வியாழன், 7 செப்டம்பர், 2023

நாட்டில் இவ்வருடத்திற்குள்வாகன இறக்குமதி சாத்தியமற்றதாம் நிதி இராஜாங்க அமைச்சர்

இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 290 வகையான வாகன இறக்குமதிக்கு இவ்வருட இறுதிக்குள் அனுமதி வழங்குவது என்பது சாத்தியமற்ற ஒன்று என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
 இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி அனுமதி வழங்குவது தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
 பிரத்தியேக பாவனைக்காக அல்லாது ஏனைய தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து 
எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னதாக, இதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இவ்வருட இறுதிக்குள் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தாக செய்தி வெளியானது.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 6 செப்டம்பர், 2023

எயார் கனடா கனடா விமானத்தில் வாந்திக்கு மன்னிப்பு கோரிய நிறுவனம்

கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
 விமானம் ஒன்றில் இருக்கைகளில் வாந்தி காணப்பட்டதாகவும் இவை உரிய முறையில் சுத்தம் செய்யப்படவில்லை எனவும் 
தெரிவிக்கப்படுகிறது.
 அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் முதல் மொன்றியால் வரையில் பயணத்தை மேற்கொண்ட விமானம் ஒன்றில் இவ்வாறு பயணிகள் இருக்கைகள் அசுத்தமாக காணப்பட்டுள்ளது.
 கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். 
அசௌகரிகங்களை எதிர்நோக்கிய அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாகவும், இந்த விடயம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் எயார் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 5 செப்டம்பர், 2023

செனல் 4 காணொளியின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம்
 வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களின் பின்னணியில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் 
செயற்பட்டுள்ளதாக, கொழும்பின் சிங்கள ஊடகம் செய்தி 
வெளியிட்டுள்ளது.
 இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக நாளைய தினம் (செப்டெம்பர் 05) பிரித்தானியாவின் செனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக ’தி டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பல வருடங்கள் ராஜபச்சக்களின் விசுவாசியாக இருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருக்கும், ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் வழங்கிய 
சாட்சியங்களின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தி டைம்ஸ் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், அசாத் மௌலானாவிற்கு சுவிட்சர்லாந்தில் அகதி 
அந்தஸ்த்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், உயிர்த்த
 ஞாயிறு தாக்குதல் தொடர்பில், 
அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, திட்டமிட்ட வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அத பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி 
குறித்த காணொளி செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அரச புலனாய்வுப் பிரிவின் 
பிரதானி மேஜர் ஜெனரல் 
சுரேஷ் சலே, தனது சட்டத்தரணி ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த ஒளிபரப்பு பிற்போடப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், சுரேஷ் சலேவிற்கும் இடையிலான தொடர்பு குறித்த அசாத் மௌலானா வெளிப்படுத்தியுள்ள அனைத்து
 விடயங்களும் உண்மைக்கு புறம்பானவை எனவும், 
மௌலானா குறிப்பிடும் காலப்பகுதியில் சலே இலங்கையில் சேவையில் இருக்கவில்லை எனவும், சலே ஆவணங்களுடன் செனல் 4விற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும், குறித்த அத பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 4 செப்டம்பர், 2023

நாட்டில் வங்காலையில் இடம்பெற்ற மாபெரும் குருதிக்கொடை முகாம்

மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கு மக்களுடன் வன்னி மண் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் குருதிக்கொடை முகாம்  03-09-2023.அன்று ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித 
ஆனாள் ஆலய வளாகத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 2.00 மணி வரை நடை பெற்றது.
 'உதிரத்தை தானம் செய்!உதிரப் போகும் ஒரு உயிர் உதிராமல் இருக்க காவல் செய்' என்ற நோக்கத்திற்காக நடைபெற்ற இரத்த தான முகாமுக்கு நிதி அனுசரணை யாழ் மதர் கெயார் வைத்தியசாலை 
உரிமையாளர் வைத்திய கலாநிதி குலசிங்கம் சுரேஷ்குமார் 
வழங்கி வைத்தார்.
 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியினர் உதவிகளை வழங்கியிருந்தனர்.சுமார் 50க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் குருதி தானம் செய்திருந்தமை விசேட அம்சமாகும்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில் புயல் காரணமாக விமானங்கள் ரத்து

தீவு நாடான தைவானில் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில் புதிய புயல் உருவாகி உள்ளது. ஹைகுய் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தைவானின் மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. 
இது தைவானில் கரையை கடக்கும்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று அடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 28 சர்வதேச விமானங்கள் மற்றும் 18 உள்நாட்டு விமான சேவைகள் 
ரத்து செய்யப்பட்டு உள்ளன. சில விமானங்கள் புறப்பட தாமதமானது. 
இதனால் விமான நிலையத்துக்கு வந்திருந்த 
பயணிகள் பெரும் அவதியடைந்தனர். அதேபோல் பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்தும் அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 2 செப்டம்பர், 2023

தொழிற்றுறை, கைத்தொழில்கள் முயற்சிக்கான கண்காட்சி யாழ் கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு

யாழ் கலாச்சார மையத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வட மாகாண தொழில் கண்காட்சி அங்குரார்பன நிகழ்வு  01-09-2023.அன்று காலை 10மணியளவில் 
 நடைபெற்றது.
 இலங்கையில் உள்ள 20 தொழிற்சாலைகளில் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில், புத்தாக்கங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தொழில்கள் மற்றும் வடமாகாணத்திற்கே உரித்தான பல கைத்தொழில்களை Industry 2023 யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியில் உள்ளடக்கபட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான காசோலையும் வழங்கப்பட்டது. ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் வகையில், கைத்தொழில் 
அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ் கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாண கைத்தொழில் கண்காட்சி '2023 யாழ்ப்பாணப் ' செப்டம்பர் 01 முதல் 03 வரை யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் 
நடைபெறவுள்ளது.
 இதன் பொழுது கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி
 இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 1 செப்டம்பர், 2023

அக்கராயன் ஆணைவிழுந்தான் பிரதேச த்தில் இராணுவ முகாமை அகற்ற மக்கள் மறுப்பு

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் 01.09.2023.இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது பகுதியில் உள்ள 
இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயீர்ப்பு 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், தமது பகுதியின் அனைத்து தேவைகளையும் இராணுவத்தினரே பெரும்பாலும் நிவர்த்தி செய்கின்றனர்.
குறிப்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினை இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தமது பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.