செவ்வாய், 31 ஜனவரி, 2017

அனைவரும் அவதானம் புதிய நுளம்பு வகையால் ஆபத்தான நோய் மன்னாரில்!!

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக சிறிலங்காவை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அழிப்பதற்கு கடினமான, மலேரியா நோயைப் பரப்பும் புதிய நுளம்பு வகை ஒன்று மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார், பேசாலைப் பகுதியில் இருந்த கிணறுகளில் இருந்து இந்த நுளம்பு வகை கண்டறியப்பட்டுள்ளதாக, மலேரியா எதிர்ப்புத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹேமபால ஹேரத்
 தெரிவித்துள்ளார்.
இந்த நுளம்பின், விஞ்ஞானப் பெயர், அனோபிலெஸ் ஸ்டீபென்சி (Anopheles Stephens) ஆகும். இந்தியாவில் மலேரியா நோயைக் காவும் பிரதான நுளம்பு வகை இதுவேயாகும். ஆரம்பத்தில் வட இந்தியாவிலேயே இது கண்டறியப்பட்டது. பின்னர் குறுகிய காலத்திலேயே, தென்னிந்தியாவுக்கும் பரவி விட்டது.
இந்த வகையிலேயே சிறிலங்காவுக்கும் பரவியிருக்க 
வாய்ப்புகள் உள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 30 ஜனவரி, 2017

கர்ப்பிணிப் பெண் கொலையில் மேலும் இருவர் கைது!!

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் இருவரை நேற்று இரவு(27) யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 இவர்கள் இருவரும் அன்றைய தினம் np-Daf-8970 வாகனத்தில் ஆடு வாங்குவதற்காக அப்பகுதியில் நடமாடியதாக  பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த சுஜா(வயது 31) மற்றும் அரபாத்(வயது-35) சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தீவகப்பகுதியில்  இவர்கள்  மாடுகள்  வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை  நடைபெற்ற போது யாழ் நகரப்பகுதியில் இருந்ததாக  விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



யாழ் மாணவர் படுகொலை; பொலிஸ் விசாரணை இடை நிறுத்தம்!!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம் பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களமானது மேற்கொண்டு வந்த விசாரணையானது இடைநிறுத்த ப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவானது மன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களது
 உறவினர்களிற்கு இவ் வழக்கு தொடர்பாக ஏதாவது அச்சுறுத்தல் காணப்பட்டால் அது தொடர்பில் நீதிமன்றுக்கோ அல்லது பொலிஸ்மா அதிபருக்கோ தெரியப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் வைத்து
 யாழ்.பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தி யோகத்தர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான 
வழக்கு விசாரணையானது யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் இவ்வழக்கு விசாரணையானது யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம் மற்றும் சட்டத்தரணி சயந்தன் ஆகியோர்
 முன்னிலையாகியிருந்தனர். இதன்போது மன்றில் இவ்வழக்கு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு அதிகாரி விசாரணை தொடர்பான மேலதிக அறிக்கையை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
மேலும் இச் சூட்டு சம்பவம் தொடர்பாக
 பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையானது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர். அத்துடன் இவ் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் காணப்படுமாயின் அது தொடர்பில் நீதிமன்றுக்கோ அல்லது பொலிஸ்மா அதிபருக்கோ தெரியப்படுத்த முடி யும் எனவும் நீதிவான் குறிப்பிட்டார்.
கொல்லப்பட்ட மாணவர்களின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ள தாகவும் நீதிவான் தெரிவித்துடன் சந்தேக நபர்க ளான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 27 ஜனவரி, 2017

லண்டனில் அடித்து கொல்லபப்ட்ட கனடா இளைஞர் பெரும் ரகசியங்கள் வெளியானது

 மனைவியோடு உறவு: லண்டனில் அடித்து கொல்லபப்ட்ட கனடா இளைஞர்   கடந்த சனிக்கிழமை அதிகாலை நான்குமணியளவில் மில்டன் கீன்ஸ் நகரில் உள்ள பொலிசாருக்கு அவசர  ஒன்று அழைப்பு வந்துள்ளது 
இதனை அடுத்து பொலிஸார் சம்பவம் நிகழ்த்த இடத்திற்கு விரைந்தவேளை அங்கே இலங்கை தமிழர் 
அடித்து கொல்லப்ட நிலையில்  இருந்துள்ளார் 
இதனை அடுத்து பொலிஸார் அந்த இடத்தை லக்கடவுன் செய்து பெரும் தேதடுதல்  நடத்தி 20.01.2017.அன்று 
பத்து இளையரை கைது செய்தனர் இதன் பின்னணியில் பெரும் திகில் அடங்கி உள்ளதாக விடயம் 
அறிந்த வடடாரங்கள் தெரிவிக்கின்றன 
லண்டனில் கஸ்ரப்பட்டு வேலை செய்து ஊரிலிருந்து விஷமூலம் இந்தப்பிபெண்ணை 
அழைத்தார் ஆனால் இந்த பெண்ணுக்கு வெளிநாட்டு மோகம் பிடித்து 
பாகிஸ்தான்   வாகன சரதியுடனும் பலஆண்களுடன் தொடர்பு 
வைத்திருந்தார் 
இதனை கணவன் கண்டித்ததால் கனடாவில்  வாழ்த நபருடன் தொடர்புடன் இருந்தார்
பின்பு அவர் லண்டன் வந்தார் 
இன் நிலையில் தான் கணவர்,  நீங்கள் எதை வேண்டும் என்றாலும் செய்யுங்கள். ஆனால் விவாகரத்துக்கு பின்னர் எதனையும் செய்யுங்கள். அதுவரை இவர் எனது மனைவி என்று தான் ஊர் உலகம் பேசும் என்று கூறி கண்டித்துள்ளார். ஆனால்
 வெள்ளிக்கிழமை இரவு , நான் யார் தெரியுமா ? கனடாவில் என் பெயரைக் கேட்டால் எத்தனை பேர் நடுங்குவார்கள் தெரியுமா என்று அந்த இளைஞர் வீர வசனம் பேச. லண்டனில் மிக விரக்த்தியில்
 இருந்த கணவர் தனது நண்பர்களோடு சென்று அடித்துள்ளார். ஆனால் அவர் இறக்கும் 
கூறப்படுகிறது. மனைவியோடு தொடர்பு என்று கணவன் அறிந்தால் என்ன நடக்கும் என்று எவரும் சொல்ல தேவையே இல்லை. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள்.
சில தீராத ஆசை நோய் கொண்ட பெண்களை வாழ்கையில் நாம் பெற்றுவிட்டால். அது போல துன்பம் வேறு ஒன்றுமே கிடையாது எனலாம். இந்தப் பெண்ணால் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் வாழ்மை தொலைத்து சிறையில் உள்ளார்
. தமிழ் கலாச்சாரம் லண்டனிலும் கனடாவிலும் மிகவும் கேவலமாக கெட்டு குட்டிச் சுவராகி நாசமாகி வருகிறது. என்ன செய்யப்ப்போகிறோம் ?
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>,






தங்கையை இழந்த அண்ணன் நீதிமன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்`?

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகாவின் சகோதரன் இன்று நீதிமன்றில் பொலிஸாருடன் வாக்குவாதத்தில்
 ஈடுபட்டுள்ளார்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்று கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் 
ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற எல்லையை விட்டு குறித்த இளைஞனை பொலிஸார் வெளியேற்றி உள்ளனர்.
மண்டைதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு மக்கள் பொலிஸாருடன் முரண்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து
 வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலேயே மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 25 ஜனவரி, 2017

காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த இளம்பெண் கைது!

மத்தியப்பிரதேசம் மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள நவ்கவான் (தர்ஷன் சிங்) கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரும் கடந்த மூன்றாண்டுகளாக உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர்.
வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்களாக இருந்தபோதும், அந்த வாலிபரை ஒரு கோயிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட அந்த இளம்பெண், இந்த திருமண பந்தம் தந்த உரிமையால் அந்த வாலிபருடன் பலமுறை படுக்கையை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு தகவல் அந்த இளம்பெண்ணை அதிர்ச்சியடைய வைத்தது.
தன்னை ஒதுக்கிவிட்டு, அதே கிராமத்தில் பெற்றோர் நிச்சயித்து வைத்துள்ள வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள தனது காதலன் சம்மதம் தெரிவித்து விட்டதாக தோழிகள் மூலம் அவருக்கு 
தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 23-ம் தேதி இரவு தாங்கள் எப்போதும் ரகசியமாக சந்திக்கும் இடத்துக்கு அந்த வாலிபரை வரவழைத்த அந்த இளம்பெண், கடைசியாக உங்களுடன் உடலுறவு வைத்துகொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தினார்.
அந்த வாலிபரும் அதற்கு இணங்கி, உச்சகட்ட இன்பத்தில் திளைத்திருந்தபோது, மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளால் அவரது பிறப்புறுப்பை வெட்டி, துண்டித்தார்.
வலியும், வேதனையும் தாங்க முடியாமல் அங்கிருந்து தனது வீட்டுக்கு ஓட்டம் பிடித்த அந்த வாலிபர் தனது வேதனையை யாரிடமும் வெளிப்படுத்த இயலாமல் தணல்மேல் புழுவாக துடிதுடித்தார்.
எனினும், அவருக்கு ஏற்பட்ட ரத்தப்போக்கை கண்டு பதற்றம் அடைந்த பெற்றோர் அவரிடம் துருவித்துருவி, விசாரித்தபோது நடந்த விபரத்தை அவர் வெளியிட்டார்.
இதையடுத்து, அந்த வாலிபரின் பெற்றோர் உடனடியாக அவரை சித்தி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதல்கட்ட சிகிச்சைக்கு பின்னர் ரேவாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஜபல்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரித்து வரும் நிலையில் அந்தப் பெண்ணின் துணிகரமான செயல்பாட்டை அந்த கிராமத்தை சேர்ந்த பலர் பாராட்டியும், சிலர் தூற்றியும்
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 22 ஜனவரி, 2017

சாலமன் தீவுகளில் இன்று காலை 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்?

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகள் இடையே அமைந்துள்ள Bougaineville தீவு அருகே சுமார் 168 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து அருகில் உள்ள தீவுகளை சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா, சமோவா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, டோங்கா, நியூ கலிடோனியா மற்றும் பிற சுற்றியுள்ள தீவுகளில் 0.3 மீட்டர் என குறைவாக அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுனாமி எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானியல் ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.

உலகில் ஏற்படும் சுமார் 90 சதவீத நிலநடுக்கும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் சாலமன் தீவுகளில் ஏற்படுவது என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 16 ஜனவரி, 2017

வணக்கம் ஐரோப்பா 2017 மண்டபம் நிறைந்து வழிந்தநிகழ்வு

அனைத்து அன்பு உறவுகட்க்கு எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் கூற்றுக்கிணங்க தமிழர் ஆண்டின் தொடக்கம் எனப்படும் தை மாதம் முதல் நாளிலே தமிழர்களினதும்இ உழவர்களினதும் திருநாளாம் தைப் பொங்கல் தினமாம் இன்று நமது இலங்கைத் திருநாட்டிலும்இ புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் அனைவரதும் இல்லங்களில் பொங்கல் பொங்க உள்ளங்களில் இன்பம் பொங்க வாழ்த்துகின்றேன்..
சபையோரால்; மண்டபம் நிறைந்து வழிந்த நிலையில் நடந்து முடிந்த 'வணக்கம் ஐரோப்பா 2017 ' கலை நிகழ்வு. சபையோர் முன்னிலையிலேயெ வரவு செலவுக் கணக்கை அறிவித்த முன்னோடிச் செயல்.
எழுத்தாளர் கவிஞர் ஆய்வாளர் நடிகர்  என பண்முகம் ஆற்றல்கொண்ட கந்தையா முருகதாஸ் அவர்களின் ஒரு நேரியல் பார்வை
நேற்றைய தினமான புதுவருடப் பிறப்பன்று (01.01.17) ஜேர்மனி ஒபகௌசன் நகரில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாதிப்புற்ற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக கலைக்கூடம் ஒன்றை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வாக 'வணக்கம் ஐரோப்பா 2017 நெஞ்சம் மறக்குமா என்ற பல்துறை கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
சபையோரால் மண்டபம் நிறைந்து வழிந்த நிலையில் மேடையேறிய அத்தனை கலை நிகழ்ச்சிளும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு நடந்தன. சபையோர் மகிழ்ச்சியுடனும் வியப்புடனும் இரசித்து 
மகிழ்ந்தனர்.
இனிவருங்காலம் என்பது இளந்தலைமுறையினரின் கைகளிலேதான் என்பதை யாருமே மறுக்க முடியாது. இளந்தலைமுறையினரின் கலை நிகழ்வுகளும் பெரியவர்களின் நிகழ்வகளும் சபையோரை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தன.ஆர்ப்பரித்து 
இரசிக்க வைத்தன.
இந்த விழாவை ஐந்து அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்கள்.
விடுதலைப்பாடல்கள் திரையிசைப் பாடல்கள் என எல்லாவற்றையும் சபையோர் இரசித்தனர். ஈழ மக்களுக்கு எதிரான மக்கள் என்று யாரும் இல்லை என்பதையும். தவறுகளை கண்டிப்பதாலும் விமர்சிப்பதாலும் அதை நேர் கொள்ள முடியாதவர்கள் , மடியில் கனம் இருப்பவர்கள் பழிக்குப் பயப்படுவது போல பயந்து கொண்டு நானே 
எல்லாம் என்ற கோயல்பல்சின் தந்திரங்களை கட்டவிழ்த்து இந்நிகழ்விற்கு பல வழிகளிலும் இடைஞ்சல் கொடுத்துப் பார்த்தார்கள். (விமர்சனங்களையும் கண்டனங்களையும் நிராகரிப்பவர்களால் நேர்ப்பாதையில் செல்லவே முடியாது.) 
ஆனால் எதுவுமே எடுபடவில்லை.பொதுமக்களின் ஆதரவுடன் இவ்விழா வெற்றிவிழாவாக நடந்திருக்கின்றது. பொது வாழ்வில் ஊழலற்றவன் எங்கும் எந்தச் சபையிலும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்பான் என்பதற்கு இந்த விழா சான்றாக அமைந்துவிட்டது.
இறுக்கமான புலம்பெயர் வாழ்வில் மக்களை ஆறுதல்படுத்த கலைவிழாக்கள் தேவை. இந்த விழா இரண்டு செயலைச் செய்திருக்கின்றது. மக்கள் இரசித்து சிரிக்க கலை நிகழ்ச்சிகளையும், நிகழ்ச்சிகளைப் பார்க்க மக்களால் கொடுக்கப்பட்ட நிதி விழுப்புண் அடைந்த போராளிகளின் கலைக்கூடச் சேவைக்கும் போயச் சேருகின்றது.
விழாவின் இறுதியில் அண்ணளவாக விழாவுக்கான வரவு செலவினை சபையோருக்கு விழா அமைப்பாளர்கள் வாசித்துக் காட்டியமை ஒரு முன்னோடிச் செயலாகும்.
'நாங்களே எல்லாம், நாங்கள் சொல்வதையே நீங்கள் கேட்க வேண்டும், கேட்காவிட்டால் மேடை இல்லை 'என்று கலைஞர்களை கொத்தடிமைகளா கோழைகளாக எண்ணியவர்களின் கோட்:டை பொதுமக்களின் ஆதரவினால் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
ஓவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை என்பது அவனது பிறப்புரிமை. அதனைச் சீண்டினால் என்ன நடக்கும் என்பதை இந்த விழா சர்வாதிகாரிகளுக்கு நினைவூட்டிவிட்டது.
நிழல் படங்கள்  இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








சனி, 14 ஜனவரி, 2017

டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கல் விழா (15.01.2017)

டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கல்விழா (15.01.2017)நடைபெறுவதர்க்கான ஆயத்தங்கள் சிறப்புற நடை பெற்று வருகின்றன அந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். மக்களும்,வர்த்தகர்களும்,விழாக்குழுவினரும் ,

நிகழ்வுகளாக

மங்கல விளக்கேற்றல்
அக வணக்கம்
ஆசியுரை
நடனங்கள்
நாடகம்
வில்லுப்பாட்டு
பாடல்கள்
உள்பட இன்னும் பல நிகழ்வுகள் இடம் பெறும்
அனைவரும் வருக
பொங்கள் விழாவில் கலந்துகொண்டு கொண்டாடி மகிழ

Categories Uncategorized, புதிய படைப்புகளின் விமர்சனம்
Post navigation
யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா………
திரி நான் தீபம் நீ…கவிதை கவி நகுலா சிவநாதன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 12 ஜனவரி, 2017

பத்து வயது தமிழ் சிறுவன் 400 மொழிகளை கற்று சாதனை(காணொளி)

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்
மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 வயது அக்ரம் என்ற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். இவர் இஸ்ரேலில் படித்து வருவதாகவும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளதோடு தான் பங்குற்றிய நிகழ்வு காணொளிகளையும் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
வாழ்க்கைக்கு ஐந்து மொழிகளும், வாழ்வதற்கு ஆறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பது மாணவர் அக்ரம் கொடுத்த கூடுதல் தகவல்
புத்திக் கூர்மையை மேம்படுத்துவது எப்படி?
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
நானூறு மொழிகள்
நானுறு மொழிகள் அறிந்த பத்து வயது மாணவர் அக்ரம் மாணவர்களிடம் சிறப்புரை நிகழ்த்தினார். அக்ரம் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வசிக்கிறார். ஆன்லைன் மூலமாக இஸ்ரேலில் உள்ள கல்வி முறையில் படிக்கிறார். 

அரசு உதவி பெறும் பள்ளியில் அவர் பயிற்சி தந்தது இதுவே முதல் முறையாகும். அவர் பேசும்போது இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளான அரபிக், அச்செனிஸ், ஆப்ரிக்கன்ஸ், அல் பேனியன், அமசைக் போன்ற நானுறு மொழிகளை மூன்று நிமிடத்தில் கூறி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
40 மொழிகளில் நல்லா இருக்கீங்களா
நீங்கள் எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் என்பதை நாற்பது மொழிகளில் பேசி காட்டினார். மேலும் தேவகோட்டை என்கிற வார்த்தையை நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் எழுதி 
காண்பித்து மாணவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி? என்பது தொடர்பாக மூளைக்கு பயிற்சி அளிக்கும் இருபத்தைந்து பயிற்சி முறைகளை செய்து காண்பித்தார்.

இயற்கை உணவு அவசியம்

இயற்கை உணவு முறைகளை உண்பதால் தனக்கு எந்த வியாதியும் இது வரை வந்தது கிடையாது என்றும் ,இது வரை தான் மருத்துவமனைக்கு சென்றது கிடையாது என்றும் தெரிவித்தார். தற்போது தான் இஸ்ரேல் நாட்டில் படிப்பதாகவும் தெரிவித்தார். மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்றும் தெரிவித்தார். இதனை பார்த்து அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள்.

உளவியாளர் பிரியன்

உளவியாளரும், பன்மொழி அறிஞருமான மொழிப் பிரியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் இயற்கை உணவு மூளை வளர்ச்சியை அதிகரிக்கும். கேழ்வரகு, சாமை, சோளம், கம்பு, குதிரைவாலி போன்ற இயற்கை உணவை உண்பதால் எந்த நோயும் அண்டவில்லை .இதுவரை தனது குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என மருத்துவமனை சென்றது கிடையாது. சர்க்கரையை தவிர்த்து இனிப்புகளையும் தவிர்த்து இளமையுடன் வாழ பழகி கொள்ளுங்கள். சீதாப் பழம், கொய்யா பழம், சப்போட்டா பழம் அதிகம் சாப்பிடுங்கள் என்றார்.

ஆறு மொழிகள் அவசியம்

மொழி குறித்து அவர் கூறுகையில், வாழ்க்கைக்கு தமிழ், அரமைக், ஹிந்தி, ஸ்பானிஷ், ஹீப்ரு என ஐந்து மொழிகளும், வாழ்வதற்கு ஆங்கிலம், ஹிந்தி, அரபிக், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ் என ஆறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். சைனீஸ் மொழியை தொண்ணுற்று ஐந்து கோடிபேர் பேசுறாங்க என்றார். கதைகளின் வழியாக மாணவர்களுக்கு அதிகமான படங்களை சொல்லி கொடுங்கள் என ஆசிரியர்களுக்கும், கதைகளை அதிகமாக கேட்க சொல்லி மாணவர்களிடமும் வேண்டுகோள் வைத்து பேசினார். தான் இது வரை பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு நாடுகள் சுற்றி ஆராய்ச்சி செய்ததன் அடிப்படையில் இதனை சொல்வதாகவும் 
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 10 ஜனவரி, 2017

செட்டிகுளம் மகாவித்தியாலய உயர்தர பரீட்சையில் முதலிடம்!

   
வடமாகாணத்தில் தோட்டம் செய்து பாடசாலைக்கு நடந்து சென்று உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவன்
வெளியாகிய கல்விப் பொது உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் உயிர்முறைகள் தொழில்நுட்பபிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் முதலிடம் பெற்று சாதனை
 படைத்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மணிவேல் தர்மசீலன் என்ற மாணவனே உயிர்முறைகள் தொழில் நுட்பப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
வடமாகாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் 
பெற்றுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






திங்கள், 9 ஜனவரி, 2017

ஜெ.மண்டலேஸ்வரன் அவர்கள் இறையடி சேர்ந்தார்!

இசைத் துயர் பகிர்வு” இசைக்கலைஞர் ஜெ.மண்டலேஸ்வரன்.
யாழ்/ மண்டலேஸ்வரன் இசைக்குழுவின் இயக்குனர்.
ஜெ.மண்டலேஸ்வரன் அவர்கள்
 இறையடி சேர்ந்தார்!
ஈழ மணித்திருநாட்டின் இசையுலகில் புகழ்பெற்ற மாபெரும் இசைக்கலைஞன் ஈழநல்லூர் “குரலிசைத்திலகம்” ஜெ.மண்டலேஸ்வரன் அவர்கள்.
யாழ்/ மண்டலேஸ்வரன் இசைக்குழுவின் இயக்குனர்.
07.01.2017 இன்று காலையாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்!
இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
அவரின் பிரிவினால் துயருறும்
அவர் குடும்பத்தினருக்கும்,
இசையுலக உறவுகளுக்கும்,
ரசிக உள்ளங்களுக்கும் 
எமது கண்ணீர் காணிக்கைதனை சமர்ப்பிக்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 2 ஜனவரி, 2017

அத்தியார் கல்லூரியில் 27 ஆண்டுகளாக சேவையாற்றிய தயாராணி ஆசிரியர.

அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே ஆரம்பக்கல்வி முதல் தனது உயர்தரம் வரை கற்று இந்தக்கல்லூரியிலேயே 27 ஆண்டுகள் ஆசிரியராகவும் உபஅதிபராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசிரியை திருமதி மனோகரன் தயாராணி அவர்கள் 01.01.2017 அன்று தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறுகின்றார். அத்தியார் இந்துக்கல்லூரியில் ஆயிரம் ஆயிரம் மாணவர்களை கற்பித்து ஆளாக்கிய 
அனைவரது மதிப்புக்கும் உரிய தயாராணி ஆசிரியர் 01.01.1957 ஆம் ஆண்டு பிறந்தார்.ஆரம்பக்கல்வி முதல் தனது உயர்தரம் வரை அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை தொடர்ந்தார்.
 பின்னர் 1982.02.17 இல் 
கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.அதன் பின்னர் 1989.04.01 அன்று அத்தியார் இந்துக்கல்லூரியில் கடமைப்பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் 
வளர்ச்சிக்காகவும் 27 ஆண்டுகள் அயாராது உழைத்தார். அத்துடன் ஆசிரியர் ,பகுதித்தலைவர், உப அதிபர் என பல பதவிகளை வகித்தார். இன்னும் ஒரு சில தினங்களில் அவரது சேவை நிறைவுக்கு வருவது அனைத்து அத்தியார் 
இந்துக்கல்லூரிச்சமூகத்திற்கும் கவலை தருகின்ற விடயமாகும். இன்னும் சில ஆண்டுகள் இவரது சேவைக்காலம் 
நீடிக்காதா என மாணவர்கள் ஏங்குகின்றனர். எங்கள் ஆசிரியை திருமதி மனோகரன் தயாராணி அவர்களின் ஓயு்வு காலம் சிறப்பாக அமையவும் நீண்டகாலம் நோயின்றி வாழவும் 
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். நீர்வேலி மக்கள். நவக்கிரி . நிலாவரை இணையங்கள்  வெளிநாட்டில் வாழும் நீர்வேலி மக்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.