தற்போது நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் நீடிக்கும் சாத்தியம் உள்ளது. அதனால் இடி, மின்னலுடன் கூடிய மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
அதேநேரம் வங்களா விரிகுடாவில் மையம் கொண்டிருந்த உயர் அழுத்த காற்று இலங்கைக்கு அப்பால் பயணிப்பதால் சூறாவளி காற்று ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லாது போயுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் அதிகாரி அதுல கருணாரத்ன
தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்
தெரிவிக்கையில்,
தற்போதும் நாட்டின் மேற்குஇ சப்ரகமுவ,தெற்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் சாத்தியம் உள்ளதை வானிலை அவதான நிலையத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
மேல்மாகாணத்திற்கு அதிக மழைவீழ்ச்சி
பதிவாவதற்கான சாத்தியப்பாடுகளும் தென்படுகின்றன. எவ்வாறாயினும் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த உயர் அமுக்க காற்று தற்போது இலங்கைக்கு அப்பால் பயணிக்க ஆரம்பித்துள்ளதால் சூறாவளி தாக்கம் ஏற்படுவதற்கான வாய்புக்கள் இல்லாது போயுள்ளன.
இருப்பினும் நாட்டின் மலையகம் மற்றும் வடக்கு பிரதேசங்களில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர்கள் வேகத்தில் காற்றுவீசும் கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 ஆக காணப்படும்.
மலையக பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மரங்கள் முறிந்து விழுந்து அதிகளவிலான அனர்த்தங்கள்
ஏற்படக் கூடும்.
அதேபோல் இடி மின்னலுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என்று அறியப்பட்டுள்ளது. மின்னலின் தாக்கம் அதிகரிப்பை காண்பிக்கக்கூடும். இந்த காலநிலை மே மாதத்தில் தொடங்கி செப்டெம்பர் வரையில் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக