புதன், 25 மார்ச், 2026

தி. வேல்நம்பி யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்பு

 யாழ்  பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி .25-03-2026.இன்றைய தினம் புதன்கிழமை 
பதவி ஏற்றார்.
பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப்
 பொறுப்பேற்றார்.
பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



மட்டக்களப்பில் சந்தேகநபர்களின் உறவினர்களுக்கும் வலைவீச்சு

நாட்டில்  மட்டக்களப்பு  கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசாரணை அதிகாரி ஒருவர் சூரியன் செய்திப் பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக விசாரணை 
அதிகாரி தெரிவித்தார்.
குறிப்பாக, சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித பணிகளுக்கும் செல்லாது சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக 
தெரியவந்துள்ளது
 .அதற்கமைய, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக விசாரணை 
அதிகாரி தெரிவித்தார்.
குறிப்பாக, சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித பணிகளுக்கும் செல்லாது சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக 
தெரியவந்துள்ளது.
அதற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளதாக விசாரணை 
அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில், இவ்வாறான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, அவர்களும் சந்தேக நபர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனரா என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சந்தேக நபர்களில் முச்சக்கர வண்டி சாரதியான பிரதான சந்தேக நபர், நிதி கொடுக்கல் வாங்கல்களிலும் மோசடிகளைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, இந்த குழுவினர் மேலும் பல சம்பவங்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக விசாரணைகளை முன்னெடுத்து 
வரும் விசாரணை அதிகாரி ஒருவர் சூரியன் செய்திப் பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 24 மார்ச், 2026

நாட்டில் .ஏப்ரல் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலை திருத்தம்

நாட்டில் சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன 
தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன 
தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளது. அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும். எவ்வாறாயினும், 
சர்வதேச சந்தையில் 
எரிசக்தி உற்பத்திக்கு நிலவும் கேள்வியின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி புதிய விலை அதிகரிக்கப்படும்” என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 23 மார்ச், 2026

நாட்டில் மட்டக்களப்பில் நகைக்காக கொலைகளில் ஈடுபட்ட இருவர் கைது

நாட்டில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு 
ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 
ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இவர்களிடமிருந்து ஒரு கார், இரண்டு 
முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
 நெல்லிக்காடு வயல் பகுதியிலுள்ள பாழடைந்த
 கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஐந்து சந்தேக நபர்கள் கைது 
செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு கார், இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்தக் குழுவினர் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்குத் தனது மூன்று வயதுக் குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் திடீரெனக் காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை, குறித்த தாய் பாழடைந்த
 கிணறு ஒன்றிலிருந்து உயிருக்குப்போராடிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது
 குழந்தை அருகில் உள்ள வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு 
பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டமை பெரும் 
பரபரப்பை ஏற்படுத்தியது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி. மேனன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளம் காணப்பட்டது. அதன் அடிப்படையில் வவுணதீவு, காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மற்றும் கணவனின் சகோதரன் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின:
கடந்த வியாழக்கிழமை பேருந்துக்காகக் காத்திருந்த அந்த இளம் தாயைக் கண்ட தம்பதியினர், “நாங்களும் மட்டக்களப்பு நகருக்கே செல்கிறோம்” என்று கூறி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். நகருக்குச் சென்ற அந்தத் தாய், அங்கு தனது நகைகளை அடகு மீட்டுள்ளார். பின்னர் மீண்டும் வவுணதீவு திரும்பும் வழியில், “குறைந்த வாடகையில் அழைத்துச் செல்கிறோம்” எனக் கூறி அவரை மீண்டும் ஏற்றியுள்ளனர்.
வலையிறவு பாலத்தை அண்மித்தபோது, அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மயக்கமடைந்ததும், குழந்தையை வயல் பகுதியில் எறிந்துவிட்டு, 
பெண்ணின் 4.5 பவுண் தாலிக்கொடியைப் பறித்துள்ளனர். பின்னர் மயக்க நிலையில் இருந்த பெண்ணை நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதே பாணியில் கடந்த 28ஆம் திகதி திக்கோடையைச் சேர்ந்த 45 வயதுடைய ரவி நளாயினி என்பவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி, மயக்க மருந்து கொடுத்து, அவரது 7 பவுண் தாலிக்கொடியைப் பறித்துவிட்டு
 அதே கிணற்றில் வீசியுள்ளனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று 
அதன் மூலம் கார் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதாகச் சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமன்றி, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 
சில ஆயுதங்களும்
 மீட்கப்பட்டுள்ளன. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் பேருந்து கட்டண அதிகரிப்பு- இன்று அமைச்சரவைப் பத்திரம்

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் 
சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்த சூத்திரத்தின்படி தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பேருந்து கட்டண திருத்தம் நேற்று (22) முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் என பல பேருந்து சங்கங்கள் 
தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சென்ற போதிலும் தமக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என சங்கப் பிரதிநிதிகள் குற்றம் 
சாட்டியுள்ளனர்.
நேற்றைய தினம் கட்டண திருத்தம் இடம்பெறாத காரணத்தினால், இன்றைய தினம் பேருந்து சேவைகளில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



ஞாயிறு, 22 மார்ச், 2026

நாட்டு மக்கள் தியாகங்களைச்செய்ய வேண்டும்

நாட்டு மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. மார்ச் 24 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை 
முன்னெடுக்க முடியும்.
 இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய்  மற்றும் நெப்தா  ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D ராஜகருண,22-03-2026. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 இது ஒரு பாரிய பிரச்சினை.  ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த 
நெருக்கடியால் இரவு
 நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கிறோம். அவ்வாறு 
செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D ராஜகருண.22-03-2026. இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
  என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புகையிரத கடவைக்காக யாழில் நீண்ட காலமாக தொடரும் போராட்டம்

 யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட புகையிரத கடவையை மீள திறக்க கோரி அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும் வீதியில் புகையிரத கடவை ஒன்று அமைந்திருந்தது. 
குறித்த கடவை 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக புகையிரத பாதையில் காணப்பட்டமைக்கான குறிப்புக்கள் , வரைபடங்கள் இல்லாத காரணத்தால் , புகையிரத பாதையில் அப்பகுதியில் கடவை அமைக்க முடியாது என புகையிரத திணைக்களம் மறுத்து வந்தது. 
இருந்த போதிலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குறித்த இடத்தில் புகையிரத கடவை முன்னர் இருந்ததாகவும் , அதன் அடிப்படையில் கடவை அமைக்கப்பட வேண்டும் என கோரி கடவை அமைத்து
 பயணித்து வந்தனர். 
அந்நிலையில் குறித்த கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்பட்டமையால் , 2018ஆம் ஆண்டு பாதுகாப்பு கடவையாக மாற்ற அப்பகுதி மக்கள் சிலர் இணைந்து முயற்சித்தனர். 
அதேநேரம் குறித்த பகுதியில் புகையிரத கடவை அமைக்க வேண்டும் என கோரி யாழ். மாநகர சபையில் 2018ஆம் ஆண்டு பிரேரணை கொண்டு வரப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 
அது தொடர்பில் புகையிரத திணைக்களத்துடன் நேரில் சென்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து அதற்கு 
மறுப்பு தெரிவித்து வந்தனர். 
அதேநேரம் கடவைக்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாட்டையும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் , பொலிசார் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் அவை அகற்றப்பட்டன. 
இவ்வாறாக தொடர்ந்து பல வருடங்களாக குறித்த பகுதியில் கடவை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைத்து வரப்பட்ட நிலையில் , அண்மையில் புகையிரத திணைக்கள 
அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் புகையிரத பாதையில் அமைக்கப்பட்டிருந்த கடவை முற்றாக அகற்றப்பட்டு , குறித்த பகுதி ஊடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டது. 
இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடவை அகற்றப்பட்ட பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் , புகையிரத திணைக்களத்துடன் பேசி பாதுகாப்பான நிரந்தர கடவை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு 
உறுதி அளித்திருந்தார். 
இந்நிலையில் , தமக்கு அப்பகுதியில் பாதுகாப்பான நிரந்தர புகையிரத கடவை அமைத்து தர வேண்டும் என கோரி ஏனைய அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக அப்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.