சனி, 28 ஏப்ரல், 2018

திரு-திருமதி என்.வி. சிவநேசன் அவர்களுக்கு தமிழ்பண்டிதர் படடம்

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் திரு என்.வி. சிவநேசன் அவர்களுக்கும் திருமதி தவமலர் சிவநேசன் அவர்களும் சிறப்பாக புலமைப்பட்டப்படிப்பில் சித்தியடைந்தமைக்கான பட்டமளிப்புவிழாவாக யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் தமிழ்பண்டிதர் என பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்களினால் தமிழ்பண்டிதர் என்ற பட்டம் வழங்கி 
கௌரவிக்கப்பட்டுள்ளனர்
இவர்களின் இந்த சிறப்பான ஆழுமையான படிப்பை நிறைவாக்கி தமிழ்பண்டிதர் என்ற பட்டம் பெற்றுக்கொண்டமைக்காக சிறப்புற அனைவருடன் இணைந்து வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமதி நகுலா சிவநாதனுக்கு தமிழ்மாணி என்ற பட்டம் வழங்கப்பட்டது

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்   யேர்மனியில் வசிக்கும் திருமதி நகுலா சிவநாதன் அவர்களுக்குதமிழ்மாணி என்ற பட்டம் பெற்றுக்கொண்டார்.
25 வருட ஆசிரியர் சேவையைப் பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்கள்
தமிழ்மாணி என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார்கள்
செம்மொழியாம் தமிழ்மொழியை அடுத்த சந்ததிக்கு கொடுக்கும்
உயர்ந்த இலக்கிற்காக கிடைத்த பரிசாகும் இவருக்காண இந்தச்சிறப்புத்தனை அனைவரும் வாழ்த்தி நிற்க  இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விபத்து ; 8 பேர் படுகாயம்

 முல்லைத்தீவு பரந்தன் வீதியில்.12.04.2018.. காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் இவ்வாறு 
விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வியாழன், 12 ஏப்ரல், 2018

முறிகண்டியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அந்தப் பகுதியில் உள்ள பாதுகாப்பாற்ற கிணற்றிலிருந்து இன்று சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த சிறுவன்
 அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கனிஸ்டன் என்ற 8 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட 
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து
 வருகின்றனர்.சிறுவனின் அகால மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





Blogger இயக்குவது.