செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

நாட்டின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க நடவடிக்கை

நாட்டின் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்கட்டமைப்புக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தீவிரமாக பயன்படுத்த
 வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.  
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கிழக்கு சீனாவில் உள்ள சோங்கிங் துறைமுகம் மற்றும் ஆபிரிக்கா வரை மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேற்கு, கிழக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். 
மொனராகலை பிரதேசத்தில் மேலதிகமாக உள்ள 
ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பயன்படுத்தி புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டத்தையும் ஜனாதிபதி 
வெளிப்படுத்தினார்.
மேலும், நகர நெரிசலைக் குறைப்பதற்காக அவிசாவளை மற்றும் அஹெலியகொட மற்றும் ஏனைய பிரதேசங்களின் மூலோபாய திறன்களைப் பயன்படுத்தி புதிய நகரங்களை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.