நாட்டில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்புடன், தேவைக்கேற்ப வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும்.
மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, "இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தினோம். 1,500 முதல் 2,000 இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன.
இப்போது படிப்படியாக அவற்றை தளர்த்தி இப்போது வாகன இறக்குமதியை மட்டும் நிறுத்தியுள்ளோம். தேவைக்கு
ஏற்ப திறக்கிறோம்.
தற்போது எங்களிடம் 750 வேன்கள் உள்ளன. சுற்றுலாத் துறைக்கு தேவையான 250 பஸ்கள் எல்லாம் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக