நாட்டில் கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு
இடம்பெற்று வருவதனை அவதானித்து சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான
நிறுவனமும் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் நேரில் சென்று
பார்வையிட்டிருந்தனர்.
முல்லைத்தீவு , கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால் ,வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் அங்குள்ள தமிழ்மக்களுக்கு
சொந்தமான வேறு காணிகளை துப்பரவு செய்து கொண்டிருப்பதாக கிடைக்கபெற்ற தகவலையடுத்து.29.04.2024. இன்றையதினம்கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விடயத்தினை அறிந்த சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினர் , முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாதிக்கப்பட்ட மக்கள், குறித்த பகுதி விவசாயிகள்
உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று இன்றையதினம் பார்வையிட்டிருந்தனர்.
இது தொடர்பாக களவிஜயம் மேற்கொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அக்காணிகளை ஏற்கனவே
தமக்கு மகாவவலி அபிவிருத்தி அதிகாரசபை 2015ஆம் ஆண்டு தந்திருப்பதாக கூறியே பெரும்பான்மை மக்கள் துப்பரவு
செய்கின்றார்கள்.
இதற்குரிய நடவடிக்கைகளை ரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினரே பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் சென்று பார்த்ததாக
தெரியவில்லை.
குறித்த இடம் ஏற்கனவே தமிழ்மக்களுக்கு
வழங்கப்பட்ட காணி. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக நாம் கலந்துரையாடி முடிவெடுக்க இருக்கின்றோம் என தெரிவித்திருந்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக