செவ்வாய், 2 ஏப்ரல், 2024

உலக கடற்புல் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டது

உலக கடற்புல் தினம்(World Sea grass Day) கடல்சார் சுற்றுச்சூழலில் கடற்புல் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  அனுஷ்டிக்கப்படுகிறது.  
அந்தவகையில், கிளிநொச்சியில் உலக கடற்புற்கள் தினம்.02-04-2024. இன்று  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயத்தில் காலை 10.00மணிக்கு நடைபெற்றது.  
இதன்போது சுற்றாடல் கீதம் இசைக்கப்பட்டு, சிறப்புரைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கடற்புற்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு, நாச்சிக்குடா கடலுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு குறித்த விடயங்கள் செய்முறையாக காண்பிக்கப்பட்டன.  
இந் நிகழ்வு இலங்கையில் இரண்டாவது தடவையாக இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  
இந் நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் மகேஷ் ஜல்தோட்ட, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையின் சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் ஜெ. நிஷாகன், பூநகரி கோட்ட ஆ. இளங்கோ, சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் ஆ. இளங்கோ, முழங்காவில்
 மகாவித்தியாலய அதிபர் ப. ஆனந்தராசா, மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்..என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.