வெள்ளி, 26 ஏப்ரல், 2024

நாட்டில் மகளையும் அவரது தோழியையும் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

நாட்டில் 12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது 
செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.
 சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 25 ஏப்ரல், 2024

நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு பலர் கைது

2024ஆம் ஆண்டின் 4 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ளன.  
முறையான உரிமம் இல்லாமல் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், சரியான வேலை உத்தரவு இல்லாமல் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்காக பணம் வசூலித்தல், சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற புகார்கள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன. 
பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 495 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் இக்காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதுடன், 53,509,520.00 பணத்தையும் விசாரணை அதிகாரிகள் 
மீட்டுள்ளனர்.  
மேலும் 680 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்காக மோசடி செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரவும் பணியகம் நடவடிக்கை
 எடுத்துள்ளது. 
இதன்போது, ​​வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறையான அனுமதிப்பத்திரம் இன்றி
 இயங்கி வந்த மற்றும் 
முறையான பணி உத்தரவைப் பெறாமல் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த 8 முகவர் நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 
பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் இலங்கையர்களின் போக்கு தற்போது காணப்படுவதாகவும், இதனால்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  
பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு வெளிநாட்டு 
தொழிலாளர் கடத்தல் தொடர்பான சோதனைகளை 
விரிவுபடுத்தியுள்ளதுடன், புலனாய்வுப் பிரிவின் கடமைகளை மக்களின் வசதிக்காக பரவலாக்குவதற்கும் நடவடிக்கை 
எடுத்துள்ளது. 
மேலும், பணியகத்தின் 24 மணி நேர தகவல் மையத்திற்கு 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மற்றும் தனிநபர்கள் பற்றிய தகவல்களை பணியகத்தின் சிறப்பு புலனாய்வு திணைக்கள தொலைபேசி இலக்கமான 0112864118க்கு அழைப்பதன் மூலம் வழங்க முடியும்.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 24 ஏப்ரல், 2024

நாட்டில் வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (24.04) மதியம் 12.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போர்ட்டத்தில் ஈடுபட்டனர். 
தமக்கான பிக்கு வரத்து கொடுப்பனவு மற்றும் காகிதத்தை கொடுப்பணவுகளை வழங்குமாறு கோரி இக் கவனயீர்ப்பில் 
ஈடுபட்டனர்.  
இதன்போது பதாதைகளை தாங்கிய இருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின் கலைந்து சென்றனர்
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 23 ஏப்ரல், 2024

உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜெர்மனியில் மூவர் கைது

ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான 
ஒப்பந்தம் செய்தனர்.
இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 
அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர்.
 இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 22 ஏப்ரல், 2024

நாட்டில் வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் அதிகரிக்கும் லஞ்சம்

நாட்டில் (திருத்தப்பட்ட செய்தி )வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.  
வவுனியா குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை தருகின்றனர்.  
இந்நிலையில் ஒரு நாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் 
அதிகாலையிலேயே
 இரு வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருப்போருக்க காலை
 6 மணியளவில் கடவுச்சிட்டு அலுவலகத்தால் இலக்கம் வழங்கப்பட்டு கடவுச்சிட்டு பெற வருவோர் உள்வாங்கப்படுவது 
வழங்கமாக உள்ளது.
இதன்போது வரிசையில் இரவு பகலாக பலரும் காத்திருக்கும் நிலையில் ரவுடிகள் போன்று செயற்படும் சிலர் ஒருவருக்கு 
தலா 5000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை பெற்று வரிசையில் காத்திருக்காமலேயே இலக்கங்களை வழங்குவதாக 
தெரிவிக்கப்படுகின்றது. 
இதனால் அங்கு பணம் கொடுக்காமல் இரவு பகலாக வரிசையில் நிற்பவர்கள் குறித்த தினத்தில் கடவுச்சீட்டை பெற முடியாமல் திரும்பி செல்லும் நிலை காணப்படுவதோடு முரண்பாடான நிலைமைiயும் 
ஏற்படுகின்றது.  
இதற்குமப்பால் கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை வழங்கி மிக இலகுவாக கடவுச்சீட்டை பெற முடிவதாகவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.
எனவே வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்புகையில் பணம் வாங்கி வரிசையில் இலக்கத்தினை பெற்றுகொடுக்கும் கும்பல் தினமும் அதிகளவில் பணத்தினை சம்பாதித்து 
செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது என பொலிஸார் விசனம் தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

உலக அமைதிக்கான வவுனியாவில் ஆன்மீக நடைபயணம்

நாட்டில்  உலக அமைதிக்கான ஆன்மீக நடை பயணம் வவுனியாவில் ஸ்ரீ சத்திய சாயி சர்வதேச நிறுவனம் இலங்கை மற்றும் வவுனியா சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றிருந்தது.  
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள 
சத்திய சாயி நிலையத்தின் விசேட வழிபாடுகள் இடம் பெற்றதன் பின்னர் அமைதிக்கான ஆன்மீக நடை பயணம் ஆரம்பமான 
நிலையில், மீண்டும்  மீண்டும் சத்திய சாயி நிலையத்தை நடைபயணம் வந்தடைந்திருந்தது. 
இதில் சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்தும் கொண்டிருந்ததோடு தங்க நிறத்திலான தேரில் சத்திய சாய்பாபாவின் படம் தாங்கி இழுத்துச்செல்லப்பட்டிருந்தமையும்
    என்பது குறிப்பிடத்தக்க

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 20 ஏப்ரல், 2024

இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தை நியூசிலாந்தில் திறப்பதற்கு தீர்மானம்

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு 
தெரிவித்துள்ளது. 
வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம்  பிரதீபா சேரம் தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.  
இலங்கையின் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் குழு தற்போது அங்கு தங்கியுள்ளதுடன், அவர்களுக்கு 
வசதிகளை வழங்குவதும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு,
 விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா
 மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் முதன்மை 
நோக்கங்களாகும். வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 19 ஏப்ரல், 2024

நாட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு

நாட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 இதனை, நுகர்வோர் அதிகார சபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்துள்ளார்.
 கொழும்பு காலிமுகத்திடல், புதுக்கடை , பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் இரவு வேளைகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்
 அவர் தெரிவித்தார்.
 சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 18 ஏப்ரல், 2024

நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு இரு பொலிஸார் கைது

நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.  
இவர் மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் டொருட்டியாவ பொபேலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆவார். 
இவர்கள் 18-04-2024.அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 17 ஏப்ரல், 2024

நாட்டில் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதன்படி, இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை
 அதிகரிக்கலாம்.  
குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நாட்டில் நெடுங்கேணியில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விழா இடம்பெற்றது.

வவுனியா நெடுங்கணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா.16-04-2024. இன்று இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் வவுனியா
 வடக்கு வலயக் கல்வி அலுவலகம் இணைந்து நடாத்திய குறித்த நிகழ்வானது நெடுங்கேணி மகா வித்தியாலய மைதானத்தில்
 இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.  
இதன்போது பாரம்பரிய முறையில் விருந்தினர்களை 
வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு தமிழ் சிங்கள கலை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், பாரம்பரிய உணவு கண்காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. 
இந் நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஷ்குமார், வவுனியா வடக்கு பிரதேச
 செயலாளர் இ.பிரதாபன் மற்றும் முக்கியஸ்தர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 15 ஏப்ரல், 2024

நாட்டில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆய்வு

நாட்டில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 
தெரிவித்துள்ளார்.
 ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்புடன், தேவைக்கேற்ப வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். 
மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, "இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தினோம். 1,500 முதல் 2,000 இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன.
 இப்போது படிப்படியாக அவற்றை தளர்த்தி இப்போது வாகன இறக்குமதியை மட்டும் நிறுத்தியுள்ளோம். தேவைக்கு 
ஏற்ப திறக்கிறோம். 
தற்போது எங்களிடம் 750 வேன்கள் உள்ளன. சுற்றுலாத் துறைக்கு தேவையான 250 பஸ்கள் எல்லாம் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது     


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

தமிழ் சித்திரை புத்தாண்டிற்கு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும், புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும், புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன. இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும்
 ஆகும். தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும் 
ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் 
கொள்கிறோம்.
 உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன. புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமானது 
என நம்புகிறேன்.
 புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுக்கூறுவதோடு 
அனைவருக்கும் புத்தாண்டுப் பிறப்பு சிறப்பானதாக
 அமையட்டும் என பிரார்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 13 ஏப்ரல், 2024

மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக கிறிஸ்டலினா தேர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நேற்று (12) அவர் தெரிவு செய்யப்பட்டார்.
 அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் இவர் எனவும், இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் அவருடன் பல 
சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
 அவரது வலுவான மற்றும் சுறுசுறுப்பான தலைமை IMF செயற்குழுவினால் பாராட்டப்பட்டுள்ளது. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த
 ஜார்ஜீவா, 2019 ஒக்டோபர் மாதம் முதலாம் 
திகதி முதல் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்து வருகிறார். அதற்கு முன், அவர் ஜனவரி 2017 முதல் உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வெளிநாடுகளுக்கு திடீரென பறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள்

சிங்கள - தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 
ஆளும் கட்சி மற்றும் 
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
 சிலர் ஐரோப்பா உள்ளிட்ட தனது பிள்ளைகள் படிக்கும் நாடுகளுக்குச் சென்றுள்ளதுடன், மற்ற அமைச்சர்கள் வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் விடுமுறை இல்லங்களுக்குச் சென்றுள்ளதாக 
குறிப்பிடப்படுகிறது.
 மேலும் சில அமைச்சர்கள் இலங்கையின் நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் புத்தாண்டை கொண்டாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 11 ஏப்ரல், 2024

நாட்டில் கேப்பாப்பாப்பிலவு காணி உரிமையாளர்களுக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள்11-04-2024. இன்று வட மாகாண ஆளுநரை சந்தித்து
 கலந்துரையாடினர்.
 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்ல கலந்துரையாடல் கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பில் காணி 
உரிமையாளர்கள் 
சிலர் கலந்து கொண்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 10 ஏப்ரல், 2024

நாட்டில் இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு

நாட்டில்  நீண்ட இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.  
வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை சம்மந்தமான 
விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  
குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பிரதி ஆணையாளர், நீர்ப்பாசன 
பொறியியலாளர், இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் கீழ் உள்ள 22 கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக செய்கை அளவை தீர்மானிக்கும் கலந்துரையாடல்கள் முடிவு எட்டப்படாது இழுபறி நிலையில்
 காணப்பட்டது.  
கடந்த 8ம் திகதி திங்கட்கிழமை மாவட்ட பதில் அரசாங்கதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிகளுடனான கலந்துரையாடலையடுத்து சுழற்சி முறையில் 15560 ஏக்கர் செய்கை பண்ணுவதாக தீர்மானிக்கப்பட்டது.  
குறித்த சுழற்சி முறை வேண்டாம் என தெரிவித்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்டது.  
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. பல மணி நேர கலந்துரையாடலின் பின்பு சுழற்சி முறையை தவிர்த்து பங்கீட்டு முறையில் வழமை போன்று செய்கை மேற்கொள்வதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 9 ஏப்ரல், 2024

கிளிநொச்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி போராட்டம்

கிளிநொச்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி.09-04-2024.  இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று 
முன்னெடுக்கப்பட்டது. 
 வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 
கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக 
இப் போராட்டம்
 இடம்பெற்றது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி இடம்பெறும் இப் போராட்டமானது,
09-04-2024. இன்றைய தினம்(09) வடக்கு கிழக்கு எங்கும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 ஒரு கூலித் தொழிலாளியின் நாளாந்த வருமானம் 1500 ரூபா ரூபாவாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரிசியின் விலையை 100 ரூபாயிலும் குறைக்குமாறும் , அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைக்குமாறு கேட்டு நின்றனர். 
 மேலும் பல உயிர்களை காவு வாங்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து தருமாறும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 8 ஏப்ரல், 2024

இரு நாட்டு தமிழ் உறவுகளையும் கச்சதீவு விவகாரம் பலிக்கடாவாக்கும் மத்திய அரசுகள்

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் ஆய்வாளர் சி.ஆ.ஜோதிலிங்கத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில்.08-04-2024. இன்று இடம்பெற்றுள்ளது.
 இலங்கை, இந்தியா இடையேயான கச்சதீவு விவகாரம், இரு நாட்டு தமிழ் உறவுகளையும் பலிக்கடாவாக்கும் மத்திய அரசுகள் என 
அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின்
 பா.ஜா.க அரசானது காங்கிரஸ் மற்றும் தி.மு.கா வையும் வசைபாடி தேவையற்ற பிரசினையை இழுத்து விட்டுள்ளது எனவும் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
 மேலும், தமழரசுக் கட்சியின் உள்ளக முரண்பாடு, நீதிமன்றம் வரை இழுத்துவிடப்பட்டுள்ள சூழ்ச்சியும், எதிர் வரும் தேர்தல்களில் கையறு நிலையில் தமிழ் மக்கள் உள்ளார்கள். மாறி மாறி 
புதிய விடயங்களை இடை மனைக்களாக புகுத்துகின்றதன் 
மூலம் எதிர் வரும் தேர்தலில் காத்திரமான முடிவை தமிழரசு 
எடுக்க முடியாது நிலை உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தமிழரசுக் கட்சி ஆதரிக்கும் நிலையில் உள்ளது. 
அதுவும் பின்னணியில் பிற சக்திகளின் சூட்சியாக இருக்கலாம். சர்வதேச சக்திகளின் கைங்கரியமும் தமிழரசை இல்லாது செய்யும் முயற்சியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
 ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்துவது கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவு செய்வதே சிறந்தது. மனோகணேசன் பெரும் தேசியவாத்தினருடன் இணைந்து கொழும்பு அரசியலுடன் இருப்பவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

இந்தியாவை சேர்ந்த வயது முதிர்ந்த மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை

அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருபவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்ற நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது 
மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை
 வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமைச் சேவைத் துறை தனது X இணையதளத்தில் வயது என்பது வெறும் எண் என்று கூறுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 6 ஏப்ரல், 2024

ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புகையிரத விபத்தில் ஒருவர் படுகாயம் புகையிரதம் சேதம்

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,அனுராதபுரத்திலிருத்து யாழ் நோக்கிச்சென்றுகொண்டிருந்த புகையிரதம் ஓமந்தை
 பன்றிக்கெய்தகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த 
போது, கடவையினை கடக்கமுற்பட்ட கப் வாகனத்துடன் 
மோதியதில் குறித்த
 விபத்து இடம்பெற்றது விபத்தில் கப் வாகனம் கடுமையான 
சேதமடைந்ததுடன் அதன் சாரதி படுகாயமைடந்த 
நிலையில் வவுனியா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் புகையிரதத்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து பயணிகள் இறக்கப்பட்டு மற்றொரூ புகையிரதத்தில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதேவேளை குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் சிலவருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 5 ஏப்ரல், 2024

வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி 
இந்த செயல்முறை நடந்து வருவதாக
 தெரிவித்தார்.
 தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ''நாட்டில் பணப்பரிவர்த்தனை பிரச்சினையால் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். 
ஆனால் சுற்றுலாத்துறையில் 6 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்களை பயன்படுத்துவதில்லை. இப்போது எங்களின் 
வாகனங்கள் பழையதாகிவிட்டன. அதனால் தான் சுற்றுலாத் துறைக்காக 250 பேருந்துகள் மற்றும் 750 வேன்களை கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது'' என தெரிவித்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.