ஞாயிறு, 16 அக்டோபர், 2016

யூனியன் கல்லூரி 200 ஆவது வருட கொண்டாட்டங்கள் ஆரம்பம்

யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நேற்றைய தினம் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடைகிறது. குறித்த விழாவானது நேற்றைய தினம் காலை 9 மணிக்கு அதிபர் ரீ.வரதன் தலைமையில் கல்லூரியின் சண்டேஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன்  
நடைபெற்றது
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை எஸ்.சேனாதிராஜா, சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் ரீ.தவராஜா, கௌரவ விருந்தினர்களாக
 வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன், வலிகாம வலய கல்விப்பணிப்பாளர் எஸ். சந்திரராஜா, தெல்லிப்பளை பிரதேசசெயலக திட்டமிடல் பிரிவின் உப தலைவர் என். ரதி, தெல்லிப்பளை பிரதேச செயலக கல்வித்துறை உத்தியோகஸ்தர் எம். ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து 
சிறப்பித்திருந்தனர்
அத்துடன் கல்லூரியின் "யூனியன்ஸ் 200 "எனும் ஆண்டு விழா சிறப்பு நூலானது  வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா அவர்களால் வெளியிட்டு வைக்கபட்டது. .குறித்த நிகழ்வின் இரண்டாவது நாள் கொண்டாட்டம் இன்றும் நடைபெற்று வருகின்றமை
 குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.