செவ்வாய், 31 அக்டோபர், 2023

நாட்டில் ஆசிரியர்களால் சீரழிக்கப்படும் மாணவிகள். தண்டனையை கடும் தொனியில் நீதிபதி இளம்செழியன் வழங்கிய கூற்று

 

இலங்கை அதிபர்களே ஆசிரியர்களே18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை நாம் கவனமாக பார்க்க வேண்டும் உங்களை நம்பித் தானே தங்களது பிள்ளைகளை பாடாலைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் தங்கள் கடமைகளை விட்டிலே புரிகிறார்கள். 
 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கிறாள் ஒழுக்கத்துடன் வளர்கிறாள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் வாழ்கின்றனர் . 
நம்பிக்கையை கெடுத்தார் போல் ஆசிரியர்கள் நீங்களே அவர்களின் நம்பிக்கையை கெடுப்பது போல நடந்தால் பெற்றோர்களுக்கு மிகுந்த வேதனை தராதா ? அவர்கள் யாரிடம் போவார்கள் 
 அதே வேளை உங்கள் மகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாள் என்ற செய்தி பாடசாலை நிர்வாகத்திலிருந்து பெற்றோர்களுக்கு செல்லும் போது அவர்கள் எப்படி துடி துடிப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா ? ஆசிரியர் சேவை என்பது 
எவ்வளவு புனிதமான தொழில் அவற்றை களங்கப்படுத்தும் விதமாக செயல்படுவது ஞாயமா ?
 ஆசிரியர்களே அதிபர்களே யாரேனும் தவறு செய்ய முயற்சிக்க வேண்டாம். சட்டம் கடுமையாக உள்ளது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் சிறுமியின் வாக்குமூலம் 
பெற்று உடனே காவல்துறைக்கு அறிவித்து பின் குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை கடுமையாக வழங்கப்படும் 
 ஆசிரியர்களே உங்களை பற்றி நமக்கு கவலை இல்லை 
பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலமும் சட்டமூலம் கொடுக்கும் தண்டனை
 தான் எமக்கு முக்கியம் உங்களை வேலையை 
விட்டு தூக்குவதோ இடம் மாற்றுவதற்கோ நாம் இடமளிக்க மாட்டோம். காரணம் எங்குபோனாலும் அதைதான் செய்யப்போகிறீர்கள் அதனால் நிதானத்துடன் செயல்படுங்கள் .கண்ணியத்தை பேணுங்கள் அதுவே உங்களின் பாதைக்கு சிறந்த வழியாகும் 
 கடுமையான தண்டனை மூலமாக தான் சமூகத்தை நாம் வெகுவிரைவில் திருத்த முடியும் சட்டம் என்பது விளையாட்டு கூடம் அல்ல . பாடசாலையும் களியாட்ட விடுதியுமல்ல. மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் ஞானபீடமாகவே நான் கருதுகிறேன்
 மக்களுக்கும் ஓர் அறிவித்தல் .....நீங்களும் மிக மிக அவதானமாக அனைவரையும் உற்று நோக்குக்குவது உங்களின் தலையாய கடமையாகும் .ஆசிரியர்மார்களிடமும் அதிபரிடமும் மனம் விட்டு 
உரையாடுங்கள். பிள்ளைகள் கல்வி கற்கும் 
முறைகளை நன்கே அவதானியுங்கள். தவறுகள் ஏதும் தென்படின் உரிமையுடன் உங்கள் பிள்ளைகளுடன் உரையாடி 
தவறு புரிந்தவர்களை சட்டத்திடம் அழைத்து செல்லுங்கள் மனதில் ஐயம் வேண்டாம் நம் பிள்ளைகள் எதிர்காலம்
 நமது கைகளிலே.
 எதிர்கால சந்ததியை சீர்படுத்தும் செயலில் நாமும் நீதிபதியுடன் கரம் கோர்த்து செயல்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்....
 எனக்கூறியுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது       


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 30 அக்டோபர், 2023

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேறி வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் வெளியேறி வருவதால் குறித்த பகுதியை அண்மித்துள்ள இடங்களில் வெள்ளம் ஏற்பட 
வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
அதன்படி வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, பிங்கிரிய, பல்லம மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

இலங்கையில் விரைவில் அறிமுகமாகும் புதிய வரி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடி

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 
அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம் இருந்து இந்த வரி அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க 
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார் 
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 28 அக்டோபர், 2023

நாட்டில் உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்க கோரிய மனு: கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு கால அவகாசம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி 
மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை 
உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கல்வி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் 
வழங்கியுள்ளது.
 இது தொடர்பான மனு நேற்று (27) முர்து பெர்னாண்டோ, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய 
மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் 
அழைக்கப்பட்டது.
 இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 27 அக்டோபர், 2023

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை
 முன்னெடுத்துள்ளனர்.
 இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத் பகுதி மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள பகுதி என்பன மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







வியாழன், 26 அக்டோபர், 2023

ஏர் இந்தியா விமான சேவைகள் ஹமாஸ் இஸ்ரேல் போர் எதிரொலியால் ரத்து

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏழாம் தேதி தொடங்கி.26-10-2023. இன்று வரை 20 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு 
தரப்பினர்களும் 
மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால் இதுவரை 8,000 க்கும் 
அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலில் 
சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய அரசின் ஆப்ரேஷன் 
அஜய் திட்டத்தினால் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து 
வரப்படுகின்றனர்.
இந்நிலையில், போர் காரணமாக டெல் அவிவ் நகரம் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நவம்பர் 2-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 25 அக்டோபர், 2023

பிரித்தானிய வெளிநாட்டவரின் விசாக்கள் இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை

இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து யூத-விரோத நடத்தை அல்லது கருத்துக்களுக்காக குறிப்பிட்ட 
வெளிநாட்டினரின் பிரித்தானிய விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 யூத-விரோத நடத்தை காரணமாக அவர்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கான விசாவை ரத்து செய்ய அரசாங்கம் விரும்புவதாக உள்துறை அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
 இஸ்ரேல்-ஹமாஸ் மோதலைத் தொடர்ந்து யூத எதிர்ப்புக்காக அடையாளம் காணும் வெளிநாட்டினரின் பெயர்களை அனுப்புமாறு 
யூத சமூகங்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளையைகேட்டு கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 24 அக்டோபர், 2023

சீன நிறுவனம் யாழ்ப்பாணத்தில் வர்த்தக வியாபாரத்தினை விஸ்தரித்துள்ளது

சீன நிறுவனமான சைனோபெக் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில்.24-10-2023. இன்று செவ்வாய்கிழமை  மானிப்பாய் 
மெமோறியல் வீதியில் சைனோபெக் ஒயில் 
வகைகளை 
அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை 
நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது.  என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






திங்கள், 23 அக்டோபர், 2023

நாட்டில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தொடர்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கை

நாட்டில் கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத வகையில் தனியார் கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச்
 செயலாளர் 
சட்டத்தரணி எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரையிலும், மழை பெய்யும் நாட்களில் முழு நாட்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உதவியை நாடுமாறு சுற்றறிக்கையில் 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளாய், அம்பாறை, மஹாஓயா மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
. என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 22 அக்டோபர், 2023

தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம்

நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.  
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பாள்குளம் கிராம சேவகர் பிரிவில் 21-10-2023.,அன்று  
நடைபெற்றது.  
குறித்த நிகழ்வு கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் பி.ப 2.30மணிக்கு கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன்  ஜனசபை 
முன்னோடி வேலைத் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக விளக்கமளித்தார். தொடர்ந்து தேசிய ஜனசபை செயலாளரின் உரை, 
முன்னாள் சபாநாயகர் கௌரவ கருஜயசூரியவின் 
வாழ்த்துச்செய்தி, பணிப்பாளர் சட்டத்தரணி அகலங்க ஹெட்டியாராச்சியின் ஜனசபை முறை தொடர்பான தெளிவூட்டல் ஆகியன காணொளி ஊடாக இடம்பெற்றன. 
தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனின் உரை இடம்பெற்றது. தொடர்ந்து கரைச்சி பிரதேச 
செயலகத்திற்குட்பட்ட அம்பாள்குளம் கிராம சேவகர் பிரிவிற்கான 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனசபை மக்களால் 
தெரிவு செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து செயற்குழுவின் முன்மொழிவு வேலைத் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் 
கலந்துரையாடப்பட்டன.  
ஜனசபை முறை என்பது கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் தமது கிராமத்தில் எத்தகைய அபிவிருத்தி இடம்பெற வேண்டுமென தாமே 
தீர்மானிப்பதற்கு வாய்ப்பு இடம்பெற வேண்டுமென வழங்கும் ஒரு முறையியல் ஆகும்.  
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன்,உதவித்திட்டமிடல் 
பணிப்பாளர் அ.கேதீஸ்வரன்,ரவீந்திர டீ சில்வா சிவில் சமூக செயற்பாட்டாளர்,வடமாகாணம், S.M.ரசீன் ஜனசபை 
செயலக தகவல் உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம அலுவலர்,கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






சனி, 21 அக்டோபர், 2023

நாட்டில் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தெரிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை 
அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக சுட்டிக்காட்டியுள்ளார்.
வருடமொன்றுக்கு மூன்று தடவைகள் மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை சட்டத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 
அத்துடன், மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்வைத்த 04 காரணங்களும் பொய்யானவை எனவும் அவர்
 சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய, 18 வீதத்தில் இருந்து 20 வீதம் வரையான மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 20 அக்டோபர், 2023

முல்லைத்தீவு நீதவான் சரவணராஜா விவகாரம் அரச ஊடகங்கள் குறிப்பிடும் CID அறிக்கை முழுமையானதா

இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் 
அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அவரது வெளிநாட்டுப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும்
 இலங்கை அரசின் அச்சு ஊடகங்களான தினகரன் மற்றும் தினமின செய்தி வெளியிட்டிருந்தன.
 குற்றபு் புலனாய்வுத் திணைக்களம் (CID), அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய இந்த தகவல் தெரியவந்துள்ளதாக குறித்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்த 
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதவானின் மனைவி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொாண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும் நீதவான் சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து, சட்டமா அதிபர் திணைக்களத்திடமோ அல்லது திணைக்களத்தின் அதிகாரிகளிடமோ விசாரணைகள் எதுவும் முன்னெடுத்ததாக குறித்த செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
 “நீதிபதி சரவணராஜாவின் மனைவி, முல்லைத்தீவு மேலதிக நீதிபதி டி. பிரதீபன், முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
 டி.யூ.பீ. அமரதுங்க, முல்லைத்தீவு பொலிஸ் தலைமையக 
பதில் ஆய்வாளர் W.G.H.N.K. திலகரட்ன, நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு
 பொலிஸ் அதிகாரி கொன்ஸ்டபிள் கே.எஸ். பிரேமன், 
தனிப்பட்ட பாதுகாப்பு கொன்ஸ்டபிள் கே. சிவகாந்தன், முல்லைத்தீவு நீதவான்
 நீதிமன்றத்தின் பொலிஸ் கொன்ஸ்டபிள் எம். முதிசன், 
முல்லைத்தீவு பொலிஸ் கொன்ஸ்டபிள் ஆகிய சமரகோன் 
மற்றும் சந்தருவன், முல்லைத்தீவு நீதிமன்ற பதிவாளர்
 பீ.சரவணராஜா, நீதிபதியின் அலுவலக எழுத்தர் பீ. சுசிகன், பிஸ்கல் எஸ். சிவக்குமார் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தியோகத்தர்
 ஜே. லின்டன் ராஜா” ஆகியோரிடம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் 
கூறப்பட்டுள்ளது.
 மேலும், முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடந்த 3ஆம் திகதி அந்த ஆணைக்குழு அறிவித்திருந்தது.
 எனினும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கேட்டறிந்ததாக அந்த செய்தியில் எவ்வித தகவலும் குறிப்பிடப்படவில்லை. சட்டமா அதிபர் 
அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக நீதவானை, சட்டமா அதிபர் திணைகளத்திற்கு அழைக்கவில்லை எனவும், நீதவான் என்ற 
அடிப்படையில், அவர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள 
வழக்குகள் குறித்து 
சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காகவே அவர் கொழும்பிற்கு அழைக்கப்பட்டதாகவும், சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
 எனினும் இந்த தகவல் தொடர்பிலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்துகள் எதனையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 
பதிவு செய்ததாக குறித்த தினமின செய்தியில் 
குறிப்பிடப்படவில்லை.
 இதேவேளை, அரச அச்சு ஊடகங்களின் செய்திக்கு மூலாதாரமாக குறிப்பிடப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது  
குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது
  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 19 அக்டோபர், 2023

நாட்டில் கொத்மலை கிராம மக்களை பயமுறுத்தும் குரல் பேராசிரியர் தகவல்

கொத்மலை வெத்தலாவ பிரதேசத்தில் இருந்து கேட்ட அசாதாரண குரல் தொடர்பில் இன்று விசேட அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
 பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் 
அதுல சேனாரத்ன இன்று அப்பகுதியை பார்வையிட்டதன் பின்னர் இந்த தகவலை வெளியிட்டார்.
 கொத்மலை வெத்தலாவ பிரதேசத்தில் இருந்து கேட்கும் அசாதாரண ஒலியானது பூமியின் ஓட்டையினூடாக நீர் செல்வதால் ஏற்படும் சத்தம் என பேராசிரியர் தெரிவித்தார்.
 இது ஒரு தீவிரமான சூழ்நிலை இல்லை என்று பேராசிரியர் மேலும் கூறினார்.
 நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் கடந்த 14 ஆம் திகதி முதல் கொத்மலை வெத்தலாவ விளையாட்டு மைதானத்திற்குள்
 இருந்து கிராம மக்கள் அசாதாரண சத்தம் கேட்டு 
வருகின்றனர்.
 கிராம மக்களை பயமுறுத்தும் இந்த குரல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 இவ்வாறானதொரு பின்னணியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் திரு.அதுல சேனாரத்ன இன்று தாமாக முன்வந்து அப்பகுதிக்கு வந்து உரிய இடத்தை அவதானித்தார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



புதன், 18 அக்டோபர், 2023

பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாப்த்தி எட்டு விமானங்கள் ரத்து

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ், எரிபொருள் கிடைக்காததால் 48 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.
 தினசரி விமானங்களுக்கான குறைந்த எரிபொருள் விநியோகம் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள், 
ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.என்பதும் குறிப்பிடத்தக்கது.    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 17 அக்டோபர், 2023

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஆபத்து பகுதிகளை கண்டறிய ஆய்வு

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படும் ஏனைய இடங்களைக் கண்டறியும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார 
சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன்
 தெரிவித்துள்ளார்.
 பாதுகாப்பு அமைச்சின் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்கும் செயற்திட்டத்தின் ஊடாக அபாயகரமான இடங்களை கண்காணித்து அவற்றுக்கு விரைவான
 தீர்வுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
 இதேவேளை, மண்மேடு சரிந்து வீழ்ந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிகள் குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின் இறுதி முடிவு கிடைத்த பின்னர்
 போக்குவரத்துக்கு முழுமையாக திறக்கப்படும் என வீதி 
அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 16 அக்டோபர், 2023

நாட்டில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

நாட்டில்அடுத்த மாதம் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
* பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 15 அக்டோபர், 2023

நாட்டில் ஆறு அரச வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டம்

நாட்டில் ஆறு அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் 
தெரிவித்துள்ளது. 
 இத்திட்டத்தின் முதற்கட்டமாக அரச  வங்கி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார். 
 இதன்படி, தற்போதைய அரச  வங்கிச் சட்டம் நீக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 இந்த ஆறு வங்கிகளில் உலகின் முப்பது பெரிய அரச வங்கிகளில் இரண்டு வங்கிகளும் இருப்பதாக அவர் மேலும் 
குறிப்பிட்டார். 
 அரச வங்கிகள் இலாப நோக்குடன் நிறுவப்படவில்லை என்றும், தொலைதூர கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவப்பட்டது என்றும் அவர் கூறினார். 
 இந்த விடயத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து பாரிய தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 14 அக்டோபர், 2023

ஆனையிரவு,பகுதியில் ரயிலில் மோதி கால்நடைகள் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனையிரவு,பகுதியில்.
 13-10-2023.அன்று யாழ்ப்பாணம் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த 
அதிவேக கடுகதியில் மோதிண்டு 11 பசு மாடுகளும் 6 நாம்பன் மாடுகளுமாக மொத்தம் 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
அறிவித்துள்ளனர். 
கால்நடை உரிமையாளரின் அசமந்த போக்கு காரணமாகவே 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 13 அக்டோபர், 2023

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம்

யாழில்  இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விவசாய காணிகளில் பெரும் பகுதி விடுவிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக 
யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் 
தெரிவித்துள்ளார். 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
யாழ்.மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் , உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பெருமளவான காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. 
அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் தெல்லிப்பழை பிரதேச
 செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட அரச 
காணிகளை காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளோம். 
அவற்றில் UNDP யின் நிதி அனுசரணையில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்னமும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகளே உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. அவற்றில் பெருமளவான விவசாய காணிகளும் உள்ளடக்கம். 
விவசாய நிலங்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கமைவாக யாழில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய காணிகளில் பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளன என தெரிவித்தார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 12 அக்டோபர், 2023

நாட்டில் நைனாமடு பகுதியில் முதல் முறையாக கண்டுப்பிடிக்கப்பட்ட அரியவகை மீன் இனம்

இலங்கையில் முதன்முறையக அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று பிடிபட்டுள்ளது. புத்தளம், நைனாமடு பகுதியைச் சேர்ந்த 
மீனவர்களின் வலையில் குறித்த அரியவகை 
மீன் சிக்கியுள்ளது. 
இதுபோன்ற அரிய வகை மீனைப் பார்ப்பது இதுவே முதல் முறை எனவும், துறைமுகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் துறைமுக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 
முயல் மீன் என அழைக்கப்படும் இந்த வகை மீன்கள் உட்கொள்வதற்கு உகந்தவை அல்லவென அறிவிக்கப்பட்டுள்ளது. 
 கனடா, கொலம்பியா, பிரான்ஸ், காம்பியா, ஐஸ்லாந்து, மொரிட்டானியா, மெக்சிகோ, நமீபியா, செனகல், தென்னாப்பிரிக்கா, சுரினாம் 
மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுவதாக தேசிய நீர்வள 
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) 
தெரிவித்துள்ளது.  
இந்த மீன் Longnose chimaeras குடும்பத்தை ஒத்த இனமாகும் மற்றும் மிதமான கடல்களில் 1,500 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வாழ்கிறது. 2018 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் பின்னர் இந்த வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாரா தெரிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 11 அக்டோபர், 2023

பாிஸில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டது

பிரான்ஸின் பாிஸில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இரண்டு ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
 நாளை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு Place de La République சதுக்கத்தில் இருந்து இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு 
ஆதரவாகவும் இடம்பெற இருந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறை தலைமையகம் தடை விதித்துள்ளது.
 முன்னதாக, லியோன், மார்செய் போன்ற நகரங்களிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


Blogger இயக்குவது.