சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய திட்டமிடும் அரசாங்கம்

 நாட்டில்  டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் சுகாதார அமைச்சில் சந்திப்பின்போதே
 இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக 
குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன்போதுசுகாதார அமைச்சகத்தின் கீழ் NFTH ஐ கையகப்படுத்தவும், சிறப்பு மருத்துவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
 இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம் பாரிய செலவைச் சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை 
முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது.




வியாழன், 28 நவம்பர், 2024

நாட்டில் உள்ளுராட்சி தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில்உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
இதன்படி தேர்தல் ஆணைக்கு 27-11-2024.அன்று கூடி கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது. 
பரீட்சைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

நாட்டில் புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும்
 பூட்டி.27-11-2024.  இன்று புதன்கிழமை மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர்.
 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு
 வழங்கியுள்ளதாக
 புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு இன்று மாலை அஞ்சலி செலுத்துவதற்கு 
தயாராகி இருக்கின்றன. மேலும் மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில்.27-11-2024. புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது தியாகி திலீபனின் நினைவுத் தூபி 
முன்பாகவும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மாவீர்ர் நினைவாலயம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையிலான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.







 

செவ்வாய், 26 நவம்பர், 2024

நாட்டில் ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடும் அரசாங்கம்

நாட்டில் கல்வி வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 
 இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர்,  கல்வியில் விரிவான சீர்திருத்தத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட 
வேண்டும் என்றார். 
 தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கல்வியின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் தொடர்பிலான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  முறையான கலந்துரையாடலின் பின்னர், 
ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது  


 


 

திங்கள், 25 நவம்பர், 2024

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இலங்கையில் தடையில்லை அனுர அரசாங்கத்தின் முடிவிற்கு பெரும் வரவேற்பு

 

இலங்கையில் மாவீரர் தின வார நினைவுகூரல் நிகழ்வுகள் தற்பொழுது ஆரம்பமாகி நினைவுகூரப்பட்டு வருகின்றது.
 இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடந்த இந்த சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்த மாவீரர் தின நிகழ்வுகள் பற்றிய 
ஐய்யப்பாடுகள் எழுந்த வண்ணம் இருந்தன.
ஆனால் அரசாங்கம் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடையில்லை என அறிவித்துள்ளது. அதாவது நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து அதற்கு இணங்க மாவீரர் தினத்தை கடைப்பிடிக்குமாறு பொது 
பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால 
தெரிவித்துள்ளார்.
 போரின் போது உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது எனவும் நினைவுகூருவதற்கான உரிமை 
மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறும் கோரிக்கை 
விடுத்துள்ளார்.
 யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு இலங்கையில் மாவீரர் தின நினைவேந்தல்களிற்கு கடந்த கால அரசாங்கங்களினால்  தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் துயிலும் இல்லங்களுக்கு
 எதிராகவும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றங்களை பொலிஸார் நாடுவது வழமையாக நடந்து வரும் செயற்பாடாக இருந்தது. 
 அவ்வாறு இருந்தும் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒரு சிலரால் இந்த நினைவேந்தல் அனுஷ்ட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இது முற்றிலுமாக மாறி அரசாங்கம் தற்பொழுது 
வெட்டவெளிச்சமாக தடையில்லை என அறிவித்துள்ளமை அனுர அரசாங்கம் மீது தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை
 ஊட்டியிருக்கின்றது.
 அரசாங்கம் பொலிசாருக்கும் மாவீரர் தினம் தொடர்பில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதாவது மாவீரர் தின நிகழ்வுகளில் பொது மக்கள் பங்கேற்கும் பொழுது 
அவர்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
அதே போல் பாதுகாப்பு படையினருக்கும் இந்த அறிவுறுத்தலை அரசாங்கம் விடுத்துள்ளது. அதே போல் 26 மற்றும் 27ம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு முடிவு 
எடுக்கப்பட்டிருந்த 
நிலையில் மாவீரர் தினம் காரணமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக குறித்த 
அமர்வுகளை ஒத்திவைத்துள்ளமையும் என்பதாகும் .
 இவற்றை எல்லாம் நோக்கும் பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஒரு வித நம்பிக்கையை ஊட்டும் செயற்பாடாக அமைந்துள்ளது. 
 இந்த நிலையில் இலங்கையில் என் பி பி அரசாங்கத்தினால் மாற்றம் நிகழும் என்பது ஒரு நம்பிக்கைக்குரிய விடயமாக
 அமைந்துள்ளது.
 எதுஎவ்வாறாக இருந்தாலும் மாவீரர் தின நிகழ்வுகள் இலங்கையில் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கு தடை நீக்கத்தை செய்த என் பி பி அரசாங்கத்திற்கு இந்த இணையமும் நன்றிகளை தெரிவிக்கின்றன 
என்பது குறிப்பிடத்தக்கது 



ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் மாவீரர்கள் தினத்துக்கு தடை இல்லை தேசிய மக்கள் சக்தி அறிக்கை

தமிழ் மக்கள் உயிர்நீத்தவர்களுக்கான வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது.
அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தமுடியும் என்று புதிய அரசின் கடற் றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர்நீத்தவர்கள் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்.பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்கவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 தமிழ் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 என்பது குறிப்பிடத்தக்கது.




Blogger இயக்குவது.