வியாழன், 22 ஜூன், 2023

இலங்கையில் 67 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம்

இலங்கையில் 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை, கொத்தட்டுவை, மஹரகம ஆகிய டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் போது 7000 இற்கும் அதிகமான வீடுகளின் சுற்றுச்சூழலை பரிசோதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2 வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 46473 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.