திங்கள், 26 அக்டோபர், 2020

மனோவும் கூட்டணியும் துமிந்தவுக்கு மன்னிப்பு கோரும் மனுவில் கையெழுத்து

பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரன் படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான முன்னாள் எம்பி துமிந்த சில்வாவை
 பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கோரும் அரச தரப்பு எம்பிகளின் மனுவில் மனோ கணேசன் எம்பி மற்றும் அவரது 
கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
அரச தரப்பின் இந்த மனுவில அரச எம்பிகளான
 சுரேன் ராகவன், கெஹெலிய ரம்புக்வெல, 
வீரகுமார திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சிலர் கையெழுத்திடாத நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது.
இது குறித்து மனோ கணேசன் ஆங்கில ஊடகத்திற்கு
 வழங்கிய அறிக்கையில்,
“முன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவர், மது போதையில் இருந்துள்ளார். தற்போது, 
அவர் சுமார் ஐந்து வருடங்களை சிறையில் கழித்துள்ளார். அவர் மீது சட்டத்தை மீறிய வேறு குற்றங்கள் இருப்பின், சட்ட ஒழுங்கு அதிகாரிகள் அவர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடரலாம்.
நான், அரசியல்வாதி என்பதை விட ஒரு மனித உரிமை செயற்பாட்டாளன். வெள்ளை வான் கடத்தல், சட்டத்துக்கு 
அப்பாலான கடத்தல் கொலை, கப்பம், அடாத்தான கைது ஆகியவற்றுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நான் போராடியுள்ளேன். எனவே எனக்கு மனித உரிமை தொடர்பில் கற்பிதம் தேவையில்லை.
இளையோர் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட கூடாது. 
குற்ற செயல்களில் ஈடுபடும், இளையோருக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது என் பொதுவான 
கொள்கை நிலைப்பாடு.
 துமிந்த சில்வா, ஏற்கனவே ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன். அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என
 நான் எண்ணுகிறேன்.
அதேபோல், அரசியல் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள். இளைஞர்களாக இருக்கும்போது கைது செய்யப்பட்டு, தம் வாழ்நாளில் கணிசமான காலத்தை 
இவர்கள் சிறையில் கழித்துள்ளார்கள். அவர்களில், தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும், விசாரணை கைதிகளும், வழக்குகளை எதிர்நோக்குகின்றவர்களும் உள்ளார்கள். 
அவர்களும் சீர்திருந்தி, புனர்வாழ்வு பெற்று, சமூகத்துக்குள் சென்று, தம் குடும்பங்களுடன், மனைவி மக்களுடன் வாழ
 விடுதலை வழங்கப்பட வேண்டும் எனவும் 
கோருகிறேன்.என்றுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.