திங்கள், 2 மார்ச், 2026

நாட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு! எரிபொருளைப் பதுக்கிய சிலர் கைது

தற்போது  நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு 
எரிபொருள் கையிருப்பு 
உள்ளதால் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால், அவ்வாறான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் QR முறையைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது 
சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினமும்.02-03-2026.வழமை போன்று எரிபொருள் விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், காலை 9.45 மணி வரை 29 இலட்சத்து 25 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 29 இலட்சத்து 4 ஆயிரம் லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக
 டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
மேலும், நேற்றையதினம் (01) மாத்திரம் 30 இலட்சத்து 81 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 39 இலட்சத்து 20 ஆயிரத்து 400 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் 
மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மக்கள் இவ்வாறு அநாவசியமாகப் பதற்றமடைந்து தொடர்ச்சியாக வரிசைகளில் காத்திருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் 
மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அனுமதிப்பத்திரமின்றி வீடுகளில் எரிபொருளைப் பதுக்கி வைப்பது சட்டவிரோதமானதும் ஆபத்தானதுமான செயலாகும் எனவும், அது தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் டி.ஜே. ராஜகருணா இதன்போது தெரிவித்தார்.
 இது தொடர்பில் நேற்றையதினமும் (01) பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும்
 குறிப்பிட்டார்.
இவ்வாறு எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அது குறித்துப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



விசேட அறிவிப்பு ஐக்கிய அமீரக வாழ் இலங்கையர்களுக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் வசிப்பதாகவும், தூதரகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டு அமைச்சு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசரத் தேவைகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக விசேட சேவையொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, பாதுகாப்பான இடங்கள் மற்றும் விமான நிலைய அணுகல் தொடர்பான ஆலோசனைகளைத் தூதரகம் மற்றும் துபாய் கொன்சியூலர் அலுவலகம் தமது பேஸ்புக் பக்கத்தின் ஊடாகத் தொடர்ந்து 
வெளியிட்டு வருவதால், அவற்றைச் சரிபார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், யாரேனும் அந்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணமாகச் சென்றிருந்தால், விமானச் சேவை மற்றும் தமது பயண முகவர்களுடன் தொடர்பைப் பேணுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவிப்புகள் மற்றும் அதிகாரபூர்வ செய்திகளை 
மட்டுமே நம்புமாறும், அமீரகத்தில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகள் மற்றும் அங்கு வருபவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



ஞாயிறு, 1 மார்ச், 2026

இன்று வர்த்தக வங்கிகளில் இலங்கையில் நாணய மாற்று பெறுமதி

இலங்கையில் இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டாலர் 312.38 ரூபா
ஜப்பானிய யென் 2.03 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 422.56 ரூபா
யூரோ 369.91 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 225.76 ரூபா
சுவிஸ் பிராங் 407.10 ரூபா
கனடிய டாலர் 229.73 ரூபா
கத்தார் ரியால் 86.53 ரூபா
குவைத் தினார் 1032.35 ரூபா
சவுதி ரியால் 84.09 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


முதல் முறையாக ஐரோப்பிய நாடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய ஈரான்

தற்போது   மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஒரு நாடு மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
சைப்ரசில் (Cyprus) நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.​
பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 
சையிப்ரசில் உள்ள அக்ரோதிரி (Akrotiri) வான்படைத் தளம், இஸ்ரேலுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்கும் உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக !!ரான் 
குற்றம் சாட்டி வந்தது. 
இந்தத் தளமே ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு முக்கிய இலக்காக இருந்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது அச்சம் தேவையில்லை

தற்போது மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் இருந்தபோதிலும், இலங்கையில் அடுத்த 37 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.
எனவே, மக்கள் தேவையற்ற முறையில் பீதி அடைய வேண்டாம் என்றும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா வலியுறுத்தியுள்ளார். விடுமுறை இருந்தபோதிலும் இன்று
 ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும், போயா தினமான நாளை எரிபொருள் விநியோகமும் நடைபெறும்.
இந்தப் பணிக்காக போதுமான எண்ணிக்கையிலான எரிபொருள் பவுசர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, எரிபொருள் கிடைப்பது குறித்து பொது மக்கள் அநாவசியமாக பீதியடைத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.