இலங்கைக்கு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 09.00 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
இதன்போது, சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது சுமார் 130 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக