சனி, 16 அக்டோபர், 2021

நாட்டில் அரசங்கத்தின் உத்தரவினை மதிக்காத மக்கள் வெளியான செய்தி

நாட்டில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவையும் மீறி மக்கள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நீண்ட வார இறுதி விடுமுறைகள் வருவதால் மாகாணங்களுக்கு இடையிலான
பயணக்கட்டுப்பாட்டினை கடுமையாக்குமாறு ஜனாதிபதி செயலகம்.15-10-2021. அன்று அறிவித்தது. எனினும் அதனை கருத்திற் கொள்ளாத மக்கள் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபட ஆர்வம் காட்டி வருவதாக 
தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட விடுமுறை காரணமாக கொழும்பிற்கு வெளியே பிரதான ஹோட்டல்களின் அனைத்து அறைகளும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென சுகாதார அமைச்சு 
தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் கட்டுப்பாடுகள் உள்ள போதிலும் அந்த கட்டுப்பாட்டை மீறி பலர் குறித்த பிரதேசங்களை நோக்கி பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளதென சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் விசேட வைத்தியர் லால் பனாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று குறையவில்லை என்ற சூழலுக்கு மத்தியில் மக்கள் சுகாதார ஆலோசனையை பின்பற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மீண்டும் ஒரு கொவிட் அலை ஏற்படும் அவதானமிக்க நிலைமையை தடுக்க முடியாதென அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 15 அக்டோபர், 2021

பலாங்கொடையில் எலிக் காய்ச்சலால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் எலிக் காய்ச்சலால் 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்று இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய் பிரிவின் வைத்தியர் லக்மால் கோணார ஊடகங்களிடம் 
தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 379 பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவிலேயே எலிக் காய்ச்சலால் அதிகளவானோர்
 பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் 36 பேரும், கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவில் 35 பேரும், பெல்மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 34 பேரும், இம்புல்பென் பிரதே செயலாளர் பிரிவில் 32 பேரும்,
 எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவில் 28 பேரும்,
 வெலிகபெல பிரதேச செயலாளர் பிரிவில் 26 பேரும், எல்பாத்த பிரதேச செயலாளர் பிரிவில் 23 பேரும், இரத்தினபுரி பிரதே
ச செயலாளர் பிரிவில் 22 பேரும், கலவான மற்றும் கொடக்கவெல பிரிவுகளில் 20 பேரும், எம்பிலிப்பிட்டி பிரிவில் 19 பேரும், குருவிட்ட பிரிவில் 18 பேரும், கஹவத்த பிரிவில் 14 பேரும், ஓப்பநாயக்க
 பிரிவில் 13 பேரும், நிவித்திகல மற்றும் உடலவலவ பிரிவில் 10 பேரும், இரத்தினபுரி நகர சபை பிரிவில் 08 பேரும், அயகம பிரிவில் 06 பேரும், கிரிஎல்ல பிரிவில் 04 பேரும் எலிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்தினபுரி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு 821 பேருக்கும், 2020ஆம் ஆண்டு 1,184 பேருக்கும் எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் எலிக் காய்ச்சலால்
 இரத்தினபுரி மாவட்டத்தில் உயிரிழந்த 44 பேரில் 52 சதவீதமானவர்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுரங்கப் 
பணியாளர்களாவர்” – என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



கோண்டாவில் நாதஸ்வர வித்துவான் திரு பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவரை தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளரான டி.இமான் கௌரவபடுத்திய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்து தமிழரை நெகிழவைத்த இசையமைப்பாளர் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த புகழ்பெற்ற 
நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலொன்றுக்கு யாழ் இசைக் கலைஞரான குமரன் இசை வழங்கியுள்ளார்.
குறித்த பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக குமரனை டி.இமான் அழைத்து பெருமைப்படுத்தியுள்ள சம்பவம் இலங்கை தமிழர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கோண்டாவில் நாதஸ்வர வித்துவான் திரு பஞ்சமூர்த்தி குமரனுக்கு 
என் இணையம்சார்பாக நல்வத்துக்கள் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஏ9 வீதியில் ஆனையிறவில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை

ஆனையிறவு – ஏ9 வீதியில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை ஒன்று காணப்படுகின்றது.குறித்த முதலை இரை தேடி இரவில் வீதிக்கு வந்த போது வாகனங்கள் இதன்மீது ஏறியிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் முதலை அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதனால் கிராமவாசிகள் அச்சத்தில் இருப்பதாகவும் 
தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, உரிய தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், முதலையின் உடலை அகற்ற நடவடிக்கை 
எடுக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 9 அக்டோபர், 2021

வாழைச்சேனையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நால்வரை காணவில்லை

வாழைச்சேனையில் இருந்து கடந்த மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர் எம்.எஸ்.அன்வர் வாழைச்சேனை  காவல் துறை  நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை  காவல் துறை  நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த படகிலிருந்து .09-10-2021.இன்று சனிக்கிழமை வரை எந்தவித அறிவித்தலும் தமக்கு கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் நான்கு பேர் சென்றதாகவும் குறித்த படகு நீலநிறம் என்றும் அதன் இலக்கம்; ஐஆருடு யு 0093 வுடந என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.
வி.ரிஸ்கான், எம்.எச்.முஹம்மட், ஏ.எம்.றியாழ், கே.எம்.ஹைதர் ஆகியோர் சென்ற நிலையில் இன்னும் தகவல் கிடைக்கப்பெறவில்லை.
குறித்த படகு தொடர்பான தகவல்கள் ஏதும்
 கிடைக்கும் பட்சத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய தெலைபேசி இலக்கமான 065225709 என்ற இலக்கத்துடன் அல்லது படகு உரிமையாளரின் தொலைபேசி இலக்கமான 0779581915 இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



புதன், 6 அக்டோபர், 2021

ஆனைக்கோட்டை 3ம் காட்டை வீதி உள்ள பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது

 

ஆனைக்கோட்டை 3ம் காட்டை மானிப்பாய் பிரதான வீதி உள்ள பாலம்அடை  மழை காரணமாக தற்போது இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது பொது மக்கள் போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து 
செய்வது ஆபத்து
ஏற்படும் அபாயம் உள்ளது இதனை கருத்தில் கொண்டு இவ்வீதி தற்போது கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உடன் இனைந்து தற்காலிகமாக வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, 
இதனால் ஏற்படும்
சிரமங்களுக்கு வருந்துகிறோம் விபத்தை தவிர்க்க தற்காலிகமாக எடுத்த முயற்சி உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை 
உங்கள் முகநூலில் பதிவு செய்யுங்கள் 
நண்பர்களே நன்றி.

நிலாவரை.கொம் செய்திகள் >>>






செவ்வாய், 5 அக்டோபர், 2021

உலகம் முழுவதும் சுமார் 8 மணி நேரம் முடங்கிய வட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்


உலகம் முழுவதும்.04-10-2021.அன்று இரவு 9 மணி முதல் முடங்கிய வட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை சுமார் 8 மணி நேரங்களுக்குப்பின் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளது. முதலில் தங்களின் இணையத் தொடர்பில் பிரச்சனை இருப்பதாக கருதிய பயனர்கள், சில மணி நேரத்துக்கு பின்பே சேவை முடங்கியதை அறிந்தனர்.
இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டதால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.பிரதான சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்தது.
ந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சரி செய்யப்பட்டு இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. இருப்பினும், ஒரு மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது.
தற்போது, 8 மணி நேரமாக பேஸ்புக், வட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றின் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பேர் அவதிக்குள்ளாகியமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




Blogger இயக்குவது.