வியாழன், 2 ஏப்ரல், 2026

வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்..மட்டக்களப்பு சாதனை

.நாட்டில்  2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31-03-2026.அன்று  நள்ளிரவு உத்தியோகபூர்வமாக
 வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

அகில இலங்கை ரீதியில் கணிதத்துறையில் முதலிடம்: சாதனை மாணவர்தெ. திருக்குமரன்

அகில இலங்கை ரீதியில் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மொழிமூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் 
தெய்வேந்திரன் திருக்குமரன் 
 முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த விடயத்தை பாடசாலையின் அதிபர் இளவேந்தி நிர்மலராஜ் எமது செய்திப் பிரிவுக்கு உறுப்படுத்தினார். அத்துடன், உயர்தர வணிகப் பிரிவில் மட்டக்களப்பு, 
காத்தான்குடி மகா 
வித்தியாலய மாணவன் மொஹமட் சுபைதீன் மொஹமட் பர்தான், அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக, பாடசாலையின் அதிபர் அஹமட் லெப்பை சப்ரி எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என 
குறிப்பிடப்பட்டுள்ளது
. இறுதியாக நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, பரீட்சை மோசடிகள் அல்லது ஏனைய காரணங்களுக்காக, 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெறுபேறுகள் தொடர்பாகத் திருப்தியடையாத மாணவர்கள், தமது 
விடைத்தாள்களை மறுசீராய்வு செய்வதற்
கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் எனப் பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

 

புதன், 1 ஏப்ரல், 2026

நாட்டில் இருளில் மூழ்கும் வீதிகள்; அதிகரித்துவரும் விபத்துக்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள்

இலங்கையில்அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வீதி மின்விளக்குகளை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அணைப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு ஜனாதிபதி, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அந்த சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , இலங்கையில் அதிகளவிலான வீதி விபத்துக்கள் இடம்பெறும் காலப்பகுதியாக இந்த இரவு நேரமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறானதொரு நேரத்தில் திட்டமிட்டு வீதி விளக்குகளை அணைப்பதானது, வீதிப் பாதுகாப்பை வேண்டுமென்றே சீர்குலைப்பதாகும். இதனை ஒரு மரணத்திற்குத் துணைபோகும் செயலாகவே 
நாம் பார்க்கிறோம்.
வீதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தல்.
பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்தல் என்பவற்றிற்கு இந்த விடயம் வழிவகுக்கும். அதேபோன்று பொதுமக்களின் பாதுகாப்பு முற்றாக சீர்குலையும்.
ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பசில் ராஜபக்ச இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதற்கு எதிராகவும் எமது அமைப்பு குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருந்தது. தற்போதைய அரசாங்கம் இவ்வாறான முட்டாள்தனமான தீர்மானங்களை தவிர்த்து, முறையாகச் செயற்படுமானால், அன்று இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்ட பசில் ராஜபக்ச போன்றவர்களை சட்டப்பூர்வமாக இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என 
நாம் நம்புகிறோம்.
வீதி மின்விளக்குகள் மற்றும் சமிஞ்ஞை விளக்குகளுக்கு சூரிய சக்தியைப் (Solar Power) பயன்படுத்துவதற்கோ அல்லது மின்சாரத் தடையின் போது அவை இயங்குவதை உறுதிப்படுத்தும் முறையையோ இதுவரை எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை. 
இது மனித உயிர்கள் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.

கல்வி அமைச்சு உடல் மற்றும் உள ரீதியான வன்முறையற்ற பாடசாலைச் சூழலை உருவாக்கக் நடவடிக்கை

இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மாணவர்களுக்கு எவ்விதமான உடல் அல்லது உள ரீதியான தண்டனைகளை வழங்குவதையும் முற்றாகத் தடைசெய்து கல்வி அமைச்சு புதிய கட்டளையை பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தல் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவினால் வெளியிடப்பட்டுள்ள 11/2026 இலக்க புதிய சுற்றுநிருபத்தின்படி, தண்டனை என்ற பெயரில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, 461/2012 (FR) இலக்க உயர் நீதிமன்ற
 தீர்ப்பின் அடிப்படையில், உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பில் "பூச்சிய சகிப்புத்தன்மை" (Zero Tolerance) கொள்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்: தண்டனை வழங்கும் நோக்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மாணவர்களுக்கு உடல் அல்லது உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது.இந்த விதிமுறைகளை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டப்படி
 நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு தண்டனைகளை வழங்குவதை விடுத்து, அவர்களின் நேர்மறையான நடத்தைகளை ஊக்குவிக்கும் முறைகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 31 மார்ச், 2026

வட்டக்கச்சி மாணவன் கதாப்பிரசங்க போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடம் பிடித்தார்

நாட்டில் இந்து வித்தியா விருத்திக்கழகம் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கதாப்பிரசங்க போட்டியில் தேசிய ரீதியில் 3ம் இடத்தைப் பெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த 
தரம் 07 மாணவன் 
கோ.தமிழரங்கன் தனது பரிசுப் பணத்தை முழுமையாக மாவட்ட விவாதிகள் கழகத்திற்கு வழங்கியுள்ளார். இந்த செயல் எங்களுக்கு பெருமையையும் நன்றியையும் அளிக்கிறது. 
தனது வெற்றியை தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளாமல், கழக வளர்ச்சிக்காக பகிர்ந்திருப்பது பாராட்டத்தக்கது. விவாதிகள் கழகத்தின்
 சார்பில் அவருக்கு மனமார்ந்த நன்றியை 
தெரிவித்துக்கொள்கிறோம். 
தமிழரங்கனின் இந்த செயல், மாவட்டத்தில் உள்ள சவால்கள் இருந்தாலும் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஒரு நல்ல நினைவூட்டலாக உள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழில் தந்தை செல்வாவின் நூற்றி இருபத்தி எட்டா வது ஜனனதினம்: நினைவேந்தல்.

தமிழ் தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நீண்ட நாட்களாக பணியாற்றினார்.
இவரது சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு இன்று வரையும் பல தமிழ் கட்சிகளின் கொள்கைகளாக இருந்து வருகின்றன.31-03-2026.. இன்று யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின்
 உருவ சிலைக்கு 
தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தமிழர் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மாணவர் சபை முதல்வர், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர் மாலை அணிந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது தந்தை செல்வநாயகம் தொடர்பாக தமிழரசு கட்சியின் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் கருத்துக்களை பகிர்ந்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



இலங்கையில் ஆறு மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டுதாரர்களுக்கு கட்டணமின்றி 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டினில் அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான ஆரம்பக்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட அதற்கான வரைவு உத்தரவுகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க அமைச்சரவை
 தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை தனது இறுதி அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 30 மார்ச், 2026

டீசல் விலை பிரிட்டனில் நாற்பது மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது

பிரிட்டனில் டீசல் விலை டிசம்பர் 2022-க்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் பெட்ரோல் விலையும் 28 மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் சராசரி விலை 152 பென்ஸாகவும், டீசலின் விலை 181.2 பென்ஸாகவும் உள்ளது.
ஈரான் மோதல் தொடங்கியபோது இருந்ததை விட, இப்போது ஒரு சாதாரண பெட்ரோல் குடும்பக் காருக்கு எரிபொருள் நிரப்ப £10.55 அதிகமாகச் செலவாகிறது டீசல் கார்களைப் பொறுத்தவரை, உரிமையாளர்கள் £21.35 கூடுதலாகச் செலுத்துகின்றனர்.
ஈரானில் நடக்கும் போரும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் சூழலும் உலகளாவிய எரிபொருள் விலைகளைக் கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக சில நாடுகள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன . இலங்கை எரிபொருள் பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள், மக்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க ஊக்குவிக்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கியுள்ளன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

மூன்று நிமிடங்களுக்குள் இத்தாலியில் தலைசிறந்த படைப்புகளைத் திருடர்கள் திருனர்

வடக்கு இத்தாலியில் உள்ள பார்மா நகருக்கு அருகிலுள்ள மமியானோ டி டிராவர்செடோலோவில் அமைந்துள்ள மக்னானி ரோக்கா அறக்கட்டளை அருங்காட்சியகத்திலிருந்து, பல மில்லியன் 
யூரோக்கள் மதிப்புள்ள பல ஓவியங்களைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை 
உறுதிப்படுத்தியது.
மார்ச் 22-23 ஆம் திகதி இரவில், மூன்று நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் நெற்செய்கைக்கு தடையின்றி உரம் - விவசாயத் திணைக்களத்தின் புதிய கட்டுப்பாடுகள்

இலங்கையில் .2026 ஆம் ஆண்டுக்கான யால பருவப் பயிர்ச்செய்கையின் போது, கையிருப்பிலுள்ள யூரியா உரத்தை நெற்செய்கைக்கு மாத்திரம் 
வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களம் 
தீர்மானித்துள்ளது.
தற்போது கையிருப்பிலுள்ள உரத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் உள்ளதைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடு முழுவதுமுள்ள விவசாய சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரமே இந்த உர விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நெற்செய்கை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள உரக் கையிருப்புகளை மிகவும் வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதர பயிர்ச்செய்கைகளை விட நெற்செய்கைக்கு முன்னுரிமை அளித்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கம் என விவசாய அபிவிருத்தித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 29 மார்ச், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று  இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 317.99 ரூபா
ஜப்பானிய யென் 2.02 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 424.83 ரூபா
யூரோ 367.62 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 222.96 ரூபா
சுவிஸ் பிராங் 401.62 ரூபா
கனடிய டாலர் 230.87 ரூபா
கத்தார் ரியால் 87.87 ரூபா
குவைத் தினார் 1046.94 ரூபா
சவுதி ரியால் 85.55 ரூபா

என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் வெளிச்சக்திகளின் தலையீடோ, நிதியூட்டலோ இன்றி பேச அழைப்பு

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வு ஒன்று மட்டுமே இத்தீவில் அவர்களுக்குரிய அரசியற் சமத்துவத்தை
 உறுதி செய்யும்
அரசியற் சமத்துவம் உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே மீளப்பெறமுடியாத அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும். 
வரலாற்று ரீதியாகவும் வழிவழியாகவும் தொடர்தேர்ச்சியான தனித்துவமான நில நீர்த் தொடர்ச்சி கொண்ட பாரம்பரியத் தாயகம் ஈழத்தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தானது என்பது இந்தச் சமத்துவத்தின் மூலமாக உறுதிசெய்யப்படவேண்டும்
அப்போது தான் திட்டமிட்ட அத்துமீறிய குடியேற்றங்கள் தாயகத்தைத் துண்டாடாமல் பாதுகாக்கமுடியும். 
அதாவது, ஈழத்தமிழர் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையும் அவர்களது தனித்துவமான இறைமையும் இவையிரண்டின் பாற்பட்டதான தாயகம் மீதான உரித்துக்கான அரசியல் அதிகாரம் பற்றியதே
 அரசியல் தீர்வு. 
ஈழத்தமிழர் தேசிய இனத்தைப் பொறுத்தவரை இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கம் அவர்களது அரசியல் விருப்பைப் புறக்கணித்து மட்டுமல்ல, அதற்கு முரணாகவே சோல்பரி (1947), குடியரசு (1972), ஜனாதிபதி ஆட்சியுடனான இரண்டாம் குடியரசு (1978) அரசியலமைப்புகளை ஜனநாயக ரீதியாக நிராகரித்துள்ளார்கள். 
குறிப்பாக, 1945 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சரவையில் சோல்பரி யாப்புக்கு ஒப்புதல் அளிக்கச் செய்வதற்காக டி. எஸ். சேனநாயக்க அரசியலமைப்பின் பிரிவு 29(2) இனைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் இருந்து தெரிவாகியிருந்த எட்டுத் தமிழ்ப் பிரதிநிதிகளை குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு இட்டுச்சென்றிருந்த போதும், 1947 பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் அதனை முழுமையாக 
நிராகரித்திருந்தனர். 
இதேபோன்ற ஒரு சூழல் தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஏற்படும் ஆபத்துக் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
வடக்கு கிழக்கில் தேர்தலில் தெரிவாகியுள்ள ஏழு தமிழ்ப் பிரதிநிதிகளும் தேசியப்பட்டியலில் ஒருவருமாக எட்டுப் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தி சார்பாக வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையும், மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் ஆளும் தரப்பு ஒருதலைப்பட்சமாக ஓர் அரசியலமைப்பை ஈழத்தமிழர் அரசியல் விருப்புக்கு எதிராகத் திணிக்கும் அபாயகரமான சூழல் தோன்றியுள்ளது. 
இந்தப் பேராபத்தில் இருந்து விடுபட ஈழத்தமிழர் குடிசார் சமூகமும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் சுயேட்சையுமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிய பெரும்பான்மையாகக் காணப்பட்டாலும், இவர்களிடையே ஒருமைப்பட்ட நிலைப்பாடு இல்லாதுள்ளது. 
முதற்கட்டமாக இந்த பதினொரு பிரதிநிதிகளிடையே ஒன்றித்த நிலைப்பாடு உருவாக வேண்டும். அதன் விளைவாக ஆளும் தரப்பின் அரசியலமைப்புத் திணிப்புக்கு அதன் தரப்பில் தெரிவான எட்டுப் பிரதிநிதிகள் கூட சோல்பரி அரசியலமைப்பின் போது தமிழ்ப் பிரதிநிதிகள் இழைத்த வரலாற்றுத் தவறை இழைக்காத நிலை ஏற்படுத்தப்படவேண்டும். 
ஏற்கனவே தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ள முன்மொழிவிலும், தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள முன்மொழிவிலும் அடிப்படையான கோட்பாட்டு ரீதியான சிக்கல்கள் உள்ளதாக வாதப் பிரதிவாதங்கள் ஊடகப் பரப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுப்பப் பட்டுள்ளன
'பிளக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கை' என்று தமிழ் மக்கள் பேரவையும், 'பிளக்கப்படாத, பிளக்கப்படமுடியாத இலங்கை' என்று தமிழரசுக் கட்சியும் அது கலந்து பேசி முன்வைக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய எனும் கலந்துரையாடற் பத்திரமும் முன்வைத்துள்ளன. 
அதேவேளை, கோட்பாட்டு ரீதியாக, வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு என்றும், அண்மையில் திம்பு+ என்றும் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று என்ற புதிய குடிசார் அமைப்பு முன்வைத்துள்ள திருகோணமலைப் 
பிரகடனம் என்று கருத்துக்கு விடப்பட்டுள்ள முன்வரைவு என்றும் விவாதங்கள் உருவாகியுள்ள சூழலில், அரசியல் தீர்வு தொடர்பான கருத்தாடலுக்கான பொதுத் தளங்கள் அவசியமாகியுள்ளன
அரசியல் தீர்வு தொடர்பாக யாழ் ஊடக அமையத்தால் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எந்தவித வெளிச்சக்திகளின் தலையீடோ, நிதியூட்டலோ இன்றி, முற்றிலும் சுயாதீனமான ஒரு தளத்தில் வடக்கு கிழக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, குடிசார் சமூகப் பிரதிநிதிகளும் விவாதித்து ஒருமித்த முடிவுகளை எட்டும் சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும் என்று தேர்தலில் தெரிவாகியுள்ள 
அனைத்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொது அமைப்புகளையும் யாழ் ஊடக அமையம் வேண்டுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்

இன்று இலங்கையில்  1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,330 ரூபாய் ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 43,390 ரூபாய் ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை 35,500.90 ரூபாய் ஆகவும் உள்ளது.
18 கரட் தங்க விலை
1g விலை LKR 35,500.90
2g விலை LKR 71,001.80
4g விலை LKR 142,003.60
8g விலை LKR 284,007.20
10g விலை LKR 355,099.00
22 கரட் தங்க விலை
1g விலை LKR 43,390.00
2g விலை LKR 86,780.00
4g விலை LKR 173,560.00
8g விலை LKR 347,120.00
10g விலை LKR 433,900.00
24 கரட் தங்க விலை
1g விலை LKR 47,330.00
2g விலை LKR 94,660.00
4g விலை LKR 188,320.00
8g விலை LKR 378,640.00
10g விலை LKR 473,300.00
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 28 மார்ச், 2026

நாட்டில் கோழி இறைச்சி விநியோகம் தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்

நாட்டில் திர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் சந்தையில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சியை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஏப்ரல் மாதப்பகுதியில் அனைத்து பண்ணைகளும் தமது முழுமையான உற்பத்தி கொள்ளளவை எட்டும் வகையில் செயற்படும் என குறிப்பிட்டார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் உலக சந்தையில் விலங்கு உணவுகள் விலை அதிகரிப்பு போன்ற சவால்களுக்கு மத்தியிலும், கோழி இறைச்சியின் விலையை 1,250 ரூபாய் மட்டத்தில் பேணுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், விலை நிர்ணயம் குறித்து அவர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார். சந்தையே தீர்மானிக்கும்: விலையை உற்பத்தியாளர்கள் தீர்மானிப்பதில்லை, சந்தையின் தேவையே (Demand) 
 தீர்மானிக்கிறது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த மேலதிக சுமையை உற்பத்தியாளர்களே 
ஏற்க வேண்டியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் விநியோகம் பாதிக்கப்பட்டால் மட்டுமே விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான தட்டுப்பாடுகள் ஏற்படாத பட்சத்தில் விலையை ஸ்திரமாக வைத்திருக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தட்டுப்பாடின்றி இறைச்சி மற்றும் முட்டைகளை நுகர்வோருக்கு வழங்குவதே தமது சங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html







 

யாழ் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் பெண் உறுப்பினர் மீது எரிந்து விழுந்தார்

பிரதேச சபை தவிசாளர்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த முடியும் என யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் பெண் உறுப்பினர் மீது 
எரிந்து விழுந்தார்.
குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்ற சபை அமர்விலேயே இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண் உறுப்பினர் மயான பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு நீண்ட நேரமாக எழுந்து நின்று சந்தர்ப்பம் கோரினார். எனினும் அதனை தவிசாளர் கண்டுகொள்ளவில்லை. ஏனைய உறுப்பினர்கள் சபையில் சத்தமிட்டுக்கொண்டு இருந்தனர்
அதன் பின்னர் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படது. இதன்போது அவர் தனது கருத்தை கூறும்போது ஏனைய இரண்டு உறுப்பினர்கள் குறுக்கிட்டதால் ஆத்திரமடைந்த பெண் உறுப்பினர், அந்த
 உறுப்பினர்களை கடிந்தார்.
பின்னர் தவிசாளரை நோக்கி ‘எனது கருத்தை சொல்கிறேன் நீர் ஓம் என்றால் ஓம் என்று சொல்லும், இல்லை என்றால் இல்லை என்று சொல்லும்’ என்றார். இதன்போது குறித்த பெண் உறுப்பினரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தவிசாளர், நீர், நான் என்று பேச முடியாது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கட்டைக்காட்டு பகுதியில் பெண்ணை மிரட்டிய பொலிஸ் அதிகாரி

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கட்டைக்காட்டைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கரைவலை மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்காக லீசிங் அடிப்படையில் உழவியந்திரத்தை கொள்வனவு
 செய்துள்ளார்.
குறித்த திகதியில் லீசிங் தொகையை கட்டி முடிக்கவில்லையெனக் கூறி லீசிங் நிறுவனத்தினர் மருதங்கேணி பொலிசாருடன் குறித்த பிரதேசத்திற்கு நேற்று (27) சென்றுள்ளனர்.
இதன் போது மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க , பெண் என்றும் பாராமல் தம்மை மிகக் கேவலமாக நடத்தியதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உழவியந்திரத்தை ஒப்படைக்காவிடில் உன்னையும் உனது குடும்பத்தையும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைப்பதாகவும் பொலீஸ் அதிகாரி திசாநாயக்க மிரட்டியதாகவும்
 குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணை துண்டு கொண்டு வருகை தந்த மருதங்கேணி பொலிசார், தான் குளித்துவிட்டு உடுப்பை மாற்றக் கூட விடாமல் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார் .
பொய் குற்றச்சாட்டில் என்னையும் எனது குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைப்பதாக மருதங்கேணி 
உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க மிரட்டி விட்டு சென்றதுள்ளதால் எனது குடும்பத்திற்கு ஏதாவது நடந்தால் குறித்த பொலிஸ் உப பொலிஸ் அதிகாரியே பொறுப்பெனவும் பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரிவித்தார்
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


யாழ் தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் எண்பது வீதம் பூர்த்தியாம்

யாழ் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். 
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 
"மக்களின் காணி மக்களுக்கே.. " என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை 
எடுத்து வருகிறோம். 
புத்த சாசன அமைச்சரின் பணிப்பில் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , விகாரைக்குரிய விகாராதிபதி , உள்ளிட்டவர்களை 
உள்ளடக்கி குழு ஒன்று அமைக்கப்பட்டு , பேச்சுக்கள் 
நடாத்தப்பட்டு வருகிறது. 
அதன் அடிப்படையில் தற்போது காணிகளை அளவிட்டு , அதனை எல்லைப்படுத்தி , உரிமையாளர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. 
அந்த வகையில் காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் என தெரிவித்தார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 27 மார்ச், 2026

நாட்டில் ஊரியான் பகுதியில் மஞ்சள் அறுவடை விழா மாகாண நிதி ஒதுக்கீட்டில் விவசாயி சாதனை

நாட்டில்  நடைபெற்ற மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதிமூலம் செய்கை மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் அறுவடை நிகழ்வு முரசுமோட்டை ஊரியான் பகுதியில் இ.இராசரத்தினம் என்ற விவசாயின் வயலில் 
நடைபெற்றது.
கால் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் மஞ்சள் இன அறுவடை நிகழ்வானது கண்டாவளை விவசாய 
போதனாசிரியர் க.தனுசீலன் தலைமையில் நடைபெற்றது.
வீ.சோதிலட்சுமி கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் கண்டாவளை கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.சற்குணநேசன், பாடவிதான உத்தியோகத்தர்கள் விவசாயப்போதனாசிரியர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது-

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக காணி தொடர்பில் விசாரணை

நாட்டில் தமிழீழ  விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக காணியில் அமைக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்று
 அனுமதித்துள்ளது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள புலிகளின் தலைவரின் பூர்வீக காணியில் தமிழர் வரலாற்று மையம் ஒன்றினை நிர்மாணிக்க , அவரது சகோதரி வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு அற்றோணி தத்துவம் வழங்கியுள்ளார்.
அதன் அடிப்படையில் காணியில் கட்டுமானங்களை மேற்கொள்ள வல்வெட்டித்துறை நகர சபையில் அதற்கான அனுமதிகளை பெறும் நடவடிக்கைகளை கடந்த காலங்களில்
 முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வரலாற்று மையத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உருவங்கள் , ஓவியங்கள் , பதாகைகள் , வரலாற்று சின்னங்கள் , புலிகளின் தலைவரின் சிலை உள்ளிட்டவை காட்சிப்படுத்த 
உள்ளனர் எனவும் , அதனூடாக விடுதலை புலிகளை
 மீள் உருவாக்கம் செய்யும் முயற்சி எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அத்துடன் இத் திட்டத்தை இலங்கையில் ஆனந்தராஜ் என்பவர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , அதற்காக அவருக்கு முதல் கட்டமாக 16 இலட்ச ரூபாய் நிதி வெளிநாடுகளில் 
அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பண பரிமாற்றம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க எனவும் , அதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரிய நிலையில் , அதற்கான அனுமதியினை மன்று வழங்கியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது-

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




நாட்டில் மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறைத்தண்டனை ஒத்திவைப்பு

நாட்டில்  தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களுக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி அதனை 12 மாதங்களுக்கு நீதிமன்று 
ஒத்திவைத்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய 10 மீனவர்களின்  வழக்கு விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 10 மீனவர்களுக்கும் 10 வருட சிறை தண்டனை வழங்கி அதனை 12 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்
அத்துடன் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், படகு , மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட சான்று பொருட்களை அரசுடமையாக்கவும் உத்தரவிட்டார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது-

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 26 மார்ச், 2026

நாட்டில் புத்தாண்டு காலத்தில் அரிசி விலை உயருமா அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

இலங்கையில்  திர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அரிசி விலையை அதிகரிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன 
தெரிவித்துள்ளார்.
நாட்டில் நுகர்வுக்குத் தேவையான அரிசி இருப்பு போதுமானளவு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், சந்தையில் தற்போது அரிசி விநியோகம் சீராக 
உள்ளதாகக் குறிப்பிட்டார்.
"எங்களிடம் தாராளமான அளவில் நாடு அரிசி கையிருப்பில் உள்ளது. உண்மையில் சொல்லப்போனால், தேவைக்கு அதிகமான நாடு அரிசி எங்களிடம் உள்ளது.
கீரி சம்பா அரிசி தொடர்பில் ஒரு சிறிய சிக்கல் நிலவினாலும், அதன் விநியோகத்தை மேலாண்மை செய்யத் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்" என அவர் தெரிவித்தார்.
தற்போதைய சந்தை விநியோகத்திற்காக கடந்த பருவத்தில் பெறப்பட்ட நெல் மற்றும் இந்த பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டு வருவதாக 
அவர் விவரித்தார்.
இதன் மூலம் தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என அரசாங்கம் நம்புகிறது.
அரிசி விலையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமாயின், அது போக்குவரத்து மற்றும் எரிபொருள் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அமையுமே தவிர, அரிசி தட்டுப்பாட்டினால் விலை அதிகரிக்காது என்பதை அவர் வலியுறுத்தினார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 25 மார்ச், 2026

நாட்டில் பவுசருடன் ஆராயிரத்தி அறுநூறு லீட்டர் டீசலை பதுக்கியவர் கைது

நாட்டில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் மொரகஹஹேன, கோனபொல பகுதியில் வைத்து கைது 
செய்யப்பட்டுள்ளார்
ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, சந்தேகநபரின் வீட்டின் வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பௌசர் ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது, பாணந்துறை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் அந்தப் பௌசருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6,600 லீற்றர் டீசல் 
கைப்பற்றப்பட்டது.
அத்தோடு, குறித்த சந்தேகநபரின் வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 152 லீற்றர் டீசல் அடங்கிய ஒரு பீப்பாய்,120 லீற்றர் பெற்றோல் அடங்கிய ஒரு பீப்பாய்  என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் கோனபொல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
 சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



தி. வேல்நம்பி யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்பு

 யாழ்  பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி .25-03-2026.இன்றைய தினம் புதன்கிழமை 
பதவி ஏற்றார்.
பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப்
 பொறுப்பேற்றார்.
பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



மட்டக்களப்பில் சந்தேகநபர்களின் உறவினர்களுக்கும் வலைவீச்சு

நாட்டில்  மட்டக்களப்பு  கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசாரணை அதிகாரி ஒருவர் சூரியன் செய்திப் பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக விசாரணை 
அதிகாரி தெரிவித்தார்.
குறிப்பாக, சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித பணிகளுக்கும் செல்லாது சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக 
தெரியவந்துள்ளது
 .அதற்கமைய, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக விசாரணை 
அதிகாரி தெரிவித்தார்.
குறிப்பாக, சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித பணிகளுக்கும் செல்லாது சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக 
தெரியவந்துள்ளது.
அதற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளதாக விசாரணை 
அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில், இவ்வாறான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, அவர்களும் சந்தேக நபர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனரா என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சந்தேக நபர்களில் முச்சக்கர வண்டி சாரதியான பிரதான சந்தேக நபர், நிதி கொடுக்கல் வாங்கல்களிலும் மோசடிகளைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, இந்த குழுவினர் மேலும் பல சம்பவங்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக விசாரணைகளை முன்னெடுத்து 
வரும் விசாரணை அதிகாரி ஒருவர் சூரியன் செய்திப் பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 24 மார்ச், 2026

நாட்டில் .ஏப்ரல் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலை திருத்தம்

நாட்டில் சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன 
தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன 
தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளது. அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும். எவ்வாறாயினும், 
சர்வதேச சந்தையில் 
எரிசக்தி உற்பத்திக்கு நிலவும் கேள்வியின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி புதிய விலை அதிகரிக்கப்படும்” என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.