வெள்ளி, 18 நவம்பர், 2016

யாழ் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்புவிழா

யாழ் புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று வித்தியாலய மண்ட பத்தில் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.
வித்தியாலய முதல்வர் J.A தவநாயகம் தலைமையில்  நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக
 வட க்கு மாகாண உறுப்பினர் ஆனந்தி சசிதரன், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்வி பணி ப்பாளர் நா.சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை 
வழங்கிவைத்தனர்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது நிதி ஒதுக்கீட்டிலிருந்து 50,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கல்லூரி அதிபரிடம் கையளித்தார்.
வெகு சிறப்பாக நடைபெற்ற இப் பரிசளிப்பு விழாவில் பாடசாலை பழைய மாணவர்கள் உட்பட பொது மக்கள் பலரும் 
கலந்து கொண்டனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மோட்டார் சைக்கிள் வாகன விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக பலி!

ஹொரண - பெல்லபிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஹொரண பிரதேசத்தில் இருந்து புளத்சிங்கள பிரதேசம் நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் வந்த வாகனம் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 13 நவம்பர், 2016

பெண் பொலிஸாரை கலைத்து கலைத்துத் தாக்கும் அதிர்ச்சிக்காணொளி,

மட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை தூசன வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார் பலர் முன்னிலையில் பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் காணொளி, ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழர்கள் மென்வலுவைக் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையெனில் கிடைக்கவிருக்கும் அரசியல் தீர்விற்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோருக்கும் வகுப்பு எடுத்துக்கொண்டுதிரியும் சூழலில் நல்லாட்சி அரசின் ஆசீர்வாதத்தோடு புத்த சிலைகள் வைக்கப்படுவதும், பொது வெளியில் இவ்வாறாக அநாகரினமாக நடந்து வன்முறையைத் தூண்டும் வகையிலுமான செயற்பாடுகளும் மறுபுறம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நல்லாட்சியால் இவற்றை வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.
காணொளி. புகைபடங்கள் -இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 10 நவம்பர், 2016

சாரதிகளுக்கு எச்சரிக்கை! அபராத தொகை 2500 ரூபாவாக அதிகரிப்பு!

போக்குவரத்து நடவடிக்கையின் போது ஏற்படுத்தப்படும் தவறுகளுக்காக அறவிடப்படும் குறைந்த பட்ச அபராத தொகையை 2500 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அபராத பணத்தை தொலைப்பேசி ஊடாக செலுத்த முடியும்.
தற்போது வரையில் போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படும் குறைந்தப்பட்ச அபராத பணம் 500 ரூபாவாகும்.
அதேவேளை சிறிலங்காவில் சிற்றூர்ந்து விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இலத்திரனியல் மோட்டார் சிற்றூர்ந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 
அறிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 5 நவம்பர், 2016

புகையிரதத்துடன் மோதி மன்னாரைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பலி!

தலைமன்னாரில் இருந்து நேற்று (04.112016) வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மன்னார் புதுக்குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மன்னார் புதுக்குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான முஹம்மது நஜிபுதீன் (வயது-29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலைமன்னாரில் இருந்து நேற்று (4) வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த குறித்த புகையிரதத்துடன் தலைமன்னார்-மன்னார் பிரதான வீதி சின்னக்கருசல் பகுதியில் உள்ள புகையிரத வீதியிலே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை சடலத்தை கண்ட கிராம மக்கள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டதோடு விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.