திங்கள், 8 ஏப்ரல், 2024

இரு நாட்டு தமிழ் உறவுகளையும் கச்சதீவு விவகாரம் பலிக்கடாவாக்கும் மத்திய அரசுகள்

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் ஆய்வாளர் சி.ஆ.ஜோதிலிங்கத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில்.08-04-2024. இன்று இடம்பெற்றுள்ளது.
 இலங்கை, இந்தியா இடையேயான கச்சதீவு விவகாரம், இரு நாட்டு தமிழ் உறவுகளையும் பலிக்கடாவாக்கும் மத்திய அரசுகள் என 
அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின்
 பா.ஜா.க அரசானது காங்கிரஸ் மற்றும் தி.மு.கா வையும் வசைபாடி தேவையற்ற பிரசினையை இழுத்து விட்டுள்ளது எனவும் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
 மேலும், தமழரசுக் கட்சியின் உள்ளக முரண்பாடு, நீதிமன்றம் வரை இழுத்துவிடப்பட்டுள்ள சூழ்ச்சியும், எதிர் வரும் தேர்தல்களில் கையறு நிலையில் தமிழ் மக்கள் உள்ளார்கள். மாறி மாறி 
புதிய விடயங்களை இடை மனைக்களாக புகுத்துகின்றதன் 
மூலம் எதிர் வரும் தேர்தலில் காத்திரமான முடிவை தமிழரசு 
எடுக்க முடியாது நிலை உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தமிழரசுக் கட்சி ஆதரிக்கும் நிலையில் உள்ளது. 
அதுவும் பின்னணியில் பிற சக்திகளின் சூட்சியாக இருக்கலாம். சர்வதேச சக்திகளின் கைங்கரியமும் தமிழரசை இல்லாது செய்யும் முயற்சியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
 ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்துவது கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவு செய்வதே சிறந்தது. மனோகணேசன் பெரும் தேசியவாத்தினருடன் இணைந்து கொழும்பு அரசியலுடன் இருப்பவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.