சனி, 21 மார்ச், 2026

நாட்டில் எரிபொருள் பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

.நாட்டில்  ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் 
பிரிவினருக்குக் 
கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் சுமார் 20 லீற்றர் பெற்றோல் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் 
பிரிவினருக்குக் கிடைத்த 
தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் சுமார் 20 லீற்றர் பெற்றோல் ஆகியன மீட்கப்பட்டுள்ளனஎன்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் நீர்கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 76 இந்தோனேசியர்கள் கைது

நாட்டில் .நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், அதன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும்குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், அதன் புலனாய்வுப் பிரிவு
 அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சுற்றுலா விசா மற்றும் வணிக விசா வசதிகளின் கீழ் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், அவர்களில் 36 பேரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய 40 இந்தோனேசியர்களும் விசா நிபந்தனைகளை
 மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜவின் அறிவுறுத்தலின் பேரில், இவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 20 மார்ச், 2026

ஐரோப்பாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் எரிவாயு விலை முப்பது சதவீதத்திற்கும் மேல் உயரக்கூடும்

.தற்போது  ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர் உலகளாவிய விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், இந்தக் குளிர்காலத்தில் ஐரோப்பிய எரிவாயு விலைகள் கடுமையாக உயரக்கூடும் என ப்ளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் எச்சரித்துள்ளது.
கத்தாரின் ராஸ் லஃபான் வளாகத்தில் நடைபெறும் தாக்குதல்களால் உலகளாவிய LNG விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் தடைபடும் அபாயம் இருப்பதால், ஒரு மெகாவாட்-மணிக்கு விலை 
சுமார் 66 யூரோக்களில் ($75) இருந்து 90 யூரோக்களாக ($103) உயரக்கூடும்.
பதற்றம் விரைவில் தணிந்தாலும், நீண்டகால 
மின்வெட்டு ஏற்படக்கூடும் என்றும், இது விநியோகத்தை இறுக்கி, ஆசிய வாங்குபவர்களுடனான போட்டியை அதிகரிக்கும் என்றும் முன்னறிவிப்பு 
சுட்டிக்காட்டுகிறது.
ஐரோப்பா முழுவதும் சேமிப்பு அளவு குறைவாக இருப்பது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது வரும் மாதங்களில் எரிசக்தியின் விலை கட்டுப்படியாகுமா என்பது குறித்த கவலைகளையும், 
எரிசக்திப் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பக்கூடும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


மனித உடலின் உள் புதைபடிவ எரிபொருள் எரிப்பு விளைவு: வேதியியல் மாற்றம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை (CO2) அதிகளவில் கலக்கச் செய்வது, பூமியை வெப்பமாக்குவதுடன் நில்லாது, நமது உடலின் உட்புற வேதியியல் கட்டமைப்பையே (Internal Blood Chemistry) மாற்றி வருவதாக அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அவுதிரேலியாவின் 'தி கிட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' (The Kids Research Institute Australia) சுவாச சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரிவுத் தலைவர் அலெக்ஸ் லார்கோம் (Alex Larcombe) தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் கடந்த 20 ஆண்டுகால (1999-2020) சுமார் 7,000 பேரின் இரத்தப் பரிசோதனைத் தரவுகளை ஆய்வு செய்ததில் இந்த
 உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. மனித பரிணாம வரலாற்றில் வளிமண்டல CO2 அளவு சுமார் 300 ppm ஆகவே நீடித்தது. ஆனால் இன்று அது 420 ppm-ஐக் கடந்துள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றில் CO2 அதிகரிக்கும்போது, அது இரத்தத்தில் கலந்து அமிலத்தன்மையை (Acidity) 
அதிகரிக்கிறது.
இதனைச் சமன் செய்ய நமது உடல் 'பைகார்பனேட்' (Bicarbonate) என்ற உப்பை அதிகளவில் உற்பத்தி செய்து தக்கவைக்கத் தொடங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மனித இரத்தத்தில் பைகார்பனேட் அளவு 7 சதவீதம் 
அதிகரித்துள்ளது. மேலும், இரத்தத்தின் அமிலத்தன்மையைக் குறைக்க எலும்புகள் அந்த அதிகப்படியான கார்பனை உறிஞ்சி 'கால்சியம் கார்பனேட்டாக' மாற்றித் தன்னுள் புதைக்கின்றன.
 இதன் விளைவாக
 இரத்தத்தில் கால்சியம் 2 சதவீதமும், பாஸ்பரஸ் 7 சதவீதமும் குறைந்துள்ளன. இதே நிலை நீடித்தால், அடுத்த 50 ஆண்டுகளில் மனித எலும்புக்கூடு, சிறுநீரகம் மற்றும் மூளைச் செயல்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என இந்த ஆய்வு எச்சரிக்கப்பட்டுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



உங்கள் பழைய ஐபோன்களுக்கு ஆபத்து: அப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை

. பழைய வகை இயங்குதளங்களில் (iOS) இயங்கும் ஐபோன்களைக் குறிவைத்துத் தாக்கக்கூடிய புதிய உளவு மென்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால், பயனர்கள் உடனடியாகத் தங்கள் மென்பொருளைப் புதுப்பிக்குமாறு (Update) அப்பிள் நிறுவனம்
 அறிவுறுத்தியுள்ளது.
Lookout, iVerify மற்றும் கூகுள் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இணைந்து 'டார்க்ஸ்வேர்ட்' எனப்படும் இந்த ஆபத்தான மென்பொருளைக் கண்டறிந்துள்ளனர்.
2025 மார்ச் முதல் ஓகஸ்ட் வரை வெளியான iOS 18.4 முதல் 18.6.2 வரையிலான பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன்கள் இதன் மூலம் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 220 முதல் 270 மில்லியன் ஐபோன்கள் இத்தகைய பழைய பதிப்புகளில் இயங்கி வருவதாக ஆய்வாளர்கள் 
மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த உளவு மென்பொருள் குறிப்பாக யுக்ரைன் மக்கள், சீன கிரிப்டோகரன்சி பயனர்கள் மற்றும் சவூதி அரேபியா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துச் செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மென்பொருள் மூலம் மின்னஞ்சல்கள், பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், புகைப்படங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி வாலட்கள் போன்ற மிக முக்கியமான தரவுகளைத் திருட முடியும். இது மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் 
எச்சரிக்கின்றனர்.

இது குறித்து அப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பயனர்கள் தங்கள் சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், மென்பொருளைத் தொடர்ந்து புதுப்பிப்பதாகும்," என கூறியுள்ளார்.
அப்பிளின் சமீபத்திய iOS 26 பதிப்பு இந்தத் தாக்குதல்களில் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. அதேபோல், புதிய பதிப்பிற்கு மாற முடியாத பழைய ஐபோன் பயனர்களுக்காக, இந்த வைரஸைத் தடுக்கும் வகையில் ஒரு சிறப்புப் பாதுகாப்பு அப்டேட்டையும் அப்பிள் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
"சாதாரண பயனர்களால் இத்தகைய தாக்குதல்களைக் கண்டறிய முடியாது என்பதே இதில் உள்ள அச்சமூட்டும் விஷயம்" என்று Citizen Lab ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 19 மார்ச், 2026

நாட்டில் மரக்கறிகளின் விலைகளும் மிக அதிகரித்துள்ளன

தற்போது  நாட்டில்  ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கும் விற்பனை
 செய்யப்பட்டது. கெப்பட்டிபொலயில் போஞ்சி ஒரு கிலோகிராம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 260 ரூபாயக்கும் கெப்பட்டிபொலயில் 160 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை 
செய்யப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கும் விற்பனை 
செய்யப்பட்டது. கெப்பட்டிபொலயில் போஞ்சி ஒரு கிலோகிராம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 260 ரூபாயக்கும் கெப்பட்டிபொலயில் 160 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை
 செய்யப்பட்டது.
இதேவேளை பீட்ரூட் ஒரு கிலோகிராம், நுவரெலியா மற்றும் கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கு விற்பனை 
செய்யப்பட்டது.
அதேநேரம், நுவரெலியாவில் ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 350 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 340 ரூபாய்க்கும் விற்பனை
 செய்யப்பட்டது.
கெப்பட்டிபொலயில் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 300 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 180 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 18 மார்ச், 2026

நாட்டில் புதன்கிழமைகலில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடைவிதிப்பு

இலங்கையில் விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்
 என்பதும்  குறிப்பிடத்தக்கது   

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.