சனி, 30 செப்டம்பர், 2023

இலங்கை பல்கலைக்கழகங்கள் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளன

2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் இணைந்துள்ளன.குறித்த தரவரிசைப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள 108 நாடுகளைச் சேர்ந்த 1,904 பல்கலைக்கழகங்கள் இடம்பெறுகின்றன.இதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பன குறித்த...

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது

நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது சபைக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. அது தொடர்பில் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் பிரசுரமாகி இருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் எதிர்வரும்...

வியாழன், 28 செப்டம்பர், 2023

முல்லைத்தீவு நீதிபதி உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தால் பதவி விலகினார்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் செப்டம்பர் 23 அன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பப்பட்டது. மாவட்ட நீதிபதி பதவி, மாஜிஸ்திரேட் பதவி, குடும்பநல நீதிமன்ற...

புதன், 27 செப்டம்பர், 2023

ஒன்றாறியோ மாகாணத்தில் போலிக் காசோலை மோசடி எச்சரிக்கை

கனடாவில் போலி காசோலை பயன்பாட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாறியோ மாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் போலிக்காசோலை மோசடியில் சிக்கி 38 ஆயிரம் டாலர்களை இழந்துள்ளார். உரிய நேரத்தில் வங்கிக்கு இது குறித்து அறிவிக்காத காரணத்தினால் அவர் இவ்வாறு பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குயான் மெஷின் ஒர்க்ஸ்...

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

நாட்டில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் அவசியம்

இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில்...

திங்கள், 25 செப்டம்பர், 2023

தர்மபுரம் பகுதியில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு பணிமனை திறப்பு விழா

கத்தோலிக்க திருச்சபையின் பங்கு பணிமனை திறப்பு விழா இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தூய சவேரியார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட குறித்த பணிமனை கட்டடம் இன்றைய தினம் 25.09.2023 யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் அவர்களின் ஆசீர்வாதத்துடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை நிக்சன் கொலின்...

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும்

இலங்கையில்  2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த வருடத்தின் முதலாம் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களிடம் பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க்...

சனி, 23 செப்டம்பர், 2023

நாட்டில் தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை

இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை  சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.பெருந்தோட்ட கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இதன்படி பெருந்தோட்ட...

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

விரைவில் சமூக வலைதளங்களை கண்காணிக்க அமுலாகவுள்ள சட்டம்

 சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டமொன்று சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது மேடா ( Meta) நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து அறிவுறுத்தியமையும் வரவேற்புக்குரியது என ஐக்கிய சமூக சங்கத்தின் தலைவர் புலஸ்தி வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.தினமும் இணையம் மூலமான குற்றங்கள் தொடர்பில் 14000 முறைபாடுகள்...

வியாழன், 21 செப்டம்பர், 2023

மாத்தறை கனங்கே பகுதியில்உருவாக்கப்பட்டுள்ள சோசலிச பஸ் தரிப்பிடம்

மாத்தறை கனங்கே பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த பஸ் தரிப்பிடம் உழைப்பு மற்றும் சோசலிசத்தின் சின்னங்களான அரிவாள் மற்றும் சுத்தியலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் இளைஞர்கள் குழுவால் கட்டப்பட்ட இந்த பஸ் தரிப்பிடம், பாடசாலை மாணவர் ஒருவரால் திறக்கப்பட்டது.என்பதும்...

புதன், 20 செப்டம்பர், 2023

பெல்ஜியத்தில் புராதன சிலையை உடைத்த சுற்றுலா பயணிக்கு பதினாறு லட்சம் அபராதம்

பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்தனர்.இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள்...

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்பெறுமதி வாய்ந்த சிகரட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் 45 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுங்க திணைக்கள அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகைதானவர்களிடம் இருந்து 45 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள்...

திங்கள், 18 செப்டம்பர், 2023

இரத்தினபுரி பிரதேசத்தில் உணவு விஷமானதால் மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நாடு திரும்பும் போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிறுவர்கள்...

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

யாழ் தாவடியில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் ஐவர்: வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் யுவதியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசிய குற்றச்சாட்டில், அந்த யுவதியை காதலித்ததாக கூறப்படும் இளைஞன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாவடியில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது16-09-2023 சனிக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசியதுடன் , வீட்டின் மீதும் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீதும்...

சனி, 16 செப்டம்பர், 2023

நாட்டில் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் அகற்ற நடவடிக்கை

பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.வெளிநாட்டைக் குறிப்பாக இலக்குவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் இதுபோன்ற உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதன்...

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

கடுவெல நீதவான் மீது லேசர் பேனாக் கற்றையை பயன்படுத்திய ஆசிரியர் கைது

நாட்டில் டியூஷன் வகுப்புகளில் விளக்கமளிக்கப் பயன்படுத்தப்பட்ட லேசர் பேனாவை நீதிமன்றத்தில் தவறாகப் பயன்படுத்ய ஆசிரியர் ஒருவர் மீது கடுவெல நீதிமன்றில் 15-09-2023.இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார வழக்கு ஒன்றை நடத்தியபோது லேசர் பேனாக் கற்றையை நீதவான் மீது காட்டி கடமைக்கு குறுக்கிட்டதால் நீதிமன்றப்...

வியாழன், 14 செப்டம்பர், 2023

சாம்பல்தீவில் வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரையும் வியக்க வைத்துள்ளது

நாட்டில்  திருகோணமலையில் இடம்பெற்ற வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.இத் திருமணம் 07-09-2023.வியாழக்கிழமை அன்று திருகோணமலை சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது.உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த உறுதிஇத் திருமண பந்தத்தில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினர் இணைந்து...

புதன், 13 செப்டம்பர், 2023

போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள் , சுகாதார உதவியாளர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் போன் பாவிக்க யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் "கானுலா" பொறுத்தப்பட்டமையால்...

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

நாட்டில் ரயில் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 12-09-2023.அன்று மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய பயணிகள் ரயில் சேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் ரயில்வே திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டும்...

திங்கள், 11 செப்டம்பர், 2023

மடு சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் விநியோகம் துண்டிப்பு க்கு வெளியான தகவல்

நாட்டில்  மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன் சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் வினியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்ட நிலையில்,முழுமையான நிலுவை தொகையை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை என பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் மின் கட்டணம்...

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

சீன பொறியியலாளர்களை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பணியமர்த்துவது குறித்து தகவல்

நாட்டில்  நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் பரப்பப்படும் விடயங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது அந்த சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்னவின் கையொப்பத்துடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த...

சனி, 9 செப்டம்பர், 2023

போலியாக விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்காவில் கைது

போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் 08-09-2023.அன்று  மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  08-09-2023.அன்று...

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் மிரட்டிய தமிழர்கள் அதிரடிக் கைது

கனடாவின், கிரேட்டர் டொராண்டோ பகுதியில் இயங்கிய வாகனத் திருட்டு குற்ற வலையமைப்பை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.இந்த குற்றக்கும்பலில் இலங்கைத் தமிழர்களும் உள்ளடங்குகிறார்கள். “புராஜெக்ட் வின்னி” என பெயரிடப்பட்ட நடவடிக்கையை கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக பீல் பொலிசார் மேற்கொண்டு, இந்த குற்றவலையமைப்பை கைது செய்துள்ளனர்.2 தமிழர்கள் உள்ளிட்ட...
Blogger இயக்குவது.