ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

இளம் வயதினர் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் ஜப்பான்

கிழக்காசிய நாடான ஜப்பானில், மக்கள் தொகை வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல துறைகளில் பணியாற்றுவதற்கு போதிய இளைஞர்கள் இல்லாமல் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைந்து, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையிலிருந்து 4-வது நிலைக்கு ஜப்பான் தள்ளப்பட்டது.
மேலும், ராணுவத்தில் சேர்வதற்கும் போதுமான அளவு இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்நிலையில், ராணுவத்தில் இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை நீக்க ஜப்பான்
 முடிவு செய்துள்ளது.
அதில் ஒன்றாக, வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து, இனி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் சற்று நீளமான முடி வைத்துக் கொள்ள 
அனுமதிக்கப்படுவார்கள். இனி புதிய வீரர்கள், தலையின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் குறைவாகவும், மத்தியில் நீளமாகவும் வைத்து 
கொள்ளலாம்.
பெண்கள், சீருடையில் உள்ள போது தோள்களில் விழாத அளவிற்கும், ஹெல்மெட் அணியும் போது தடையாக இல்லாதவாறும், நீளமாக வைத்து கொள்ளலாம்.
 சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை சமாளிக்க அனைத்து வழிமுறைகளையும் 
ஜப்பான் எடுத்து
"அனைத்து துறைகளிலும் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் தனியார் துறையுடன் போட்டியிட்டு இளைஞர்களை ஈர்க்கும் நிலையில் உள்ளோம்" என பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா (மினொரு Kihara) தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.