பிரான்சில் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளம் எது என்பது தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பிரெஞ்சு இளைஞர்கள் தவிர்த்து ஏனையவர்களிடம் அதிகளவு
பிரபலமாக இருப்பது பேஸ்புக் சமூக வலைத்தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 தொடக்கம் 24 வயது வரையுள்ள இளைஞர்களிடம் SnapChat சமூகவலைத்தளம் (81% சதவீதமானவர்கள் பயன்படுத்துகின்றார்கள்) பிரபலமாக உள்ளது. அதற்கு அடுத்ததாக Instagram, TikTok போன்ற
செயலிகள் உள்ளன.
அதேவேளை, 25 தொடக்கம் 49 வயது வரையுள்ளவர்களிடம் பேஸ்புக் சமூகவலைத்தளமும், 50 மற்றும் அதற்கு மேலுள்ளவர்களிடம் பேஸ்புக்கே பிரபலமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக