புதன், 12 ஜூலை, 2017

வாகன சார­தி­க­ளுக்­கான அப­ராத திருத்த அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிப்பு

வாகன சார­தி­க­ளுக்­கான அப­ராத திருத்தம் தொடர்­பாக ஆராய நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­ன­விடம்
 கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 
ஜனா­தி­பதி செய­லக அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை இந்த அறிக் கையை ஜனா­தி­ப­தி­யிடம் போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் நிஹால் சோம­வீர  கைய­ளித்தார்.
வாகன சார­தி­களின் தவ­று­க­ளுக்­காக விதிக்­கப்­படும் அப­ரா­தத்தை அதி­க­ரிக்க கடந்த வரவு–செலவுத் திட்­டத்தில் யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.  இத­னை­ய­டுத்து போக்­கு­வ­ரத்துத்துறையைச் சார்ந்­த­ சிலர் இதற்கு பலத்த எதிர்ப்பு வெளியி­ட்­ட­மையால் அது குறித்து ஆராய்ந்து, புதிய அப­ராதப்பத்­தி­ரத்தை தயா­ரிக்க ஜனா­தி­ப­தியால் குழு­வொன்று
 நிய­மிக்­கப்­பட்­டது.
நிதி மற்றும் போக்­கு­வ­ரத்து ஆகிய அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள் மோட்டார் வாகன ஆணை­யாளர் நாயகம், வாகனப் பிரி­வுக்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்­ளிட்டோர் இக் குழுவில் 
உள்­ள­டங்­கு­கின்­றனர். 
இத­னடிப்­ப­டையில் குறித்த குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கையளிக்கப்பட்டது. இவ் அறிக்கை யினை அமைச்சரவையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிஹால் சோமவீர
 மேலும் தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.