சனி, 9 அக்டோபர், 2021

வாழைச்சேனையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நால்வரை காணவில்லை

வாழைச்சேனையில் இருந்து கடந்த மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர் எம்.எஸ்.அன்வர் வாழைச்சேனை  காவல் துறை  நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை  காவல் துறை  நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த படகிலிருந்து .09-10-2021.இன்று சனிக்கிழமை வரை எந்தவித அறிவித்தலும் தமக்கு கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் நான்கு பேர் சென்றதாகவும் குறித்த படகு நீலநிறம் என்றும் அதன் இலக்கம்; ஐஆருடு யு 0093 வுடந என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.
வி.ரிஸ்கான், எம்.எச்.முஹம்மட், ஏ.எம்.றியாழ், கே.எம்.ஹைதர் ஆகியோர் சென்ற நிலையில் இன்னும் தகவல் கிடைக்கப்பெறவில்லை.
குறித்த படகு தொடர்பான தகவல்கள் ஏதும்
 கிடைக்கும் பட்சத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய தெலைபேசி இலக்கமான 065225709 என்ற இலக்கத்துடன் அல்லது படகு உரிமையாளரின் தொலைபேசி இலக்கமான 0779581915 இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.