செவ்வாய், 7 ஏப்ரல், 2026

இலத்திரனியல் ஸ்கூட்டர் இங்கிலாந்தில் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை


இங்கிலாந்து முழுவதும் இ-பைக் மற்றும் இ-ஸ்கூட்டர் தீ விபத்துகள் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளன. சுமார் 432 இ-பைக் தீ விபத்துகளும், 147 இ-ஸ்கூட்டர் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. 
இது முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். இந்த அபாயகரமான தீ விபத்துகள், பெரும்பாலும் பழுதடையும் பேட்டரிகள், மாற்று கருவிகள் அல்லது சார்ஜர்களால் ஏற்படுவதாக
 கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, குறைந்த கடுமையான விதிமுறைகளைக் கொண்ட ஆன்லைன் சந்தைகள் மூலம் வாங்கப்படும் “குறைந்த விலைப் பொருட்களால்” இவை ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஏற்படும் தீ வேகமாகப் பரவி, நச்சு ஆவியை உருவாக்கக்கூடும். இது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 6 ஏப்ரல், 2026

நாட்டில் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து, ரயில் சேவைகள்

நாட்டில் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி சுமார் 1500 மேலதிக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 
ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, கண்டி, பண்டாரவளை, அனுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குப் பேருந்துகள்
 இயக்கப்படவுள்ளன.
காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களை மையப்படுத்தி, அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
ரயில்வே திணைக்களமும் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் விசேட புத்தாண்டு சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறிப்பாக, கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு வழித்தட ரயில் சேவைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார் .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் சூரியன் உச்சம் கொடுப்பதால் வெப்பம் அதிகரிப்பு வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப அறிவுறுத்தலை 
விடுத்துள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்'நாட்டின் பல மாகாணங்களில் 'அவதானம்' செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த வெப்ப அதிகரிப்பு நிலவும் என
 எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாள் முழுவதும் போதியளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொண்டு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும். முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருப்பதுடன், அவ்வப்போது வேலைகளுக்கு மத்தியில் ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.
இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான ஆடைகளை அணியவும். கடுமையான வெயில் நிலவும் நேரங்களில் கடினமான வெளிப்புற வேலைகள் மற்றும் உடற்பயிற்சிகளைக் குறைத்துக்கொள்ளவும்.
முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக கவனம் செலுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும்.தொடர்ச்சியாக நிலவும் இந்த வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் அதிகமான எரிபொருட்களுடன் முப்பத்தி ஒரு பேர் கைது

 இலங்கைமுழுவதும் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 03 முதல் நேற்று (04) வரை மேற்கொள்ளப்பட்ட  இந்த கைது நடவடிக்கையின் போது 47,006 லிட்டர் டீசல், 2,668 லிட்டர் பெற்றோல் மற்றும் 2,706 லிட்டர் மண்ணெண்ணெய் உட்பட 52,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

நாட்டில்மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி
 முதல் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் 
ஆரம்பிக்கப்படவுள்ளது.
மஹவ மற்றும் ஓமந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஐந்து பிரதான புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கும் பணிகள் மற்றும் யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை நவீனமயப்படுத்தும் பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி முதல் வடக்குக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளின் வசதி கருதி எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் இந்தச் சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளன.  என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 4 ஏப்ரல், 2026

நாட்டில் பண்டிகைக் காலத்தில் தொலைபேசி ஊடாக இடம்பெறும் சைபர் மோசடிகள் அதிகரிப்பு

நாட்டில் பண்டிகைக் காலங்களில் தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் சைபர் (Cyber) மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு நிலையம் (SLCERT) எச்சரிக்கை
 விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிலையத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல கருத்துத் தெரிவிக்கையில் "எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு 
தள்ளுபடிகள் (Discounts), பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் (Links) சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாகப் பரப்பப்படும் அபாயம் காணப்படுகிறது.
"என தெரிவித்துள்ளார். எனவே, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அழுத்துவதையோ அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையோ தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் நீதி வென்றது பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக நீதிமன்றத்தின் தீர்ப்பு

கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய கூலித் தொழிலாளி ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த இளைஞர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, காவல்துறை காவலில் தான் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்து குறித்த இளைஞர் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, கே. பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
இதனையடுத்து, மனுதாரரின் அடிப்படை உரிமைகள்
 காவல்துறையினரால் மீறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினர். இதன்போது, தனிநபர்களின் வறுமை அல்லது சமூகப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, சட்டம் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அவர்களை பாரபட்சமாக நடத்த அரசியலமைப்பு இடமளிக்காது" என நீதியரசர்கள் 
சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இழப்பீட்டுத் தொகையான 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் வழங்கக் கூடாது எனவும், குற்றம் இழைத்த மூன்று காவல் அதிகாரிகளும் தலா 75 ஆயிரம் ரூபா வீதம் தமது சொந்தப் பணத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
மேலும், குறித்த அதிகாரிகளின் நடத்தை குறித்து தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய காவல் நிலைய ஆணைக்குழுவிற்கும் உயர் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



Blogger இயக்குவது.