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் 41 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு சந்தேக நபருடன் விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் வீசப்பட்ட சிசுவை மீட்டெடுத்தனர்.
னது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த குழந்தையையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தையின் தாயாரான 19 வயதான யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு 
உத்தரவிட்டார்.
இதனை அடுத்து அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச்செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 5 நவம்பர், 2021

நாட்டில் வெலிசர பகுதியில் 16 வயது இளைஞரால் ஏற்பட்ட பாரிய விபத்து

நாட்டில் வெலிசர பகுதியில்.05-11-2021. இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தை ஏற்படுத்திய மகிழுந்து, சந்தேக நபரான 16 வயது இளைஞரின் தந்தையினுடையது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.எனினும் குறித்த இளைஞர் ஏன் தனது தந்தையின் மகிழுந்தை எடுத்துச் சென்றார் என்பதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மகிழுந்தின் உரிமையாளர் வெலிசர – மஹபாகே 
பகுதியில் தங்காபரண வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர் ஒருவர் எனவும், அவர் இன்று காலை தனது மகிழுந்தை கழுவி சுத்தம் செய்து விட்டு, பணி நிமித்தமாகக் கொழும்பு செல்ல தயாரானதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்படி வர்த்தகர் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தபோதே, குறித்த இளைஞர், தனது மூத்த சகோதரியுடன் வீட்டிலிருந்து பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் எந்த தேவையும் இன்றியே வீட்டிலிருந்து மகிழுந்தை எடுத்துச்சென்றதாக இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு திசையாக பயணித்த குறித்த மகிழுந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன், குறித்த மகிழுந்து வீதியின் நடுவில் உள்ள தடுப்பை கடந்து மறுபுறம் திரும்பி மற்றொரு காரின் மீது விழுந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மஹபாகே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலயில் , மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மகிழுந்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 16 வயதான இளைஞரை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துதுடன், அவரது தந்தையையும் கைதுசெய்துள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 4 நவம்பர், 2021

நாட்டில் விரைவில் காணிகள் கையளிக்கப்படுமாம்

 

நாட்டில்குறுகிய காலத்துக்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளில் இருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படுமென, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (03) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இங்குள்ள பாடசாலைகளுக்கு, மாணவர்கள் ஆர்வத்துடன் செல்வதனை கண்டதாகவும் தெற்கு பகுதியில் மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்லும் போது சில அறிவுறுத்தல்கள் பதாதைகள் ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றது எனவும் 
கூறினார்.
ஆனால் இங்கு அவ்வாறான நிலை இல்லை. அது மிகவும் சந்தோசமான விடையமாக உள்ளது எனவம், அவர் 
கூறினார்.
தைரியமான மனிதர்கள் யார் என்றால் இங்குள்ளவர்களையே நான் அழைத்து வந்து காண்பிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், தைரியமுள்ள மனிதர்கள் இங்குதான் உள்ளனர் எனவும் கூறினார்.
இங்கிலாந்து, சுவீடன், நோர்வே உள்ளிட்ட நாடுகள், இங்கு புதைக்கப்பட்ட வெடிபொருள்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன எனத் தெரிவித்த அவர், 'மிக குறைந்த அளிலான கண்ணிவெடி அகற்றும் 
பணிகளே இங்கு காணப்படுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்படும் எனவும் கூறினார்.
'அதன் ஊடாக வடக்கு - கிழக்கில் உள்ள மக்களின் அபிவிருத்திக்கான பணம் அதிகளவில் பெற்றுக்கொள்ளமுடியும். குறுகிய காலத்துக்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளில் இருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படும்' எனவும், 
அவர் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 3 நவம்பர், 2021

பதுளை வீதியில் 6.7 கோடி ரூபாவுடன் மடக்கி பிடிக்கப்பட்ட வாகன சாரதி

ஒரு தனியார் வங்கியின் ஏரிஎம் இயந்திரங்களுக்கு பணத்தை எடுத்துச் சென்ற வாகன சாரதி, பணத்துடன் தப்பியோடிய நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். ரூ.6,74,19,700 பணத்துடன் தப்பிச் சென்ற வாகனம், நுவரெலியா, பதுளை வீதியில் ரந்தபொல சந்திக்கு அருகில் விசேடஅதிரடிப்படையினரால் மடக்கப்பட்டு, சாரதி 
கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் முன்னாள் இராணுவ வீரர். கொழும்பில் இருந்து ஹட்டன் வரையுள்ள தனியார் வங்கியொன்றின் கிளைகளில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பப்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றது. பணத்தை ஏற்றி வந்த வாகனம், ஹட்டனிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்காக 
நிறுத்தப்பட்டது.
வங்கியின் இயந்திரத்தில் பணத்தை இட, வங்கி ஊழியர்கள் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்ற போது, வாகனத்திலிருந்த பணத்துடன் சாரதி 
தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது நுவரெலியா பதுளை வீதியில் அம்பேவெல ரெண்டபொல சந்தியில் வைத்து அந்த வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் மடக்கிப் பிடித்து, சாரதியை கைது செய்தனர். பணமும் சந்தேக நபரும் கெப்பெட்டிபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.