புதன், 24 நவம்பர், 2021

நாட்டில் மேல் மாகாண மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில்.22-11-2021.அன்றைய தினம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக 382 பயணிகள் பஸ்கள் மற்றும் 89 குளிரூட்டப்பட்ட பஸ்களின் சாரதிகளுக்கு பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.அதேநேரம் 573 வர்த்தக நிலைய நடத்துனர்களும் எச்சரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது...
மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை ஆராய்வதற்காக, நேற்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அங்கு விசேட பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 435 பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதன்போது 987 பயணிகள் பஸ்கள், 223 குளிரூட்டப்பட்ட பஸ்கள், 1,336 சில்லறை விற்பனை நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதேவேளை கொரோனா தொற்றுநோய்க்கு முகங்கொடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் – பொது சேவை சாரதிகள் மற்றும் ஊழியர்கள் – வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் உட்பட பொது மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.