வியாழன், 25 ஏப்ரல், 2024

நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு பலர் கைது

2024ஆம் ஆண்டின் 4 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ளன.  
முறையான உரிமம் இல்லாமல் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், சரியான வேலை உத்தரவு இல்லாமல் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்காக பணம் வசூலித்தல், சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற புகார்கள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன. 
பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 495 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் இக்காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதுடன், 53,509,520.00 பணத்தையும் விசாரணை அதிகாரிகள் 
மீட்டுள்ளனர்.  
மேலும் 680 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்காக மோசடி செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரவும் பணியகம் நடவடிக்கை
 எடுத்துள்ளது. 
இதன்போது, ​​வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறையான அனுமதிப்பத்திரம் இன்றி
 இயங்கி வந்த மற்றும் 
முறையான பணி உத்தரவைப் பெறாமல் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த 8 முகவர் நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 
பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் இலங்கையர்களின் போக்கு தற்போது காணப்படுவதாகவும், இதனால்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  
பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு வெளிநாட்டு 
தொழிலாளர் கடத்தல் தொடர்பான சோதனைகளை 
விரிவுபடுத்தியுள்ளதுடன், புலனாய்வுப் பிரிவின் கடமைகளை மக்களின் வசதிக்காக பரவலாக்குவதற்கும் நடவடிக்கை 
எடுத்துள்ளது. 
மேலும், பணியகத்தின் 24 மணி நேர தகவல் மையத்திற்கு 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மற்றும் தனிநபர்கள் பற்றிய தகவல்களை பணியகத்தின் சிறப்பு புலனாய்வு திணைக்கள தொலைபேசி இலக்கமான 0112864118க்கு அழைப்பதன் மூலம் வழங்க முடியும்.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 24 ஏப்ரல், 2024

நாட்டில் வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (24.04) மதியம் 12.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போர்ட்டத்தில் ஈடுபட்டனர். 
தமக்கான பிக்கு வரத்து கொடுப்பனவு மற்றும் காகிதத்தை கொடுப்பணவுகளை வழங்குமாறு கோரி இக் கவனயீர்ப்பில் 
ஈடுபட்டனர்.  
இதன்போது பதாதைகளை தாங்கிய இருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின் கலைந்து சென்றனர்
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 23 ஏப்ரல், 2024

உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜெர்மனியில் மூவர் கைது

ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான 
ஒப்பந்தம் செய்தனர்.
இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 
அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர்.
 இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 22 ஏப்ரல், 2024

நாட்டில் வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் அதிகரிக்கும் லஞ்சம்

நாட்டில் (திருத்தப்பட்ட செய்தி )வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.  
வவுனியா குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை தருகின்றனர்.  
இந்நிலையில் ஒரு நாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் 
அதிகாலையிலேயே
 இரு வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருப்போருக்க காலை
 6 மணியளவில் கடவுச்சிட்டு அலுவலகத்தால் இலக்கம் வழங்கப்பட்டு கடவுச்சிட்டு பெற வருவோர் உள்வாங்கப்படுவது 
வழங்கமாக உள்ளது.
இதன்போது வரிசையில் இரவு பகலாக பலரும் காத்திருக்கும் நிலையில் ரவுடிகள் போன்று செயற்படும் சிலர் ஒருவருக்கு 
தலா 5000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை பெற்று வரிசையில் காத்திருக்காமலேயே இலக்கங்களை வழங்குவதாக 
தெரிவிக்கப்படுகின்றது. 
இதனால் அங்கு பணம் கொடுக்காமல் இரவு பகலாக வரிசையில் நிற்பவர்கள் குறித்த தினத்தில் கடவுச்சீட்டை பெற முடியாமல் திரும்பி செல்லும் நிலை காணப்படுவதோடு முரண்பாடான நிலைமைiயும் 
ஏற்படுகின்றது.  
இதற்குமப்பால் கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை வழங்கி மிக இலகுவாக கடவுச்சீட்டை பெற முடிவதாகவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.
எனவே வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்புகையில் பணம் வாங்கி வரிசையில் இலக்கத்தினை பெற்றுகொடுக்கும் கும்பல் தினமும் அதிகளவில் பணத்தினை சம்பாதித்து 
செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது என பொலிஸார் விசனம் தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

உலக அமைதிக்கான வவுனியாவில் ஆன்மீக நடைபயணம்

நாட்டில்  உலக அமைதிக்கான ஆன்மீக நடை பயணம் வவுனியாவில் ஸ்ரீ சத்திய சாயி சர்வதேச நிறுவனம் இலங்கை மற்றும் வவுனியா சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றிருந்தது.  
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள 
சத்திய சாயி நிலையத்தின் விசேட வழிபாடுகள் இடம் பெற்றதன் பின்னர் அமைதிக்கான ஆன்மீக நடை பயணம் ஆரம்பமான 
நிலையில், மீண்டும்  மீண்டும் சத்திய சாயி நிலையத்தை நடைபயணம் வந்தடைந்திருந்தது. 
இதில் சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்தும் கொண்டிருந்ததோடு தங்க நிறத்திலான தேரில் சத்திய சாய்பாபாவின் படம் தாங்கி இழுத்துச்செல்லப்பட்டிருந்தமையும்
    என்பது குறிப்பிடத்தக்க

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 20 ஏப்ரல், 2024

இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தை நியூசிலாந்தில் திறப்பதற்கு தீர்மானம்

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு 
தெரிவித்துள்ளது. 
வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம்  பிரதீபா சேரம் தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.  
இலங்கையின் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் குழு தற்போது அங்கு தங்கியுள்ளதுடன், அவர்களுக்கு 
வசதிகளை வழங்குவதும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு,
 விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா
 மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் முதன்மை 
நோக்கங்களாகும். வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 19 ஏப்ரல், 2024

நாட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு

நாட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 இதனை, நுகர்வோர் அதிகார சபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்துள்ளார்.
 கொழும்பு காலிமுகத்திடல், புதுக்கடை , பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் இரவு வேளைகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்
 அவர் தெரிவித்தார்.
 சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Blogger இயக்குவது.