செவ்வாய், 3 நவம்பர், 2020

கனேடிய தேசத்திற்கு புலம்பெயர்ந்த குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்

தனது குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த விரும்பி கனடாவுக்கு ஒரு குடும்பம் புலம்பெயர்ந்த நிலையில் அதன் குடும்பத் தலைவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.
 சிரியாவை சேர்ந்தவர் Majd Yared. இவரின் தொழில் முற்றிலுமாக நஷ்டமான நி
லையில் தனது மனைவி மற்றும் இரண்டு
 பிள்ளைகளுடன் கனடாவின் அல்பர்டாவுக்கு கடந்த 2016ல் புலம்பெயர்ந்தார்.கனடாவின் குடியுரிமையை 
பெற்று அங்கு உணவகம் தொடங்கி, ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதை 
கனவாக Majd Yared வைத்திருந்தார்.
ஆனால் Majd Yaredன் கனவு எதுவும் நிறைவேறாமலேயே கடந்த 27ஆம் திகதி கொரோனா தொற்று பாதிப்பால் அவர் 
உயிரிழந்தார். அவரின் மனைவிக்குத் தான் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.பின்னர் Majd மற்றும் அவர் பிள்ளைகளையும் கொடூர வைரஸ் தாக்கியுள்ளது. இந்த
 சூழலில் தான் Majd சிகிச்சை பலனின்றி 
உயிரிழந்தார்.அவர் குடும்ப நண்பர் கூறுகையில், கனடாவை Majd மிகவும் நேசித்தார், அவர் மரணம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கனடாவில் தனது 
குடும்பத்தாருக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை ஏற்படுத்த 
அவர் நினைத்தார் என கூறினார்.Majd குடும்பத்தாரின் நலனுக்காக தற்போது வரை $20,000 நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் Majdன் கனவை நிறைவேற்றும் நோக்கில் அவர் குடும்பம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக 
தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.